Vellore

News January 16, 2026

வேலூரில்: மின்சாரம் பாய்ந்து தொழிலாளி துடிதுடித்து பலி!

image

கே.வி.குப்பம் அடுத்த காவனூர் ரயில்வே ஸ்டேஷனில் சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இதில் மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த அகோர் மண்டி (60) என்பவர் எலக்ட்ரீசியன் வேலை செய்து வந்தார். இந்நிலையில் நேற்று எதிர்பாராத விதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்து பலியானார். இதுகுறித்து தகவலறிந்த கே.வி.குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

News January 16, 2026

வேலூர்: பெண்ணிடம் நூதன முறையில் மோசடி!

image

ரங்காபுரத்தைச் சோ்ந்த 43 வயது பெண்ணின் வாட்ஸ் ஆப் எண்ணுக்கு, ஆன்லைன் பங்கு வா்த்தக முதலீட்டில் அதிக லாபம் ஈட்டலாம் என ஒரு லிங்க் வந்துள்ளது. அதன்மூலம் ஒரு செயலியை பதிவிறக்கம் செய்து ஒரு சிறிய தொகையை முதலீடு செய்துள்ளார். அதில் அதிக லாபம் கிடைத்ததால், தொடர்ந்து ரூ.61,38,745 பணத்தை முதலீடு செய்துள்ளார். ஆனால் இந்த பணம் திரும்ப கிடைக்காத நிலையில் மாவட்ட சைபா் குற்றப்பிரிவில் புகாா் அளித்துள்ளார்.

News January 15, 2026

வேலூர்: காவல்துறை இரவு ரோந்து பணி விவரம் வெளியீடு

image

வேலூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்கள் குடியாத்தம், காட்பாடி, கே வி குப்பம், மேல்பட்டி, பேரணாம்பட்டு, அணைக்கட்டு, பள்ளிகொண்டா இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்புக்காக வேலூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் இரவு ரோந்து பணி செய்து வருகின்றன. அதன்படி இன்று (ஜன-15) இரவு ரோந்து பணி விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் வேலைக்குச் செல்லும் பெண்கள் இதை பயன்படுத்திக் கொள்ளலாம். ஷேர் செய்யவும்.

News January 15, 2026

வேலூர்: ரோடு சரியில்லையா? App-ல் புகாரளிக்கலாம்!

image

வேலூர் மக்களே உங்கள் பகுதியில் உள்ள சாலைகளில் பள்ளமாகவும், பராமரிப்பின்றியும் இருக்கிறதா? யாரிடம் புகார் கொடுப்பது என்று தெரியவில்லையா? அப்ப இத பண்ணுங்க! அந்த சாலையைப் புகைப்படம் எடுத்து “<>நம்ம சாலை<<>>” செயலியை பதிவிறக்கம் செய்து புகார் அளிக்கலாம். மாவட்ட சாலைகள் 72 மணி நேரத்திலும், மாநில நெடுஞ்சாலைகள் 24 மணி நேரத்திலும் சரி செய்யப்படும் எனக் கூறப்படுகிறது. இதை மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க.

News January 15, 2026

வேலூர்: பொங்கலுக்கு பொருட்கள் வாங்குவோர் கவனத்திற்கு!

image

பொங்கல் பண்டிகையையொட்டி பொதுமக்கள் கடைகளில் பொருட்கள் வாங்கி வருகின்றனர். வாங்கிய பொருட்களை கடை உரிமையாளர் மாற்றி தரவோ, பணத்தை திருப்பி தரவோ மறுத்தால் நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் புகார் அளிக்கலாம். 15 நாட்களுக்குள் சேதமின்றி இருந்தால் மாற்றம் அல்லது பணம் திரும்ப வழங்க வேண்டும். விவரங்களுக்கு மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு அலுவலரை 044-28589055ல் தொடர்பு கொள்ளலாம்.

News January 15, 2026

வேலூர்: லிங்க்கை கிளிக் செய்த நபர்.. ரூ.60.லட்சம் அபேஸ்!

image

வேலூர் ரங்காபுரத்தைச் சேர்ந்த 43 வயது பெண் ஒருவருக்கு வாட்ஸ்அப்பில் மர்மமான இணைய லிங்க் ஒன்று வந்துள்ளது. அதை க்ளிக் செய்த அவர், அதில் வந்த ஆசை வார்த்தைகளை நம்பி ரூ.60.88 லட்சம் பணத்தை முதலீடு செய்தார். பின் அந்த பெண் அவர்களை தொடர்பு கொள்ள முயற்சிசெய்தபோது சரியான தகவல்கள் கிடைக்கவில்லை. அதன் பின்னரே அந்த பெண் வேலூர் மாவட்ட சைபர் குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.

News January 15, 2026

வேலூர்: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

image

1.முதலில் <>cmcell.tn.gov.in <<>>என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள். 2.பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும். 3.இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள். 4.பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். SHARE செய்யுங்க.

News January 15, 2026

வேலூர் மக்களே.. இனி டிரைவிங் கிளாஸ் இலவசம்!

image

வேலூரில் வசிப்பவர்கள், தமிழக அரசின் ‘TN skils’ திட்டத்தின் கீழ் வழங்கப்படும் இலவச இரு மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டுநர் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம். தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் (TNSDC) மூலம் வழங்கப்படும் இந்த பயிற்சிக்கு இங்கே <>கிளிக் <<>>செய்து இணையதளத்தில் பதிவு செய்யலாம். இது பொதுமக்களுக்கு வழங்கப்படும் ஒரு வாய்ப்பாகும். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க!

News January 15, 2026

வேலூர்: பொங்கலன்று மின் தடையா..? CLICK HERE

image

பொங்கல் பண்டிகை கொண்டாட்டத்தின் போது தடையற்ற மின்சாரம் வழங்க வேலூர் மின்சார வாரியம் உறுதி பூண்டுள்ளது. ஒருவேளை மின் தடை ஏற்பட்டால் லைன்மேனைத் தேடி நீங்கள் அலைய வேண்டாம். 94987 94987 என்ற எண்ணிற்கு அழைத்து உங்கள் மின் இணைப்பு எண்ணைக் கூறினால், அடுத்த 5 நிமிடங்களில் லைன்மேன் உங்கள் பிரச்னையை சரிசெய்வார். பொங்கல் ஒளிமயமாக அமைய மற்றவர்களுக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்க!

News January 15, 2026

வேலூர்: ரேஷன் ஊழியர்கள் மீது புகார் செய்வது எப்படி?

image

ரேஷன் கடைகளில் பொருட்களை சரியாக வழங்காமல் இருப்பது, தேவையான பொருட்களுக்கு பதிலாக மற்ற பொருட்களை கட்டாயப்படுத்தி வாங்க சொல்வது போன்ற செயல்களில் ரேஷன் கடை ஊழியர்கள் ஈடுபட்டால் 1800 425 5901 என்ற TOLL FREE எண் (அ) வேலூர் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவகத்தில் புகார் செய்யலாம். உங்க நண்பர்களுக்கும் ஷேர் பண்ணி அவங்களுக்கும் தெரியப்படுத்துங்க.

error: Content is protected !!