Vellore

News January 7, 2026

வேலூர்: உங்க MLA சரி இல்லையா? பொறுக்காதீங்க!

image

வேலூர் மக்களே.. உங்கள் தொகுதி நிதியை MLA முறையாக பயன்படுத்தவில்லையா? உங்கள் பகுதியில் எந்த நல்லதும் செய்யவில்லையா? MLA மீது ஊழல், விதிமீறல் மற்றும் தவறான நடத்தை குறித்த புகார்களை தெரிவிக்கணுமா? ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை (DVAC)-ன் இந்த 044-22321090 நம்பருக்கு தயங்காமல் அழைத்து புகாரளிக்கலாம். அடுத்த நிமிடம் MLA-வுக்கு அழைப்பு பறக்கும்! இந்த தகவலை உடனே ஷேர் பண்ணுங்க.

News January 7, 2026

பொங்கல் பரிசு தொகுப்பு டோக்கன் 62% விநியோகம்

image

வேலூர் மாவட்டத்தில் மொத்தம் 4 லட்சத்து 55 ஆயிரத்து 498 பேருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது. இதற்கான டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை 2 லட்சத்து 82 ஆயிரத்து 408 பேருக்கு அதாவது 62 சதவீதம் பொங்கல் பரிசு தொகுப்பு டோக்கன் வழங்கப்பட்டு உள்ளது. இன்று (புதன்கிழமை) மாலைக்குள் அனைவருக்கும் டோக்கன் வழங்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

News January 7, 2026

வேலூர்: ஆற்று மணல் கடத்திய 2 பேர் கைது

image

வேலூர் வேலப்பாடி பூந்தோட்டம் பகுதியில் ஆற்று மணல் குவித்து வைத்திருப்பதாக தெற்கு போலீசாருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை செய்த போது மணல் குவித்து வைக்கப்பட்டிருந்தது. பின்னர் மணலை கடத்திய பார்த்திபன் (29), அனுத் (31) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் அங்கு குவித்து வைக்கப்பட்டிருந்த 6 யூனிட் மணலை போலீசார் பறிமுதல் செய்தனர்.

News January 7, 2026

வேலூர்: பொங்கல் பரிசு தொகுப்புக்கு கரும்புகள் வருகை

image

வேலூர் மாவட்டத்தில் உள்ள 4 லட்சத்து 55 ஆயிரத்து 498 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்புடன் ஒரு முழுக்கரும்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி வேலூர் மாவட்ட கூட்டுறவுத் துறை சார்பில் கடலூர் மாவட்டத்தில் இருந்து கரும்பு கொள்முதல் செய்யப்பட்டு வேலூர் மாவட்டத்துக்கு வரவழைக்கப்பட்டுள்ளது. இந்த கரும்புகள் ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்கும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது.

News January 7, 2026

வேலூர்: டிஜிட்டல் ஆதார் APPLY பண்ணுங்க..!!

image

வேலூர் மக்களே ஆதார் கார்டு உங்க போன்ல இல்லையா? இதனால இன்னும் முக்கியமான இடங்களில் ஆதாரை கைல கொண்டு போறீங்களா?? உங்க whatsappல ஆதார் பதிவிறக்கம் செய்ய எளிய வழி. DIGI LOCKERன் 9013151515 இந்த எண்ணை உங்க போன்ல சேமித்து HIன்னு குறுஞ்செய்தி அனுப்புங்க. அதில் டிஜிட்டல் ஆதார் -ஐ தேர்ந்தெடுத்து உங்க ஆதார் எண் பதிவு செய்தால் உங்க வாட்ஸ் ஆப்க்கே வந்துடும்.இந்த தகவலை மற்றவர்கள் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க..

News January 7, 2026

வேலூர்: டிஜிட்டல் ஆதார் APPLY பண்ணுங்க..!!

image

வேலூர் மக்களே ஆதார் கார்டு உங்க போன்ல இல்லையா? இதனால இன்னும் முக்கியமான இடங்களில் ஆதாரை கைல கொண்டு போறீங்களா?? உங்க whatsappல ஆதார் பதிவிறக்கம் செய்ய எளிய வழி. DIGI LOCKERன் 9013151515 இந்த எண்ணை உங்க போன்ல சேமித்து HIன்னு குறுஞ்செய்தி அனுப்புங்க. அதில் டிஜிட்டல் ஆதார் -ஐ தேர்ந்தெடுத்து உங்க ஆதார் எண் பதிவு செய்தால் உங்க வாட்ஸ் ஆப்க்கே வந்துடும்.இந்த தகவலை மற்றவர்கள் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க..

News January 7, 2026

வேலூர்: பாட்டிலுக்கு ரூ.10 கேட்டால்.., உடனே CALL!

image

வேலூர் மாவட்ட மக்களே.., உங்கள் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளில் பிளாக்கில் விற்பனை நடப்பது, குறிப்பிட்ட நேரத்தை தாண்டி விற்பனை, விலைக்கு மேல் ரூ.10 கேட்பது, மேலும் எந்த வித மோசடி செயல்கள் நடந்தாலும், அதுகுறித்து உடனடியாக 0416-2220893 என்ற லஞ்ச ஒழிப்புத் துறை எண்ணிற்கு புகார் அளிக்கலாம். உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News January 7, 2026

வேலூர்: பொங்கல் பரிசு ரூ.3000 – CHECK பண்ணுங்க!

image

வேலூர் மக்களே, பொங்கல் பரிசாக ரூ.3000, பச்சரிசி, வெல்லம் மற்றும் நீளகரும்பு தமிழக அரசு வழங்க உள்ளது. உங்களுக்கு ரூ.3000 இருக்கா இல்லையான்னு தெரியலையா, அதை தெரிஞ்சுக்க <>இங்கு க்ளிக் <<>>செய்து மேரா ரேஷன் செயலியில் ரேஷன் எண் மற்றும் ஆதார் எண் பதிவு பண்ணுங்க.. அதில் PHH, AAY வந்தால் ரூ.3000 கன்பார்ம். இந்த தகவலை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க..

News January 7, 2026

வேலூர்: மனைவி கைது – கணவனுக்கு வலை!

image

காட்பாடி போலீசார் வடுகங்குட்டை பகுதியில் உள்ள பெட்டிக்கடைகளில் நேற்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு பெட்டிக்கடையில் ஹான்ஸ், கூலிப் பான்மசாலா உள்ளிட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்வது தெரிய வந்தது. தொடர்ந்து, ரூ.12,000 மதிப்பிலான 2.6 கிலோ போதை பொருட்களை பறிமுதல் செய்ததுடன், விற்பனையாளர் சுமத்ராவை (44) போலீசார் கைது செய்தனர். மேலும், அவரது கணவர் கார்த்திகேயனை தேடி வருகின்றனர்.

News January 7, 2026

வேலூர்: அக்கா வீட்டிற்கு வந்த தம்பிக்கு நேர்ந்த சோகம்!

image

வேலூர்: ஆந்திராவைச் சேர்ந்த சீனிவாசலு (38), வேலூர் முள்ளிப்பாளையத்தில் உள்ள தனது அக்கா தமிழ் செல்வி வீட்டிற்கு வந்துள்ளார். இந்நிலையில் நேற்று அவர் அங்குள்ள கிணற்றில் குளிக்கச்சென்றுள்ளார். அப்போது, நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். அதைத்தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் அவரது உடலை மீட்டனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!