Vellore

News July 15, 2024

வேலூர்: காலை உணவு திட்டம் இன்று தொடக்கம்

image

வேலூர் மாவட்டத்தில் 70 அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் 2,907 மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு இன்று (ஜூலை 15) முதல் வழங்கப்பட உள்ளது. இந்த திட்டத்தின் மூலம் 1 முதல் 5ம் வகுப்பு வரை படிக்கும் 1,451 மாணவர்கள், 1,456 மாணவிகள் என்று மொத்தம் 2,907 பேர் பயன்பெற உள்ளனர். அனைத்து பள்ளி நாட்களிலும் மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்பட உள்ளது.

News July 14, 2024

வேலூர்: ஒரே நாளில் 15 பேர் மீது வழக்கு

image

வேலூர் மாவட்டம் முழுவதும் காவல் ஆய்வாளர்களின் தலைமையிலான போலீசார் இன்று (ஜூலை 14) நடத்திய சோதனையில் 5 லிட்டர் கள்ளச்சாராயம், 200 லிட்டர் கள்ளச்சாராய ஊரல்கள், 3 லிட்டர் கள், 15 மதுபாட்டில்கள், 250 கிராம் குட்கா ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு  15 பேர் மீது மதுவிலக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் தெரிவித்துள்ளார்

News July 14, 2024

வேலூரில் நாளை முதல் விரிவாக்கம்

image

தமிழக அரசின் காலை சிற்றுண்டி திட்டத்தில் வேலுார் மாவட்டத்தில் ஏற்கனவே 658 அரசு தொடக்கப்பள்ளிகளில் படிக்கும் 36 ஆயிரத்து 996 குழந்தைகள் பயன்பெற்று வருகின்றனர். இப்போது நாளை (ஜூலை 15) முதல் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த குழந்தைகளும் பயன்பெற உள்ளனர். அதன்படி வேலூர் மாவட்டத்தில் மொத்தம் 2907 பேர் இந்த திட்டத்தின் மூலமாக பயன்பெற உள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

News July 14, 2024

வேலூர் மாவட்ட எஸ்பி எச்சரிக்கை

image

வேலூர் மாவட்டம் முழுவதும் காவல் ஆய்வாளர்களின் தலைமையிலான போலீசார் இன்று (ஜூலை 13) நடத்திய சோதனையில் 5 லிட்டர் கள்ளச்சாராயம், 2 லிட்டர் கள், 68 மதுபாட்டில்கள், 140 கிராம் குட்கா ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு 20 பேர் மீது மதுவிலக்கு வழக்குகள் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இத்தகைய செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்பி மணிவண்ணன் எச்சரித்துள்ளார்.

News July 13, 2024

வேலூர்: குரூப் 1 தேர்வில் 1,590 பேர் ஆப்சென்ட்

image

வேலூர் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு (குரூப் 1) இன்று (ஜூலை 13) மாவட்டம் முழுவதும் 16 மையங்களில் 4,659 தேர்வர்கள் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தனர். அதில் 3,069 பேர் (66%) இன்று தேர்வு எழுதினார். 1,590 பேர் (34%) தேர்வு எழுத வரவில்லை என வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

News July 13, 2024

ஏரியில் மூழ்கி அண்ணன், தம்பி உயிரிழப்பு

image

காட்பாடி அருகே ராமநாதபுரம் பகுதியில் உள்ள ஏரியில் இன்று ராஜா (10) மற்றும் ஸ்ரீசாந்த் (8) என்ற அண்ணன், தம்பி இருவரும் ஏரியில் மண் எடுக்கப்பட்ட பள்ளத்தில் தேங்கியிருந்த மழைநீரில் குளிக்க சென்ற போது எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தனர். ஒரே நேரத்தில் சகோதரர்கள் நீரில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. மேலும் இதுகுறித்து திருவலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News July 13, 2024

வேலூர்: திமுக அவசர செயற்குழு கூட்டம்

image

வேலூர் மாவட்ட திமுக அவசர செயற்குழு கூட்டம் நாளை (ஜூலை 14) மாலை 5 மணி அளவில் திமுக அலுவலகத்தில் நடக்கிறது. இது தொடர்பாக மாவட்ட செயலாளர் ஏ.பி.நந்தகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக கட்சியின் ஆக்கபணிகள் தொடர்பாக விவாதிக்க வேலூர் மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் அவை தலைவர் முகமதுசகி தலைமையில் நடைபெறுகிறது. எனது அனைத்து திமுக நிர்வாகிகள் தவறாமல் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்.

News July 13, 2024

தனியார் துறை சார்பில் வேலை வாய்ப்பு முகாம்

image

வேலூர் மாவட்டத்தை சேர்ந்த படித்த வேலை தேடும் இளைஞர்கள் ஜூலை 20 ஆம்தேதி வேலூர் டிகேஎம் மகளிர் கல்லூரியில் நடைபெறும் தனியார்துறை வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம். www. tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்களை முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் சுப்புலெட்சுமி தெரிவித்துள்ளார்.

News July 13, 2024

வேலூரில் 9.30 வரை மழைக்கு வாய்ப்பு

image

வேலூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இன்று காலை 9.30 மணிவரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேற்கு திசையின் வேகமாறுபாடு காரணமாக லேசானது முதல் மிதமான வரை மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. எனவே வெளியே செல்லும் பொதுமக்கள் அதற்கேற்றவாறு முன்னெச்சரிக்கையுடன் இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது. இந்த மழையால் சில இடங்களில் மழைநீர் தேங்கி போக்குவரத்தும் பாதிக்கப்படலாம்.

News July 12, 2024

ஒரே நாளில் 14 பேர் மீது மதுவிலக்கு வழக்கு பதிவு

image

வேலூர் மாவட்டம் முழுவதும் காவல் ஆய்வாளர்களின் தலைமையிலான போலீசார் இன்று (ஜூலை 12) நடத்திய சோதனையில் 10 லிட்டர் கள்ளச்சாராயம், 7 லிட்டர் கள்ளச்சாராய ஊரல்கள், 51 மதுபாட்டில்கள் மற்றும் 200 கிராம் குட்கா ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு ஒரே நாளில் 14 பேர் மீது மதுவிலக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!