Vellore

News July 22, 2024

கல்குவாரியில் மூழ்கி 2 சிறுவர்கள் உயிரிழப்பு

image

கல்குவாரி குட்டையில் மூழ்கி 2 சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் புதுவசூர் பகுதி மலை அடிவாரத்தில் செயல்படாத கல்குவாரி ஒன்று உள்ளது. அங்கு, தனியார் பள்ளி மாணவர்கள் சரவணன் (15), அவினாஷ் (15) ஆகிய 2 சிறுவர்கள் நேற்று குளிக்க சென்றனர். ஆழமான பகுதிக்கு சென்றதால், நீரில் மூழ்கி உயிரிழந்தனர். தீயணப்புத் துறையினர் 2 மணி நேரம் போராடி சிறுவர்களின் உடல்களை மீட்டனர்.

News July 21, 2024

வேலூர் மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, வேலூர் மாவட்டத்தில் இரவு 10 மணி வரை இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News July 21, 2024

வேலூர் மாவட்டத்தில் 25.4 செ.மீ மழைப் பதிவு

image

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து, நீர் நிலைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் ஜூன் 1ஆம் தேதி முதல் இன்று வரை அதிகபட்சமாக 16.5 செ.மீ மழை பெய்துள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

News July 21, 2024

நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

image

திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு, மின்கட்டண உயர்வை கண்டித்து இன்று காலை 10 மணிக்கு வேலூர் அண்ணா கலையரங்கம் அருகில் நாம் தமிழர் கட்சி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் போராட்டம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

News July 21, 2024

வேலூரிலிருந்து ஆம்ஸ்ட்ராங் கொலைத் திட்டம்

image

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான முக்கிய குற்றவாளி எல்லப்பன் போலிசாரிடம் வாக்குமூலம் அளித்தார். கொலை செய்ய முதலில் வேலூரில் இருந்து திட்டமிட்டதாக தெரிகிறது. முதன் முதலில் வேலூரில் அருள், பொன்னை பாலு ஆகியோரை எல்லப்பன் மூலை சலவை செய்துள்ளார். இருவரும் முதல் முறையாக கோடாரி வாங்கியுள்ளனர். வேலூரிலிருந்துதான் ஆம்ஸ்ட்ராங் கொலைத் திட்டம் நடந்தாக திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

News July 20, 2024

6 துணை தாசில்தார்கள் பணியிட மாற்றம்

image

வேலூர் மாவட்ட வருவாய் துறையில் 6 துணை தாசில்தார்களை பணியிட மாற்றம் செய்து கலெக்டர் சுப்புலட்சுமி இன்று (ஜூலை 20) உத்தரவிட்டார். அதன்படி காட்பாடி தாலுகா அலுவலக துணை தாசில்தார் வாசுகி, வேலூர் சப் கலெக்டர் அலுவலகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்ட பிரிவு துணை தாசில்தாராகவும் இவர் உள்பட 6 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

News July 20, 2024

குடியாத்தம் அருகே ஆட்சியர் ஆய்வு

image

குடியாத்தம் அருகே கல்லப்பாடி ஊராட்சியில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் திட்டம் முகாமை மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமுலு விஜயன், ஒன்றியக்குழுத் தலைவர் சத்யானந்தம், வட்டாட்சியர் சித்ராதேவி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நந்தகுமார் வினோத்குமார் உட்பட பலர் உடன் இருந்தனர்.

News July 20, 2024

திருவண்ணாமலைக்கு 100 சிறப்பு பேருந்துகள்

image

பௌர்ணமியையொட்டி திருவண்ணாமலை கிரிவலம் செல்லும் பக்தர்கள் வசதிக்கான இன்று (ஜூலை 20 ) மாலை தொடங்கி நாளை மாலை வரை வேலூர் மண்டலம் போக்குவரத்து கழகம் சார்பில் வேலூரில் இருந்து 50 சிறப்பு பேருந்துகளும், திருப்பத்தூரில் இருந்து 30 பேருந்துகளும், ஆற்காட்டில் இருந்து 20 பேருந்துகளும் என மொத்தம் 100 சிறப்பு பேருந்துகள் திருவண்ணாமலைக்கு இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

News July 20, 2024

ஆக.8-ஆம் தேதி வேலூர் வருகிறார் அமித்ஷா

image

வேலூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள, வரும் 8-ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகை தர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பள்ளிகொண்டா அருகே கந்தநேரியில் வரும் 8ஆம் தேதி பாஜகவின் பிரமாண்ட பொதுகூட்டம் நடைபெற உள்ளது. பாஜக அரசின் 9 ஆண்டு சாதனை விளக்க இந்த பொதுக்கூட்டத்தில் அவர் பங்கேற்கிறார். தேர்தலிக்கு பிறகு முதல்முறையாக மத்திய அமைச்சர் அமித்ஷா தமிழத்திற்கு வருகை தர உள்ளார்.

News July 19, 2024

வேலூர் எஸ்பி அலுவலகத்தில் தீ விபத்து

image

வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள எஸ்பி அலுவலகத்தில் இன்று (ஜூலை 19) எஸ்பி மணிவண்ணன் அறையில் உள்ள ஏ.சி.யில் இருந்து திடீரென புகை வந்து தீ பற்றியது. தீ மள மளவென அறை முழுவதும் பரவியது. இதுகுறித்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். முதல் கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது என்று தெரியவந்தது.

error: Content is protected !!