Vellore

News July 19, 2024

வேலூர் எஸ்பி அலுவலகத்தில் தீ விபத்து

image

வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள எஸ்பி அலுவலகத்தில் இன்று (ஜூலை 19) எஸ்பி மணிவண்ணன் அறையில் உள்ள ஏ.சி.யில் இருந்து திடீரென புகை வந்து தீ பற்றியது. தீ மள மளவென அறை முழுவதும் பரவியது. இதுகுறித்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். முதல் கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது என்று தெரியவந்தது.

News July 19, 2024

வேலூர் கலெக்டர் தலைமையில் கண்காணிப்பு குழு கூட்டம்

image

வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் சுப்புலெட்சுமி தலைமையில் இன்று (ஜூலை 19) மாவட்ட அளவிலான ஆதிதிராவிடர் நலக்குழு மற்றும் விழிக்கண் கண்காணிப்புக்குழு கூட்டம் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடந்தது. இந்த கூட்டத்தில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலர் ராமசந்திரன், குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் சுபலட்சுமி மற்றும் ஆதிதிராவிடர் நலக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

News July 19, 2024

வேலூர் மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் 27 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, வேலூர் மாவட்டத்தில் இன்று இரவு 7 மணி வரை லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News July 19, 2024

வேலூர் கல்லூரி மாணவர் விடுதியில் ஆய்வு செய்த ஆட்சியர்

image

வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர்  சுப்புலெட்சுமி  இன்று (ஜூலை 19) “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” என்ற திட்டத்தின்கீழ் வேலூர் ஓட்டேரி பகுதியில் உள்ள அரசினர் ஆதிதிராவிடர் நல கல்லூரி மாணவர் விடுதியில் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலர் ராமச்சந்திரன், வேலூர் வட்டாட்சியர் முரளிதரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

News July 19, 2024

வேலூர் புதிய வகுப்பறை கட்டிடத்தை திறந்து வைத்த கலெக்டர்

image

வேலூர் கொசப்பேட்டை ஈ.வெ.ரா நாகம்மையார் அரசினர் பெண்கள் மேல்நிலை பள்ளியில் 2.97 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள 14 புதிய வகுப்பறை கட்டிடத்தை வேலூர் கலெக்டர் சுப்புலெட்சுமி இன்று (ஜூலை 19) குத்து விளக்கேற்றி திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் வேலூர் பாராளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த், சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன், மாநகராட்சி மேயர் சுஜாதா,  துணை மேயர் சுனில்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

News July 19, 2024

நாளை ரேஷன் கடைகள் இயங்காது

image

மகளிா் உரிமைத் தொகை பயனாளிகளைத் தோ்வு செய்யும் பணிகளை, ரேஷன் கடை ஊழியர்கள் கடந்தாண்டு மேற்கொண்டனர். ஜூலை 23, ஆகஸ்ட் 4 ஆகிய விடுமுறை தினங்களில் பணிகளை மேற்கொண்டதால், அதனை ஈடுசெய்யும் வகையில் நாளை (சனிக்கிழமை) விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டிருக்கிறது. இதனால் வேலூர் மாவட்டம் முழுவதும் நாளை ரேஷன் கடைகள் இயங்காது. எனவே, பொதுமக்கள் இன்றே ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்கி கொள்ளுங்கள்.

News July 19, 2024

வேலூரில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை

image

சென்னை வானிலை ஆய்வு மையம் வேலூர் மாவட்டத்தில் அடுத்து 3 மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவித்துள்ளது. பருவ மழை தொடங்கியுள்ள நிலையில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில், மிதமான மழை செய்து வருகிறது. இந்நிலையில், இன்று தமிழகத்தின் 8 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்திற்கு மழை மற்றும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News July 19, 2024

வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை

image

வேலூர் மாவட்டம் முழுவதும் காவல் ஆய்வாளர்களின் தலைமையிலான போலீசார் இன்று (ஜூலை 18) நடத்திய சோதனையில் 22 மதுபாட்டில்கள், 28 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு ஒரே நாளில் 8 பேர் மீது மதுவிலக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இது போன்ற குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன்  எச்சரித்துள்ளார்.

News July 18, 2024

வேலூர் எஸ்பி தலைமையில் ஆலோசனை கூட்டம்

image

வேலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று (ஜூலை 18 ) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் தலைமையில் கல்லூரி மற்றும் மருத்துவமனை ஆய்வகங்களில் ஆராய்சிக்காக/பயிற்சிக்காக பயன்படுத்தப்படும் மெத்தனால் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் மெத்தனால் கையிருப்பு, பயன்பாடு ஆகியவை முறையே பதிவு செய்யப்பட வேண்டும், எக்காரணம் கொண்டும் ஆய்வக பயன்பாட்டை தவிர இதர பயன்பாட்டிற்கு பயன்படுத்த கூடாது என  ஆலோசிக்கப்பட்டது

News July 18, 2024

வேலூர் காவலர்களுக்கு இலவச மருத்துவ முகாம்

image

வேலூர் மாவட்டத்தில் பணிபுரியும் காவல்துறையினர் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு மாபெரும் இலவச மருத்துவ முகாம் வரும் ஜூலை 20-ம் தேதி காலை 9.30 மணி முதல் மாலை 4.00 மணி வரை கோட்டை சுற்று சாலையில் உள்ள காவலர் நல்வாழ்வு மன்றத்தில் நடைபெற உள்ளது. எனவே காவலர்கள் இந்த முகாமில் கலந்துகொண்டு பயன் பெறுமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!