India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக காயிதே மில்லத் கூட்டரங்கில் இன்று (அக்டோபர் 14) மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்று சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
வேலூர் மாவட்டம் முழுவதும் காவல் ஆய்வாளர்களின் தலைமையிலான போலீசார் நேற்று நடத்திய சோதனையில் 4 லிட்டர் கள், 24 மது பாட்டில்கள், 700 கிராம் குட்கா, ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு 4 பேர் மீது மதுவிலக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இது போன்ற தொடர் குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் எச்சரித்துள்ளார்.
வேலூர் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று இரவு ரோந்து பணி செல்லும் காவல்துறை காவல் ஆய்வாளர் (சுபா) தலைமையில் இன்று இரவு ரோந்து பணி நடைபெற உள்ளது. இதில் வடக்கு காவல் நிலையம், தெற்கு காவல் நிலையம், சத்துவாச்சாரி, வேலூர் தாலுக்கா, விரிஞ்சிபுரம், பாகாயம், அரியூர், வேப்பங்குப்பம், பள்ளிகொண்டா, அணைக்கட்டு காவல் நிலையம் ஆகிய பகுதியில் இரவு ரோந்து பணி நடைபெற உள்ளது. எண்-9488642477
தமிழகத்தில் இன்று 28 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, வேலூர் மாவட்டத்தில் இரவு 7 மணி வரை இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது. உங்கள் பகுதியில் மழை பெய்ய வாய்ப்புள்ளதா என்பதை கமென்டில் தெரிவிக்கவும்.
வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழக 19வது பட்டமளிப்பு விழா இன்று (அக்டோபர் 13) நடந்தது. இந்த விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு பட்டங்களை வழங்கினார். இதில் உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன், இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவன இயக்குனர் துஷார் காந்தி பெஹரா, திருவள்ளுவர் பல்கலைக்கழக துணைவேந்தர் ஆறுமுகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
வேலூர் சேர்க்காடு பகுதியிலுள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் 19-ஆவது பட்டமளிப்பு விழா இன்று (அக். 13) காலை 11.30 மணிக்கு பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற உள்ளது. இந்த விழாவுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமை வகித்து மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்குகிறார். விழாவில், 86 பேர் முனைவர் பட்டம் உள்பட 28,417 மாணவ, மாணவிகள் பட்டங்கள் பெற உள்ளனர்.
வேலூர் மாவட்டம், குடியாத்தம் ஒன்றியம், சீவூர் கிராமத்தைச் சேர்ந்த வலுதூக்கும் வீரர் எம்.ஜெயமாருதி. இவர் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற காமன்வெல்த் ஜூனியர் வலுதூக்கும் போட்டியில் 83 கிலோ எடை பிரிவில் 4 தங்கப் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார். புதிய சாதனை படைத்து தாயகம் திரும்பும் இவருக்கு உறவினர்கள், நண்பர்கள் உற்சாக வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்து வருகின்றனர்.
ஒடுகத்தூர் பீஞ்சமந்தை வெள்ளாண்டப்பன் கோவில் அமைந்துள்ளது. நேற்று 4-வது சனிக்கிழமையன்று பக்தர்கள் சென்ற வேன் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 10-க்கும் மேற்பட்ட பக்தர்கள் காயமடைந்தனர். பொதுமக்கள் அவர்களை மீட்டு ஒடுகத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வேப்பங்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காட்பாடி காங்கேயநல்லூர் சாலையில் உள்ள வணிக வளாகத்தில் பாலியல் தொழில் நடப்பதாக காட்பாடி போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் ஆனந்தன் மற்றும் போலீசார் அங்கு சோதனை நடத்தினர். அங்கு விபச்சாரம் நடப்பது தெரியவந்தது. அதன்பேரில் அங்கிருந்த 3 இளம்பெண்களை மீட்டனர். விபச்சாரம் நடத்திய பச்சையப்பன், காசிம் ஆகிய 2 பேரை கைது செய்தனர் தலைமறைவான காட்பாடியை சேர்ந்த சரவணன் என்பவரை தேடிவருகின்றனர்.
பாமகவின் வேலூர் கிழக்கு மாவட்ட செயலாளராக பதவி வகித்தவர் கே.எல். இளவழகன். இவருக்கு மாநில பொறுப்பு வழங்கப்பட்டதால் அந்த பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு அதற்கு பதிலாக வேலூர் கிழக்கு மாவட்ட புதிய செயலாளராக ஜெகன் என்பவரை நியமனம் செய்து அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் உத்தரவிட்டுள்ளார். இவருக்கு கட்சியில் உள்ள பொறுப்பாளர்கள் முழு ஒத்துழைப்பு வழங்க அறிவுறுத்தியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.