India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வேலூர் மாவட்டம் புதிய பஸ் நிலையம் அருகே இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஸ்ரீ செல்லியம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை முன்னிட்டு இன்று (மே 31) அம்மனுக்கு சிறப்பு தங்க கவச அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு கோயில் சார்பில் குங்குமம் பிரசாதமாக வழங்கப்பட்டது.
வேலூரில் நேற்று (மே.30) பெய்த மழைப்பொழிவின் விவரத்தை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, VCS மில் அம்முண்டி, விரிஞ்சிபுரம் AWS ஆகிய பகுதிகளில் 1 செ.மீட்டர் மழைப்பொழிவு பதிவானது. தமிழகத்தில் கோடையில் பெய்து வந்த மழை சமீபமாக குறைந்து வெப்பம் அதிகரித்து வருகிறது ஓரிரு இடங்களில் மட்டுமே குறைந்தளவு மழைப்பொழிவு பதிவாகி வருவது குறிப்பிடத்தக்கது.
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அடுத்த பெரிய தாமல்செருவு கிராமத்தில் வனப்பகுதியை ஒட்டி சிவன் கோயில் உள்ளது. இங்கு சரவணன் என்பவர் தனது நிலத்தில் கொட்டகை அமைத்து ஆடுகளை பராமரித்து வருகிறார். இந்நிலையில், நேற்றிரவு(மே 30) இவரது கொட்டகையில் திடீரென புகுந்த சிறுத்தை அங்கு அடைத்து வைக்கப்பட்டிருந்த ஆடு ஒன்றை கடித்துக் குதறியது. இச்சம்பவம் அப்பகுதி மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
தென்மேற்கு பருவமழை முன்னிட்டு வேலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்த அனைத்து துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் சுப்புலெட்சுமி தலைமையில் இன்று (மே 30) ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடந்தது. இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆர்த்தி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
வேலூர் மாவட்டத்தில் இன்று (மே.30) இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசான மழை பதிவாகக் கூடும் எனத் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கோடையில் பெய்து வந்த மழை சமீபமாக நின்று வெப்பம் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
ஒடுகத்தூரில் கெங்கையம்மன் கோவில் சிரசு திருவிழா நேற்று நடைபெற்றது. காலை 6 மணிக்கு தொடங்கிய ஊர்வலம் 11 மணிக்கு கோவிலை அடைந்தது. அங்கு ஊஞ்சலில் அம்மன் சிரசு வைத்து தாலாட்டு நிகழ்ச்சி நடந்தது. தொடந்து கோவிலை மூன்று முறை வலம் வந்து அம்மன் சிலை மீது சிரசு பொருத்தப்பட்டது. இதில், ஒடுகத்தூரை சுற்றியுள்ள பகுதி களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.
இந்திய அரசு நீர், நிலம், ஆகாயத்தில், சாகச விளையாட்டில் சாதனை புரிந்தவர்களுக்கு ‘டென்சிங் நார்கே’ விருது வழங்கி வருகிறது. இந்த நிலையில், 2024ஆம் ஆண்டுக்கான விருது வழங்கப்பட உள்ளது. விண்ணப்பங்கள் இதற்கான இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் மே 31ஆம் தேதிக்குள் இணையதளத்திலேயே பதிவேற்றம் செய்ய வேண்டும் என வேலூர் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
வேலூர் தோட்டப்பாளையம் காணாறு ஒரம் உள்ள குடிசை பகுதிகளில் வசிக்கும் மாணவர்கள், இளைஞர்கள் தவறான வழியில் செல்வதை தடுக்கும் விதமாக விளையாட்டின் மீது கவனத்தை திசை திருப்பி நல்வழிபடுத்தும் நோக்கில் சமூக ஆர்வலர் தினேஷ் சரவணன் புதிய கேரம் போர்டு வழங்கினார்.
கே.வி.குப்பம் அடுத்த வடுகன்குட்டையை சேர்ந்தவர் கணபதி முன்னாள் ராணுவ வீரர். இவரின் இன்னொரு வீடு காட்பாடியில் உள்ளது. இதையறிந்த மர்ம நபர்கள் வடுகன்குட்டையில் உள்ள அவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு பொருட்கள் ஏதும் இல்லாததால் கம்ப்யூட்டர், கண்காணிப்பு கேமரா உள்ளிட்ட பொருட்களை சேதப்படுத்தி சென்றனர். இதுகுறித்து லத்தேரி போலீசார் வழக்கு பதிந்து விசாரனை நடத்தி வருகின்றனர்.
வேலூர் பாராளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், கலெக்டருமான சுப்புலெட்சுமி இன்று (மே 29) தந்தை பெரியார் அரசு பொறியியல் கல்லூரியில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூமை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது அரசு அதிகாரிகள், காவல் துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Sorry, no posts matched your criteria.