Vellore

News January 3, 2026

வேலூர்: துணை ஜனாதிபதியை வரவேற்ற கலெக்டர்

image

வேலூர் மாவட்டம் ஸ்ரீபுரம் பொற்கோயிலுக்கு வருகைபுரிந்த இந்திய குடியரசு துணைத் தலைவர் .சி. பி. இராதாகிருஷ்ணனை, வேலூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலட்சுமி பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். இதில் மாநகராட்சி மேயர் சுஜாதா ஆனந்தகுமார் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

News January 3, 2026

வேலூர்: போஸ்ட் ஆபீஸில் ரூ.29,380 சம்பளம்! APPLY NOW

image

வேலூர் மாவட்ட மக்களே.., நமது இந்திய தபால் துறையின் கீழ் பல்வேறு காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் 2292 காலியிடங்கள் உள்ளன. 10th,+2, டிகிரி முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ. 29,380 வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க இங்கே<> கிளிக்<<>> பண்ணுங்க. உடனே அனைவருக்கும் SHARE!

News January 3, 2026

வேலூர்: நாட்டுக்கோழிகள் வளர்க்க 50% மானியம்!

image

வேலூர் மக்களே.. தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறை சார்பில் நாட்டு கோழி பண்ணை அமைக்க மானியம் வழங்கும் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ், நாட்டுக் கோழி வளர்ப்புப் பண்ணை அமைக்க மொத்த செலவில் 50% மானியம், 250 கோழிகள் இலவசமாக வழங்கப்படுகிறது. விருப்புள்ள நபர்கள், அருகில் இருக்கும் கால்நடை மருத்துவமனை அல்லது கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க!

News January 3, 2026

வேலூர் மாவட்டத்தில் 1300 போலீசார் பாதுகாப்பு

image

வேலூர் மாவட்டம் அரியூரில் உள்ள ஸ்ரீபுரம் பொற்கோயிலுக்கு இன்று (ஜனவரி 03) இந்திய துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் வருகை தர உள்ளார். இதையொட்டி வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் தலைமையில் 1300 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர் என மாவட்ட காவல் துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News January 3, 2026

வேலூர்: 8 கிராம் தங்கம், ரூ.50,000 பணத்துடன் திருமணம்

image

TN அரசு சாதி மறுப்பு திருமணங்களை ஊக்குவிக்க டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி கலப்பு திருமண திட்டத்தை செயல்படுத்துகிறது. இதன்படி, மணமக்கள் 10th முடித்திருந்தால் ரூ.25,000, 8 கி தங்கம், டிகிரி பெற்றிருந்தால் ரூ.50,000, 8 கி தங்கம் வழங்கப்படுகிறது. இதற்கு, BC,MBC/SC,ST & FC/BC,MBC முறையில் திருமணம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு சமூக நல அலுவலரை அணுகலாம். இந்த தகவலை உடனே ஷேர் பண்ணுங்க.

News January 3, 2026

வேலூரில் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு

image

வேலூர் புதிய பஸ் நிலையத்தில் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு வட்டார போக்குவரத்து அலுவலர் சுந்தர்ராஜன் தலைமை தாங்கினார். இதில் பஸ் டிரைவர்களுக்கும், கண்டக்டர்கள் மற்றும் பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினர். இதில் மோட்டார் வாகன ஆய்வாளர் ராஜ்குமார், போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் ரஜினி ஆகியோர் கலந்து கொண்டனர்.

News January 3, 2026

வேலூர் மாவட்டத்தில் 7 லட்சம் வேட்டி சேலைகள் விநியோகம்

image

பொங்கல் பண்டிகை முன்னிட்டு வேலூர் மாவட்டத்தில் 3 லட்சத்து 62 ஆயிரத்து 364 பேருக்கு வேட்டிகளும், 3 லட்சத்து 63 ஆயிரத்து 222 பேருக்கு சேலைகளும் என மொத்தம் 7 லட்சத்து 25 ஆயிரத்து 586 பேருக்கு வழங்கப்பட உள்ளது. தமிழ்நாடு அரசு தேதி அறிவித்த பின்னர் இலவச வேட்டி, சேலைகள் வினியோகம் செய்யும் பணி தொடங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

News January 3, 2026

வேலூர்: 12th படித்தால் ஆதாரில் வேலை ரெடி!

image

வேலூர் மக்களே ஆதார் துறையில் சூப்பர்வைசர், ஆபரேட்டர் பணிகளுக்கு 282 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 18 வயது நிரம்பிய 12வது படித்தவர்கள் ஜன.31க்குள் விண்ணப்பிக்க வேண்டும். மாதச் சம்பளம் ரூ.20,000 வழங்கப்படும். இப்பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் இங்கு <>கிளிக்<<>> செய்து தங்கள் சுய விவரங்கள், மாவட்டத்தை SELECT செய்ய வேண்டும். தேர்வு அடிப்படையில் ஆட்கள் பணியமர்த்தப்படுவர். SHARE பண்ணுங்க.

News January 3, 2026

வேலூர்: 2 பைக்குகள் நேருக்கு நேர் மோதல் – ஒருவர் பலி!

image

வேலூர்: தாராபடவேடு கிராமத்தைச் சோ்ந்தவா் ரவி (60). மெக்கானிக்கான இவர், பள்ளிக்குப்பம் – காட்பாடி சாலையில், நேற்று தனது வீட்டுக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தாா். அதேசமயம், காட்பாடியை சோ்ந்த திவாகா், தனது பைக்கில் பள்ளிக்குப்பம் நோக்கி சென்று கொண்டிருந்தாா். 2 பைக்குகளும் நேருக்கு நேர் மோதியதில் தூக்கி வீசப்பட்ட ரவி, படுகாயமடைந்து உயிரிழந்தார். இதுகுறித்த புகாரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News January 3, 2026

வேலூர்: திடீரெனப் பற்றி எரிந்த லாரியால் பரபரப்பு!

image

வேலூர் பழைய பைபாஸ் சாலையில் லாரிகள் பழுதுப் பார்க்கும் ஓர்க் ஷாப் உள்ளது. அங்கு, நிறுத்தப்பட்டிருந்த ஒரு லாரியில் நேற்று திடீரென தீப்பிடித்தது. தீ மளமளவென லாரி முழுவதும் பரவி எரிந்தது. அதில் லாரி முற்றிலும் எரிந்து நாசமானது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் அளித்த நிலையில், விரைந்து வந்து தீயை அணைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!