Vellore

News April 29, 2024

ஒரே நாளில் 26 வழக்குகள் பதிவு

image

வேலூர் மாவட்டம் முழுவதும் இன்று (ஏப்ரல் 28)  காவல் ஆய்வாளர்களின் தலைமையிலான போலீசார் நடத்திய சோதனையில் 137 மதுபாட்டில்கள், 160 லிட்டர் கள்ள சாராயம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும்  ஒரே நாளில் 26 பேர் மீது மதுவிலக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் தெரிவித்துள்ளார். ‌

News April 28, 2024

மீன்கள் வரத்து குறைவு: விலை உயர்வு

image

வேலூர் மீன் மார்க்கெட்டில் இன்று (ஏப்ரல் 28) மீன்களின் வரத்து குறைந்து காணப்பட்டது. இதனால் கடந்த வாரத்தை விட மீன்களின் விலையும் உயர்ந்தது. பெரிய வஞ்சரம் மீன் ரூ 1600, சிறிய வஞ்சரம் மீன் ரூ 800, இறால் ரூ 450 முதல் 600, கட்லா ரூ 160, நண்டு ரூ 400 முதல் 450, மத்தி ரூ 140 முதல் 160 என மீன்கள் விற்பனை செய்யப்பட்டது.

News April 28, 2024

வேலூரில் இன்று 106.0°F வெயில் பதிவானது

image

வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக 100 பாரன்ஹீட் வெயில் பதிவாகி வந்த நிலையில், இன்று (ஏப்ரல் 28)  அதிகபட்சமாக 106.0°F வெயில் பதிவானது. மேலும் வேலூரில் வெயிலுடன் அனல் காற்றும் வீசுவதால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். வெளியே செல்லும் பொதுமக்கள் தண்ணீர் மற்றும் முன்னெச்சரிக்கையாக செல்ல மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

News April 28, 2024

சமூக ஆர்வலர் அசத்தல்..!

image

வேலூர் மாவட்டம் , ஏரியூர் பகுதியில் கோடை வெயிலை சமாளிக்க மற்றும் பொதுமக்களின் தாகம் தீர்க்க சுமார் 500 பேருக்கு சமூக ஆர்வலர் தினேஷ் சரவணன் சார்பாக இன்று மதியம் மோர் வழங்கப்பட்டது. இதற்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

News April 28, 2024

வேலூர் எஸ்பி எச்சரிக்கை..!

image

வேலூர் மாவட்டத்தில் சமூக வலைதளங்களிலும், வாட்ஸ் அப் செயலி மூலமாகவும் பிரதம மந்திரியின் இலவச மடிக்கணினி வழங்கும் திட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என்று போலியான லிங்குடன் குறுஞ்செய்திகள் உலா வருகின்றன. இதை நம்பி லிங்க்கை கிளிக் செய்ய வேண்டாம் மேலும் சைபர் கிரைம் சம்பந்தமான புகார்களை www.cybercrime.gov. in என்ற இணையதளம் மூலம் தெரிவிக்கலாம் என்று எஸ்பி மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

News April 28, 2024

வேலூர்: அரசு பேருந்து மோதி தம்பதி படுகாயம்

image

காட்பாடியை சேர்ந்தவர் ராபர்ட். இவரது மனைவி அனிதா(36). அனிதா தற்போது நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார். இந்நிலையில் நேற்று இருவரும் பைக்கில் தாராபடவேடு அருகே வந்தபோது இவர்கள் மீது பின்னால் வந்த அரசு பஸ் மோதியது. இதில் இருவரும் படுகாயம் அடைந்தனர். காட்பாடி போலீசார் இருவரையும் மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இதில் அனிதா வயிற்றில் இருந்த குழந்தை இறந்து விட்டது என மருத்துவர்கள் தெரிவித்தனர்

News April 28, 2024

வேலூர் கலெக்டர் தகவல்

image

வேலூர் மாவட்டம் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் ஏப்ரல் 29-ம் தேதி முதல் தொடர்ந்து 30 நாட்களுக்கு நடைபெறவுள்ள ஆட்டுக் கொல்லி நோய் தடுப்பூசி முகாம்களில் ஆடு வளர்ப்போர் தங்கள் வெள்ளாடுகள் மற்றும் செம்மறி ஆடுகளுக்கு தவறாமல் ஆட்டுக் கொல்லி நோய் தடுப்பூசி போட்டுக்கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் சுப்புலெட்சுமி நேற்று (ஏப்ரல் 27) தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

News April 28, 2024

சிம்ம வாகனத்தில் கங்கையம்மன்

image

காட்பாடி, காங்கேயநல்லூர் பாலாற்றங்கரையில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ கங்கையம்மன் மிகவும் கருணை நிறைந்த தெய்வமாகும் . இந்த திருத்தலத்தில் 48 ஆம் ஆண்டு சித்திரை திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கங்கையம்மன் இரண்டாம் நாள் உற்சவம் மிக சிறப்பாக நேற்று இரவு நடைபெற்றது.இதில் கங்கையம்மன் சிம்ம வாகனத்தில் காட்சியளித்தார்.

News April 28, 2024

பறவைகளுக்கு தண்ணீர் வைத்த சமூக ஆர்வலர்

image

வேலூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் வெயில் அதிகரித்து வருவதால் மலைகளில் வாழும் பிற உயிரினங்களும் வெயிலின் கொடுமைக்கு ஆளாகின்றன. இதனால் சத்துவாச்சாரி மலைப்பகுதியில் சமூக ஆர்வலர் தினேஷ் சரவணன் மற்றும் அவரது நண்பர்களுடன் நேற்று (ஏப்ரல் 27) சிட்டு குருவிகள் மற்றும் பறவைகளுக்கு மரக்கிளைகளில் தண்ணீர் பாட்டில்களில் தண்ணீரை  வைத்தனர்.

News April 27, 2024

குடியாத்தம்: கிணற்றில் விழுந்த பசுமாடு மீட்பு

image

குடியாத்தம் அக்ரஹாரம் பகுதியை சேர்ந்தவர் லோகநாதன். இவருக்கு சொந்தமான மாடு இன்று (ஏப்ரல் 27) இவரது விவசாய கிணற்றில் கால் தவறி விழுந்தது. இதுகுறித்து குடியாத்தம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் மாட்டை உயிருடன் மீட்டு உரிமையாளரிடம்  ஒப்படைத்தனர்.

error: Content is protected !!