India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழிகத்தில் மீன்பிடி தடை காலம் அமலில் இருப்பதால் வேலூர் மீன் மார்க்கெட்டிற்கு இன்று (மே 12) மீன்களின் வரத்து குறைந்து காணப்பட்டது. இதனால் கடந்த வாரத்தை விட மீன்களின் விலையும் உயர்ந்தது. பெரிய வஞ்சரம் மீன் ரூ 1600, சிறிய வஞ்சரம் மீன் ரூ 800, இறால் ரூ 450 முதல் 600, கட்லா ரூ 160, நண்டு ரூ 400 முதல் 450, மத்தி ரூ 140 முதல் 160 என மீன்கள் விற்பனை செய்யப்பட்டது.
காட்பாடி பகுதியில் நடந்த திருட்டு சம்பவம் தொடர்பாக சேனூர் பகுதி சேர்ந்த சங்கர், அவினேஷ் மற்றும் 18 வயதுடைய வாலிபர் ஒருவர் என 3 பேரை போலீசார் நேற்று ( மே 11 )கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் முன்னாள் ராணுவ வீரர் உட்பட 4 வீடுகளில் 37 பவுன் நகை திருடியதையும் போலீசாரிடம் தெரிவித்தனர். இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 37 பவுன் நகைகளை போலீசார் மீட்டனர்.
குடியாத்தம் கங்கை அம்மன் கோயில் சிரசு திருவிழா வருகிற மே 14ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த திருவிழாவிற்கு உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள், பக்தர்கள் வருகை தருவார்கள். இதையொட்டி எந்தவித அசம்பாவிதங்களும் நடக்காமல் பாதுகாக்க 1000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் இன்று (மே 11) தெரிவித்துள்ளார்.
பெங்களூருவில் இருந்து தனியார் ஆம்னி பஸ் ஒன்று சென்னை நோக்கி 50 பயணிகளுடன் இன்று (மே 11) சென்று கொண்டிருந்தது. அப்போது வேலூர் மாவட்டம் பொய்கை அருகே வந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து கீழே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 4 பேர் காயமடைந்தனர். இதுகுறித்து விரிஞ்சிபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தலசீமியா நோயால் உலகளவில் ஆண்டுக்கு 50,000 முதல் ஒரு லட்சம் குழந்தைகள் உயிரிழப்பதாகவும், அதில் 80% இந்தியா போன்ற வளரும் நாடுகளில் நிகழ்வதாகவும் வேலூா் சிஎம்சி மருத்துவமனையின் இயக்குநா் விக்ரம் மேத்தியூஸ் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து, வேலூா் சிஎம்சி மருத்துவமனையின் இயக்குநா் விக்ரம் மேத்தியூஸ் வெளியிட்டுள்ளார்.
தமிழக முழுவதும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இதில் வேலூர் தொரப்பாடியில் ஆண்கள் மத்திய சிறையில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வை 8 கைதிகள் எழுதினர். இவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றனர். அதில் ஒரு கைதி அதிகபட்சமாக 500-க்கு 375 மதிப்பெண் பெற்றுள்ளார் என சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழ்நாடு அரசின் நான் முதல்வன் திட்டத்தின் ஒரு அங்கமான 12ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியரின் உயர்கல்விக்கு வழிகாட்டும் கல்லூரிக் கனவு என்னும் நிகழ்ச்சி வேலூர் மாவட்டத்தில் வருகின்ற மே 15ஆம் தேதி அன்று வேலூர் விஐடி பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற உள்ளது. இதில் மாணவ மாணவிகள் பங்கேற்று பயனடையுமாறு கலெக்டர் சுப்புலெட்சுமி இன்று (மே 11) தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
வேலுார் அடுக்கம்பாறை அரசு நர்சிங் பள்ளியில் உலக நர்சிங் தினவிழா நேற்று (மே 10) நடந்தது. இந்த விழாவிற்கு துணை கண்காணிப்பாளர் ரதிதிலகம் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக சுகாதாரத்துறை இணை இயக்குநர் பாலசந்தர் கலந்துகொண்டார். இதில் மருத்துவ கல்லூரி முதல்வர் (பொறுப்பு) ராஜவேலு, பள்ளி முதல்வர் உமா ராணி, துணை முதல்வர் ரகுபதி, குடியிருப்பு மருத்துவ அலுவலர் இன்பராஜ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
வேலூர் பலவன்சாத்து குப்பத்தை சேர்ந்தவர் சீனிவாசன், இவரது மகன் கார்த்தி (15) ஓட்டேரியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்துவந்தார். இவர் கடந்த 4ம் தேதி பைக்கில் விருபாட்சிபுரம் அருகே சென்றபோது அரசு பஸ் மோதியது. இதில் படுகாயமடைந்த கார்த்திக்கை சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். இது குறித்து பாகாயம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இந்நிலையில், தேர்வில் தேர்ச்சி பெறாத, தேர்வு எழுதாத மாணவர்களின் எதிர்கால நலன் கருதி 10ஆம் வகுப்பு துணைத் தேர்வை ஜூலை 2ஆம் தேதி நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இதில் தேர்ச்சி பெறுபவர்கள் இந்தக் கல்வியாண்டிலேயே உயர் கல்வி பயிலத் தகுதியுடையோராவார். இதற்கான தேர்வு அட்டவணை இன்று (மே 11) வெளியிடப்படும் எனத் தெரிகிறது.
Sorry, no posts matched your criteria.