India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வேலூர் மாவட்டம், குடியாத்தம் தாலுக்கா, மோர்தானா அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதை தொடர்ந்து அக்ராவரம் ஏரிக்கு வரும் தண்ணீரை மலர் தூவி வரவேற்றார் குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமலு. இதில் விவசாயிகள், ஊர் பொதுமக்கள், திராவிட முன்னேற்ற கழகம் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உடன் இருந்தனர்.
வேலூர் மாவட்டத்தில் இன்று வெப்பம் அதிகரித்து காணப்படும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதிக வெப்ப அலை வீசகூடும் என்பதால் வேலூர் மாவட்டத்திற்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. எனவே, வேலூர் மாவட்ட மக்கள் நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெயிலில் செல்வதை தவிர்க்கமாறு அறுவுறுத்தப்பட்டுள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கையின்படி இன்று (ஏப்ரல் 24) வேலூரில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கக்கூடும் என்பதால் வேலூர் மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் நண்பகல் 12 மணி முதல் மாலை 3 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்குமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் சுப்புலெட்சுமி நேற்று (ஏப்ரல் 23) தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டம் முழுவதும் நேற்று (ஏப்ரல் 23) காவல் ஆய்வாளர்களின் தலைமையிலான போலீசார் நடத்திய சோதனையில் 78 மதுபாட்டில்கள், 30 லிட்டர் கள்ளச்சாராயம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக ஒரே நாளில் 8 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டம், வள்ளி மலை ஶ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நேற்று சித்ரா பவுர்ணமி முன்னிட்டு சிறப்பு பூஜை மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. பக்தர்கள் சுவாமி தரிசனம் மேற்கொண்டனர். இதில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார் முருகப்பெருமான் பக்தர் துரைசிங்காரம் . உடன் வேலூர் மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை அறங்காவலர் குழு தலைவர் அசோகன் ஆகியோர் இருந்தனர்.
வேலூர் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோட்டை ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் கோவிலில் உள்ள ஸ்ரீ துர்க்கை அம்மனுக்கு இன்று செவ்வாய்க்கிழமை சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் அம்மனுக்கு மலர் அலங்காரம் மற்றும் சிறப்பு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பக்தர்கள் சுவாமி தரிசனம் மேற்கொண்டனர். பின்னர் பக்தர்களுக்கு குங்குமம் பிரசாதம் வழங்கப்பட்டது.
வேலூர் அடுத்த பொய்கை மாட்டுச்சந்தை வாரந்தோறும் செவ்வாய்க்கிழமையன்று நடைபெறும். இந்த சந்தைக்கு உள்ளூர் மட்டுமின்றி திருப்பத்தூர், ராணிப்பேட்டை மற்றும் அண்டை மாநிலமான ஆந்திரா, கர்நாடகாவில் இருந்தும் கால்நடைகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. இந்நிலையில் இன்று (ஏப்ரல் 23) ஒரே நாளில் ரூ.80 லட்சத்திற்கும் அதிகமாக வர்த்தகம் நடந்தது என வியாபாரிகள் தெரிவித்தனர்.
தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் (ஏப்.19) முடிவடைந்த நிலையிலும் 13 மாவட்டங்களில் மட்டும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. அண்டை மாநிலங்களில் தேர்தல் நடைபெறும் நிலையில், அவற்றை ஒட்டியுள்ள எல்லையோர மாவட்டங்களில் மட்டும் பறக்கும் படைகளும், நிலைக்குழுக்களும் கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார். அதன்படி வேலூர் மாவட்டத்திலும் கண்காணிப்பு தொடர்கிறது.
வேலூர் மாவட்டத்தில் நேற்று (ஏப்ரல் 22) வெயில் அளவு 106.7°F ஆக பதிவானது. மேலும் வேலூரில் வெயிலுடன் அனல் காற்றும் வீசுவதால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். பொதுமக்கள் வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க வெளியில் செல்லும்போது குடை, தண்ணீர் மற்றும் நீர்ச்சத்து நிறைந்த பழங்களை கொண்டுசெல்ல மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
தமிழ்நாடு முழுவதும் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணிக்கு பிரச்சாரம் செய்ததற்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினுக்கு வேலூர் மாவட்ட திமுக செயலாளரும், அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினருமான ஏ.பி.நந்தகுமார் நேற்று (ஏப்ரல் 22) சென்னையில் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார்.
Sorry, no posts matched your criteria.