India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
காட்பாடி அருகே ராமநாதபுரம் பகுதியில் உள்ள ஏரியில் இன்று ராஜா (10) மற்றும் ஸ்ரீசாந்த் (8) என்ற அண்ணன், தம்பி இருவரும் ஏரியில் மண் எடுக்கப்பட்ட பள்ளத்தில் தேங்கியிருந்த மழைநீரில் குளிக்க சென்ற போது எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தனர். ஒரே நேரத்தில் சகோதரர்கள் நீரில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. மேலும் இதுகுறித்து திருவலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
வேலூர் மாவட்ட திமுக அவசர செயற்குழு கூட்டம் நாளை (ஜூலை 14) மாலை 5 மணி அளவில் திமுக அலுவலகத்தில் நடக்கிறது. இது தொடர்பாக மாவட்ட செயலாளர் ஏ.பி.நந்தகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக கட்சியின் ஆக்கபணிகள் தொடர்பாக விவாதிக்க வேலூர் மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் அவை தலைவர் முகமதுசகி தலைமையில் நடைபெறுகிறது. எனது அனைத்து திமுக நிர்வாகிகள் தவறாமல் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்.
வேலூர் மாவட்டத்தை சேர்ந்த படித்த வேலை தேடும் இளைஞர்கள் ஜூலை 20 ஆம்தேதி வேலூர் டிகேஎம் மகளிர் கல்லூரியில் நடைபெறும் தனியார்துறை வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம். www. tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்களை முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் சுப்புலெட்சுமி தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இன்று காலை 9.30 மணிவரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேற்கு திசையின் வேகமாறுபாடு காரணமாக லேசானது முதல் மிதமான வரை மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. எனவே வெளியே செல்லும் பொதுமக்கள் அதற்கேற்றவாறு முன்னெச்சரிக்கையுடன் இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது. இந்த மழையால் சில இடங்களில் மழைநீர் தேங்கி போக்குவரத்தும் பாதிக்கப்படலாம்.
வேலூர் மாவட்டம் முழுவதும் காவல் ஆய்வாளர்களின் தலைமையிலான போலீசார் இன்று (ஜூலை 12) நடத்திய சோதனையில் 10 லிட்டர் கள்ளச்சாராயம், 7 லிட்டர் கள்ளச்சாராய ஊரல்கள், 51 மதுபாட்டில்கள் மற்றும் 200 கிராம் குட்கா ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு ஒரே நாளில் 14 பேர் மீது மதுவிலக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.
வேலூர்-காட்பாடி சாலையில் இன்று மாலை பெய்த மழையின் காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக விருதம்பட்டு பகுதியில் இருந்து காட்பாடி ரயில் நிலையம் வரை வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நிற்கின்றன. வழக்கமாக இந்த சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும் நிலையில் மழையின் காரணமாக கூடுதலாக நெரிசல் ஏற்பட்டிருப்பதால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.
வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் படிப்படியாக மீண்டும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இன்று (ஜூலை 12) 102.7 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவானது. பகல் நேரத்தில் வெயிலுடன் சேர்ந்து அனல் காற்று வீசியதால் பொதுமக்கள் அவதி அடைந்தனர். ஆனால் தற்போது மழை மேகங்கள் சூழ்ந்து குளிர்ந்த காற்று வீசி வருகிறது.
வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகாவிலும் பொது விநியோகத்திட்ட சிறப்பு குறைதீர்வு முகாம் நாளை (ஜூலை 13) நடைபெறவுள்ளது. இம்முகாமில் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்குதல், புதிய குடும்ப அட்டைக்கு மனு செய்தல், கைப்பேசி எண் பதிவு செய்தல் ஆகியவைகள் மேற்கொள்ளப்படும். எனவே பொதுமக்கள் முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கலெக்டர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஒருங்கிணைந்த குடிமை பணி தேர்வு தொகுதி -1 ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் சுப்புலெட்சுமி தலைமையில் இன்று (ஜூலை 12) நடந்தது. இந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் முத்தையா, மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை நல அலுவலர் ராமச்சந்திரன் உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
வேலூர் மாவட்டம் காட்பாடி அக்சிலியம் மகளிர் கலைக் கல்லூரி கூட்டரங்கத்தில் பேரவை தொடக்க விழாவில் தமிழ்த்துறை எழுதிய “பசுமைப் பெண்கள்” என்னும் புத்தகத்தின் முதல் பிரதியை மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி வெளியிட கல்லூரிச் செயலர் மேரி, ஜோஸ்பின் ராணி ஆகியோர் பெற்று கொண்டனர். இந்நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் அமலா வளர்மதி, உதவிப்பேராசிரியர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Sorry, no posts matched your criteria.