Vellore

News May 10, 2024

34 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி

image

வேலூர் மாவட்டத்தில் 10-ஆம் வகுப்பு பொது தேர்வில் 242 பள்ளிகளிலிருந்து மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். இதில் 34 அரசு மற்றும் தனியார் பள்ளிகள் 100 சதவிகிதம் தேர்ச்சியை பெற்றுள்ளனர்.  மாணவர்களை காட்டிலும் மாணவியர்களே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர் என மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி இன்று (மே.10) தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

News May 10, 2024

வேலூர் கடைசி இடம்!

image

10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே.10) வெளியாகியுள்ளது. அதன்படி வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 77.66% ஆக பதிவாகியுள்ளது. இதில் மாணவர்கள் 69 சதவீதத்தில் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியர் 84.5 சதவீதத்தில் தேர்ச்சி அடைந்துள்ளனர். அரசு பள்ளிகளில் தேர்ச்சி அடிப்படையில் வேலூர் மாவட்டம் 38ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.

News May 10, 2024

வேலூர் தங்க கவச அலங்காரத்தில் செல்லியம்மன்

image

வேலூர் புதிய பஸ் நிலையம் அருகே இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஸ்ரீ செல்லியம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை முன்னிட்டு இன்று (மே 10) அம்மனுக்கு சிறப்பு தங்க கவச அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு கோயில் சார்பில் குங்குமம் பிரசாதமாக வழங்கப்பட்டது.

News May 10, 2024

10th RESULT: வேலூரில் 82.07% தேர்ச்சி!

image

தமிழ்நாட்டில் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே 10) வெளியாகியுள்ளது. அதன்படி வேலூர் மாவட்டத்தில் 82.07% தேர்ச்சி விகிதம் பதிவாகியுள்ளது. இதில் மாணவர்கள் 75.63% பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியர் 88.41% தேர்ச்சி அடைந்துள்ளனர். www.tnresults.nic.in, www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்கள் மூலம் தேர்வு முடிகளை அறிந்து கொள்ளலாம்.

News May 10, 2024

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு

image

தமிழகம் முழுவதும் பத்தாம் பொதுத்தேர்வு  (மார்ச் 26) தொடங்கி நடந்தது. வேலூர் மாவட்டத்தில் 103 தேர்வு மையங்களில் 9320 மாணவர்கள், 9350 மாணவிகள் என மொத்தம் 18670 பேர் தேர்வு எழுதினர். இந்நிலையில் இன்று மே (10) காலை 9: 30 மணியளவில் தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளது. மாணவர்கள் தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in 2024 என்ற இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம் என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

News May 10, 2024

வேலூர் மாவட்டம் முழுவதும் போலீசார் சோதனை

image

வேலூர் மாவட்டம் முழுவதும் நேற்று (மே 9) காவல் ஆய்வாளர்கள் தலைமையில் போலீசார் நடத்திய சோதனையில் 2 லிட்டர் கள்ளச்சாராயம், 57 மதுபாட்டில்கள், 20 கிலோ கஞ்சா ஆகியவற்றை பறிமுதல் செய்து ஒரே நாளில் 7 பேர் மீது மதுவிலக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் தெரிவித்துள்ளார். ‌

News May 10, 2024

வேலூர் உயர்கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சி

image

வேலூர் மாவட்டத்தில் பிளஸ் 2 முடித்த மாணவர்களின் உயர் கல்விக்கு வழிகாட்டும் கல்லூரி கனவு நிகழ்ச்சி வரும் 13ஆம் தேதி நடைபெறுவதாக வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார். இந்நிகழ்ச்சியில் குறைந்த பட்சம் 2000 க்கு அதிகமான மாணவ மாணவியர் பங்கேற்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ள முதன்மை கல்வி அலுவலரை கேட்டுக் கொண்டார்.

News May 9, 2024

ரயிலில் 20 கிலோ கஞ்சா கடத்திய மூன்று பேர் கைது

image

காட்பாடி வழியாக எர்ணாகுளம் செல்லும் ரயிலில் இன்று ( மே 9 ) கஞ்சா கடத்தப்படுவதாக வந்த ரகசிய தகவலின் அடிப்படையில் காட்பாடி ரயில்வே போலீசார் மற்றும் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல்துறையினர் மேற்கொண்ட சோதனையில் பயணிகள் பெட்டியில் 14 மூட்டைகளில் 20 கிலோ கஞ்சா கடத்தி செல்வது தெரியவந்து. கேரளாவை சேர்ந்த ஆகாஷ், மனோஜ் குமார், பிரதீஷ் ஆகிய மூன்று பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News May 9, 2024

வேலூரில் மீண்டும் சதம் அடித்த வெயில்

image

வேலூர் மாவட்டத்தில் இன்று (மே 9) வெயில் மீண்டும் சதம் அடித்தது 100°F வெயில் கொளுத்தியது. மேலும் வெயிலுடன் அனல் காற்றும் வீசுவதால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். பொதுமக்கள் வெயில் தாக்கத்தில் இருந்து தப்பிக்க குடைகள் பிடித்தபடியும், முகத்தை துணியால் மறைத்துக் கொண்டும் வெளியில் சென்று வருகின்றனர். நீர் சத்து நிறைந்த பழங்கள் மற்றும் ஜூஸ் மற்றும் மோர் வாங்கி பருகி வருகின்றனர்.

News May 9, 2024

வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோயில் சிறப்பு!

image

வேலூர் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள கோட்டையின் உள்ளே இக்கோயில் அமைந்துள்ளது. இந்தியாவிலேயே அகழியோடு கூடிய ஒரே கோட்டை வேலூர்க்கோட்டை மட்டுமே ஆகும். கோட்டையின் வடக்குப் பக்கத்தில் கோயில் அமைந்துள்ளது. ஏழு நிலைகளைக் கொண்ட ராஜகோபுரம் அமைந்துள்ளது. கல்வெட்டின் படி, ஜலகண்டேஸ்வரர் அந்நாளில் ஜ்வரகண்டேஸ்வரர் என்றழைக்கப்பட்டுள்ளார். மிகத்தொன்மைக் கோயிலான இதில் கலைநயமிக்க சிலைகள் ஏராளம் இருக்கின்றன.

error: Content is protected !!