India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
2024 மக்களவைத் தேர்தல்:
திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த்- 5,68,692 வாக்குகள்
பாஜக – புதிய நீதிக் கட்சி வேட்பாளர் ஏ. சி. சண்முகம்- 3,25,990 வாக்குகள்
அதிமுக வேட்பாளர் பசுபதி- 1,17,682 வாக்குகள்
நாதக வேட்பாளர் மகேஸ் ஆனந்த்- 53,284 வாக்குகள்
வேலூர் மாவட்டத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வேலூர் உட்பட 15 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று(ஜூன் 5) மழை பெய்ய வாய்ப்புள்ளது. கோடை முடிந்தும் கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் வெப்பம் வாட்டி வதைத்து வரும் நிலையில், இந்த மழை குறித்த அறிவிப்பு சற்று நிம்மதியை தந்துள்ளது. சில இடங்களில் மழை பெய்து வருவதும் குறிப்பிட்டத்தக்கது.
மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளுக்கு நேற்று விடுமுறை அளிக்கப்பட்டது. இதனால் நேற்று முன்தினம் பல இடங்களில் டாஸ்மாக் கடைகளில் மதுப்பிரியர்கள் மது வகைகளை வாங்கிச்சென்றனர். இதனால் வேலூர் மாவட்டத்தில் ஒரேநாளில் ரூ.4.80 கோடிக்கு மது விற்பனை நடந்ததாக டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்தனர்.
வேலூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் கதிர்ஆனந்த் 5 லட்சத்து 68 ஆயிரத்து 692 வாக்குகள் பெற்றார். திமுக வேட்பாளரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் பசுபதி 1 லட்சத்து 17 ஆயிரத்து 682 வாக்குகள் மட்டுமே பெற்று டெபாசிட் இழந்துள்ளார். இவர் உட்பட வேலூரில் போட்டியிட்ட 29 வேட்பாளர்கள் டெபாசிட் இழந்துள்ளனர்.
தமிழகத்தில் திமுக கூட்டணி 40 இடங்களில் வெற்றி பெற்றதையடுத்து நேற்று வேலூரில் திமுக பொதுச்செயலாளரும் அமைச்சருமான துரைமுருகன் அளித்த பேட்டியில் திராவிட கொள்கையை அடிப்படையாக கொண்ட கட்சிகளுக்கு தான் இனி தமிழகத்தில் எதிர்காலம் என்பதை இந்த தேர்தல் நிரூபித்திருக்கிறது. இந்த தேர்தல் மூலம் பாஜகவிற்கு மக்கள் எச்சரிக்கை விடுத்திருக்கின்றனர் என்றார்.
வேலூரில் அமைச்சர் துரைமுருகன் நேற்று செய்தியாளரிடம் பேசியபோது, தமிழ்நாடு முழுவதும் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வெற்றிபெற காரணம் திமுக ஆட்சி மக்களை கவர்ந்திருக்கிறது. அண்ணாமலை தோற்றது மக்களின் விருப்பம். நாங்கள் எதுவும் சொல்ல விரும்பவில்லை என்றார். முன்பெல்லாம் அண்ணாமலை குறித்த கேள்வி எழுந்தால் துரைமுருகன் நழுவிச் சென்றுவிடுவார் என்பது கவனிக்கத்தக்கது.
வேலூர் மாவட்டம் முழுவதும் நேற்று (ஜூன் 4) காவல் ஆய்வாளர்களின் தலைமையிலான போலீசார் நடத்திய சோதனையில் 158 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் இது தொடர்பாக நேற்று ஒரே நாளில் 8 பேர் மீது மதுவிலக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தலில் வேலூர் பாராளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் கதிர் ஆனந்த் வெற்றி பெற்றார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த எம்பி கதிர் ஆனந்த், வேலூர் தொகுதியின் வெற்றி மு.க.ஸ்டாலினுக்கு கிடைத்த வெற்றி. அவர் செய்திருக்கக் கூடிய பணிகளுக்கு மக்கள் கொடுத்துள்ள அங்கீகாரம் இது. வெற்றியை அவர் பொற்பாதங்களில் சமர்ப்பிக்கிறேன் எனத் தெரிவித்தார்.
மக்களவைத் தேர்தலில் வேலூர் தொகுதியில் போட்டியிட்ட திமுக கூட்டணி கட்சி வேட்பாளர் கதிர் ஆனந்த் 215702 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதைத்தொடர்ந்து வெற்றி பெற்றதற்கான சான்றிதழை மாவட்ட தேர்தல் அலுவலரும் கலெக்டருமான சுபலட்சுமி வழங்கினார். நிகழ்ச்சியில் தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், எம்எல்ஏக்கள் நந்தகுமார், கார்த்திகேயன், அமுலு விஜயன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட கதிர் ஆனந்த் வாக்குகள் 2,15,838 வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் மொத்தம் 5,66, 276 வாக்குகள் பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக கூட்டணி வேட்பாளர் ஏசி சண்முகம் 3,50,661 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார், அதிமுக கூட்டணி வேட்பாளர் பசுபதி 1, 16, 863 வாக்குகள் பெற்றார்.
Sorry, no posts matched your criteria.