India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் தேர்தல் பறக்கும் படையினர் இன்று (மார்ச் 19) அதிகாலை தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த மினிவேனை நிறுத்தி சோதனை செய்தனர். மாட்டுச் சந்தையில் மாடுகளை வாங்க வந்த வியாபாரியிடம் உரிய ஆவணம் இல்லாத 5 லட்சத்து 80 ஆயிரம் ரூபாயை பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அடுத்த குண்டலப்பள்ளி கிராமத்தில் நேற்றிரவு (மார்ச் 18) ஒற்றை காட்டு யானை அங்குள்ள விவசாய நிலத்தில் புகுந்து அங்கு பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்களைச் சேதப்படுத்திக் கொண்டிருந்தது. அதனைக் கண்ட விவசாயிகள் பட்டாசு வெடித்தும் மேளங்கள் அடித்தும் யானையை காட்டுப்பகுதிக்குள் விரட்டினர். மேலும் இதுகுறித்து வனத்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.
வேலூர் மாநகராட்சி சத்துவாச்சாரி வடக்கு பகுதி 19 வட்டம் சார்பில் பொது உறுப்பினர்கள் கூட்டம் நேற்று (மார்ச் 18) நடந்தது. இந்த கூட்டத்திற்கு பகுதி செயலாளர் சசிகுமார் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளராக வேலூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன் கலந்துகொண்டு பேசினார். மேலும் கழக செயற்குழு உறுப்பினர் ஏழுமலை முன்னோடிகள் கலந்துகொண்டனர்.
2024-மக்கள்வை தேர்தலில் 21 தொகுதிகளில் களமிறங்கும் திமுக, வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுகிறது. இந்த தொகுதிகளில் 2019 மக்களவை தேர்தலில், திமுக சார்பில் போட்டியிட்ட கதிர் ஆனந்த் வெற்றி பெற்று எம்பியாகினர். இந்நிலையில் தற்போது நடைபெறவுள்ள மக்களவை தேர்தலில் வேலூரில் மீண்டும் திமுகவே களமிறங்கவுள்ளது. இந்த முறையும் வேலூர் தொகுதியில் கதிர் ஆனந்த் போட்டியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வேலூர் மாவட்டம் முழுவதும் நேற்று (மார்ச் 17) காவல் ஆய்வாளர்கள் தலைமையில் போலீசார் ரெய்டு நடத்தினர். அதில் 94 லிட்டர் கள்ளச்சாராயம், 262 மது பாட்டில்கள் ஆகியவை பறிமுதல் செய்தனர். மேலும் இது தொடர்பாக ஒரே நாளில் 24 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.
காட்பாடி பகுதியை சேர்ந்தவர் முருகன்(42) இவர் நேற்று (மார்ச் 17) கோட்டை சுற்று சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பைக்கில் வந்த 3 வாலிபர்கள் கத்தியை காட்டி முருகனிடம் இருந்து 5 ஆயிரத்தை பறித்து கொண்டு தப்பி சென்றனர். இதுகுறித்து முருகன் வடக்கு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் விசாரணை நடத்திய போலீசார் பணம் பறித்து சென்ற தாமோதரன்(28), விக்னேஷ் (25), மணிகண்டன் (28) கைது செய்தனர்
வேலூர், பேரணாம்பட்டு மொரசப்பள்ளி கிராமத்தில் சட்டவிரோதமாக நாட்டு துப்பாக்கி வைத்திருந்த பிச்சாண்டி என்பவர் கைது செய்யப்பட்டார். மேலும், அவரிடமிருந்து நாட்டு துப்பாக்கி மற்றும் கரி மருந்து ஆகியவற்றை பறிமுதல் செய்த பேரணாம்பட்டு வனத்துறையினர் பிச்சாண்டியை பேரணாம்பட்டு காவல்துறையிடம் ஒப்படைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வனத்துறையினர் மற்றும் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆந்திர மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு கஞ்சா கடத்தி வரப்படுவதாக வந்த ரகசிய தகவலின் அடிப்படையில் இன்று குடியாத்தம் தாலுகா போலீசார் சைனகுண்டா சோதனை சாவடி அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது ஆந்திரத்தைச் சேர்ந்த மணிகண்டன் 2 கிலோ கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் மணிகண்டனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வேலூர் மாவட்டத்தில் நாடாளுமன்ற பொதுத்தேர்தல்-2024 நடத்தை விதிகள் நேற்று (மார்ச் 16) முதல் அமலுக்கு வந்துள்ளது. இதனால், கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெறாது என மாவட்ட தேர்தல் அலுவலர் தெரிவித்துள்ளார்.எனவே பொதுமக்கள் தங்களது மனுக்களை ஆட்சியர் அலுவலக தரைதள நுழைவாயிலில் மனுக்கள் பெட்டியில் செலுத்துமாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்ததையடுத்து வேலூர் அண்ணா சாலையில் நேற்று இரவு தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.கார் உள்ளிட்ட வாகனங்களில் பணம், பரிசு பொருட்கள் கடத்தப்படுகிறதா என தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் ஆய்வு. இதே போல் மாவட்டம் முழுவதும் உள்ள முக்கிய சாலையில் தேர்தல் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்
Sorry, no posts matched your criteria.