India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தமிழ்நாடு முதலமைச்சரின் திறனாய்வு தேர்வு வேலூர் மாவட்டத்தில் 10 மையங்களில் இன்று நடைபெற்றது. இதில், 2732 மாணவ மாணவிகள் தேர்வு எழுதினர். இத்தேர்வில் மாநிலம் முழுவதும் வெற்றிபெறும் 1000 பேருக்கு ஆண்டுக்கு ரூபாய் 10,000 வீதம் அவர்கள் இளநிலை பட்டப்படிப்பு முடியும் வரை உதவி தொகையாக வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
17 ஐ.பி.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு சற்று முன் உத்தரவு பிறப்பித்துள்ளது. அந்த வகையில் ஐ.பி.எஸ். அதிகாரி என். தேவராணி மீனா வேலூர் சரக டி.ஐ.ஜி யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும், வேலூர் டி.ஐ.ஜியாக பணியாற்றி வந்த சரோஜ் குமார் தாக்கூர் சென்னை பெருநகர கிழக்கு இணை ஆனையராக மாற்றப்பட்டுள்ளார்.
பெங்களூர் பகுதிகளில் பெய்து வரும் கனமழையின் காரணமாக மழைநீர் மண் கலந்து கலங்கலாக ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணையின் பகுதிகளுக்கு வந்து கொண்டிருக்கிறது. எனவே காவேரி கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலமாக வழங்கப்படும் குடிநீரினை பொதுமக்கள் நன்கு காய்ச்சி கொதிக்க வைத்து பின் ஆற வைத்து குடிக்க வேண்டும். இதனால் நோய் தொற்றிலிருந்து பாதுகாக்கலாம் என வேலூர் கலெக்டர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார்.
சர்வதேச நண்பர்கள் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இவ்வுலகில் நண்பர்கள் இல்லாமல் எவரும் இல்லை. நம்ம வேலூர் மாவட்டத்தில் நண்பர்களோடு ஊர் சுற்றுவது, கிரிக்கெட் ஆடியது, பேருந்து நிறுத்ததில் அமர்ந்து அரட்டை அடிப்பது, தோழிகளுடன் செல்ஃபி எடுப்பதுஎன சினிமாவை மிஞ்சும் அளவுக்கு செய்த சேட்டைகளுன்டு. நீங்க உங்க நண்பனை பற்றி கீழே கமெண்ட் பண்ணுங்க, உங்க நண்பர்களுக்கு சேர் செய்யுங்க.
ஜூலை மாதத்தில் துவரம் பருப்பு, பாமாயில் பெற முடியாத ரேஷன் அட்டை தாரர்கள், இம்மாதத்தில் பெறலாம். ஜூன் மாதம் துவரம் பருப்பு, பாமாயில் பெற இயலாதவர்கள், ஜூலை மாதத்தில் பெறலாம் என அறிவிக்கப்பட்டது. இதனால், ஜூலை மாதத்துக்கான துவரம் பருப்பு, பாமாயிலை சிலரால் பெற முடியவில்லை. எனவே வேலூரில் உள்ள 4,48,641 அட்டை தாரர்களில் ஜூலை மாதத்துக்கான பொருட்களை பெற இயலாதவர்கள் இம்மாதம் பெறலாம். ஷேர் செய்யவும்.
வேலூர் காவல் சரகத்திற்கு உட்பட்ட மாவட்டங்களான வேலூர், திருப்பத்தூர். திருவண்ணாமலை, ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களளில் பணிபுரியும் 45 காவல் ஆய்வாளர்கள் பல்வேறு காரணங்களுக்காக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை வேலூர் சரக டி.ஐ.ஜி சரோஜ் குமார் தாக்கூர் நேற்று வெளியிட்டுள்ளார். மேலும், அந்ததந்த மாவட்ட எஸ்பி-க்கள் மாற்றம் பெற்றவர்களுக்கு ஆணையை வழங்குமாறு தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சரின் திறனாய்வு தேர்வு வேலூர் மாவட்டத்தில் நாளை (ஆகஸ்ட் 4) நடைபெற உள்ளது. இந்த தேர்வை வேலூர் மாவட்டத்தில் 10 மையங்களில் மொத்தம் 2732 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர். இதில் 9 மற்றும் 10-ம் வகுப்புகளில் கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்களின் அடிப்படையில் கேள்விகள் கேட்கப்படும் என பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
வேலூர் காவல் சரகத்திற்கு உட்பட்ட வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 45 காவல் ஆய்வாளர்களை பணியிட மாற்றம் செய்து டிஐஜி சரோஜ்குமார் தாகூர் இன்று (ஆகஸ்ட் 3) உத்தரவிட்டுள்ளார். பணியிட மாற்றம் பெற்ற காவல் ஆய்வாளர்கள் விரைவில் அவர்களுக்கு மாற்றப்பட்ட காவல் நிலையத்தில் பொறுப்பு ஏற்றுக் கொள்வார்கள் என தெரிவித்தார்.
வேலூர் மாவட்டம் முழுவதும் காவல் ஆய்வாளர்களின் தலைமையிலான போலீசார் இன்று (ஆகஸ்ட் 3) நடத்திய சோதனையில் 81 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு 7 பேர் மீது மதுவிலக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இத்தகைய தொடர் குற்றச்செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் எச்சரித்துள்ளார்.
வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் சுப்புலெட்சுமி தலைமையில் இன்று (03.08.2024) ஆட்சியர் அலுவலக காயிதே மில்லத் கூட்டரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மணிமொழி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் சீதா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Sorry, no posts matched your criteria.