India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நாளுக்கு நாள் குடும்பத்தில் பெண்களுக்கு எதிராக வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், அதனை தடுக்க அரசு சார்பாக பல்வேறு சேவைகள், நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதுபடி, வேலூர் மாவட்ட பெண்களுக்கு ஏதேனும் குடும்ப வன்முறை நேர்ந்தால், உடனே மாவட்ட குடும்ப வன்முறை தடுப்புச் சட்ட பாதுகாப்பு அலுவலர் எண்ணான 9042144504-ஐ அழைத்து புகார் அளிக்கலாம். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

செங்கல்பட்டு காவல் நிலையத்தில் 2 கொலை, 25-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ள பிரபல ரவுடி அமலராஜ், 2026 ஜனவரி 13 இரவு வேலூர் காட்பாடி காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தார். மது போதையில் இருந்த அவர், தன்னை ஒரு கும்பல் கொலை செய்ய வருவதாகக் கூறி சரணடைந்தார். பின்னர், தகவலறிந்த செங்கல்பட்டு போலீசார் விரைந்து வந்து, அமலராஜை கைது செய்து அழைத்துச் சென்றனர்.

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு வன சரகம் சாரங்கல் வன பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த பேரணாம்பட்டு வனத்துறையினர் யானை தந்தங்களை பதுக்கி வைத்து விற்பனை செய்ய முயன்ற மணி, சின்னத்தம்பி, ஆறுச்சாமி ஆகிய 3 பேரையும் நேற்று ஜன.14 கைது செய்தனர். தொடர்ந்து, பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2 யானை தந்தங்களை பறிமுதல் செய்த வனத்துறையினர், இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வேலூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்கள் குடியாத்தம், காட்பாடி, கே வி குப்பம், மேல்பட்டி, பேரணாம்பட்டு, அணைக்கட்டு, பள்ளிகொண்டா இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்புக்காக வேலூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் இரவு ரோந்து பணி செய்து வருகின்றன. அதன்படி இன்று (ஜன-14) இரவு ரோந்து பணி விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் வேலைக்குச் செல்லும் பெண்கள் இதை பயன்படுத்திக் கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க.

வேலூர் மக்களே தை பிறந்தாள் வழிபிறக்கும் என்பதால் புதிய மாற்றத்திற்காக காத்திருப்பவர்கள் இந்த நன்னாளில்
*ஸ்ரீபுரம் தங்கக் கோயில்
*ஜலகண்டேஸ்வரர் கோயில்
*ரத்னகிரி முருகன் கோயில்
*வல்லிமலை முருகன் கோயில்
மேலே உள்ள தலங்களுக்கு சென்று வழிப்படுவதன் மூலம் உங்கள் வாழ்க்கையில் புதிய மாற்றம் வரும். இந்த தகவலை உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க

வேலூர் மக்களே தை பிறந்தாள் வழிபிறக்கும் என்பதால் புதிய மாற்றத்திற்காக காத்திருப்பவர்கள் இந்த நன்னாளில்
*ஸ்ரீபுரம் தங்கக் கோயில்
*ஜலகண்டேஸ்வரர் கோயில்
*ரத்னகிரி முருகன் கோயில்
*வல்லிமலை முருகன் கோயில்
மேலே உள்ள தலங்களுக்கு சென்று வழிப்படுவதன் மூலம் உங்கள் வாழ்க்கையில் புதிய மாற்றம் வரும். இந்த தகவலை உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க

வேலூர் மக்களே.. போலீஸ், தாசில்தார், MLA, கவுன்சிலர் போன்ற அரசு தொடர்புடைய ஊழியர்கள் தங்களது வேலைகளை முறையாக செய்யாமல் உங்களிடம் லஞ்சம் கேட்டால் கவலை வேண்டாம். உடனே வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரியிடம் (0416-2220893) புகாரளிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை தெரிந்தவர்களுக்கு SHARE பண்ணுங்க!

வேலூர் மக்களே.., பீர்க்கன், பாகல், புடலை உள்ளிட்ட கொடி வகை காய்கறிகளுக்கு பந்தல் அமைக்க செலவு அதிகம் என்ற கவலை இனி வேண்டாம். தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ், நிரந்தர பந்தல் அமைத்து கொடிவகை காய்கறிகள் / பழங்களை சாகுபடி செய்ய ரூ.3 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் பயனடைய விரும்பும் பயனாளிகள் அருகில் இருக்கும் தோட்டக்கலைத்துறை அலுவலகத்தை அணுகலாம். SHARE பண்ணுங்க!

வேலூர் மாவட்டம் தொரப்பாடியில் மத்திய சிறையில் பொங்கல் பண்டிகையை குடும்பத்துடன் கொண்டாட பரோல் கேட்டு 30-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்து இருந்தனர். அவர்களின் விண்ணப்பங்கள் சிறைத்துறை உயர் அதிகாரிகளால் பரிசீலிக்கப்பட்டது. இதில் நேற்று மதியம் வரை 16 கைதிகளுக்கு பரோல் வழங்கப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து அவர்கள் சிறையில் இருந்து சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் உத்தரவின் பேரில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வேலூர் மாவட்டம் முழுவதும் 800 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில், இன்று (ஜன-14) முதல் 17-ம் தேதி வரை இந்த பாதுகாப்பு அளிக்கப்படும் என மாவட்ட காவல்துறையின் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.