Vellore

News August 24, 2024

வேலூர் எஸ்பி தலைமையில் குற்ற ஆய்வு கூட்டம்

image

வேலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று (ஆகஸ்ட் 23) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன்  தலைமையில் மாதாந்திர குற்ற ஆய்வுக் கூட்டம் நடந்தது. இதில் கடந்த மாதம் மாவட்டம் முழுவதும் நடைபெற்ற குற்றங்கள் குறித்தும், நிலுவையிலுள்ள குற்ற வழக்குகளை விரைந்து முடிக்கவும், சரித்திர பதிவேடு குற்றவாளிகள்  மீது கடுமையான நடவடிக்கைகள் எடுப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதில் காவல்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

News August 23, 2024

காட்பாடி ரயிலில் வந்த 1,250 டன் ரேஷன் அரிசி மூட்டைகள்

image

தஞ்சாவூரில் இருந்து இன்று (ஆகஸ்ட் 23) 1,250 டன் ரேஷன் அரிசி மூட்டைகள் காட்பாடிக்கு ரயில் மூலம் வந்தடைந்தது. இங்கிருந்து லாரிகள் மூலம் பாகாயம் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கிடங்குக்கு அனுப்பி வைக்கப்பட்டவுள்ளது. அங்கிருந்து லாரிகள் மூலம் வேலூர் மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளுக்கு பிரித்து அனுப்பி வைக்கப்படும் என்று பொது விநியோகத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

News August 23, 2024

வேலூர் CMC-யில் பணிபுரிய வாய்ப்பு

image

வேலூர் CMC-யில் பணியாற்ற 15 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு B.Arch, B.Sc, BA, Diploma, DMLT, M.Sc, MD, MS, PG Diploma போன்ற படிப்புகளில் தேர்ச்சி பெற்றவர்கள் இணைய வழியில் <>விண்ணப்பிக்கலாம்<<>>. மேலும் இந்த பணியில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு மாதம் ரூ. 15,318/- முதல் ரூ. 30,643/- வரை சம்பளம் வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க கடைசி நாள் 26.08.2024 ஆகும்.

News August 23, 2024

வேலூர் மாவட்டத்தில் 54 மது பாட்டில்கள் பறிமுதல்

image

வேலூர் மாவட்டம் முழுவதும் காவல் ஆய்வாளர்களின் தலைமையிலான போலீசார் நேற்று நடத்திய சோதனையில் 54 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக 2 பேர் மீது மதுவிலக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

News August 22, 2024

வேலூரில் குடற்புழு மாத்திரைகள் வழங்க இலக்கு

image

தேசிய குடற்புழு நீக்கும் மாத்திரை வழங்கும் திட்டத்தின் கீழ் வேலூர் மாவட்டத்தில் நாளை (ஆகஸ்ட் 23) சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த சிறப்பு முகாமில் 4.71 லட்சம் குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி தெரிவித்துள்ளார். இந்த முகாம் அனைத்து அங்கன்வாடி மையங்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் சுகாதார பணியாளர்கள் மூலம் வழங்கப்படுகிறது.

News August 22, 2024

காட்பாடி காவல் நிலையத்திலிருந்து கைதி தப்பி ஓட்டம்

image

வேலூர் மாவட்டம் காட்பாடி காவல் நிலைய போலீசார் கஞ்சா வழக்கில் காமேஷ் என்ற வாலிபரை இன்று (ஆகஸ்ட் 22) விசாரணைக்காக கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்தனர். அப்போது திடீரென காவல் நிலையத்திலிருந்து கைவிலங்குடன் காமேஷ் தப்பி ஓடியுள்ளார். இதையடுத்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் மாவட்டம் முழுவதும் போலீசாரின் ரோந்து பணியை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

News August 22, 2024

வேலூரில் உடற்தகுதி தேர்வில் 232 பேர் தேர்ச்சி

image

வேலூரில் நேற்று இரண்டாம் நிலை காவலர்கள், தீயணைப்பாளர் பதவிக்கு உடற்தகுதி தேர்வு நடந்தது. இந்த தேர்வை வேலூர் டிஐஜி தேவராணி, எஸ்பி மதிவாணன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். 346 விண்ணப்பதாரர்கள் கலந்துகொண்டனர். இதில் 232 விண்ணப்பதாரர்கள் இரண்டாம் கட்ட உடற்தகுதி தேர்விற்கு தேர்ச்சி பெற்றுள்ளனர். அவர்களுக்கு நாளை உடற்திறன் நடைபெறும். மேலும், இன்று 204 பேருக்கு உடற்திறன் தேர்வு நடைபெறுகிறது.

News August 22, 2024

விபத்துகளில் பாதிக்கப்பட்ட 52 பேருக்கு நிவாரணத் தொகை

image

வேலூர் மற்றும் காட்பாடி பகுதிகளில் நடைபெற்ற சாலை விபத்துகளில் மரணம் அடைந்தவர்களின் குடும்பம் மற்றும் பலத்த காயம் அடைந்தவர்களுக்கு தமிழக அரசு சார்பில் முதலமைச்சரின் நிவாரணத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி வேலூர் தாலுகா அலுவலகத்தில் நேற்று (ஆகஸ்ட் 21), வேலூர் வருவாய் கோட்டாட்சியர் கவிதா கலந்து கொண்டு 52 பேருக்கு ரூ.40 லட்சம் நிவாரணத் தொகையை வழங்கினார்.

News August 22, 2024

வேலூர் மாவட்டத்தில் 116 மது பாட்டில்கள் பறிமுதல்

image

வேலூர் மாவட்டத்தில் சட்ட விரோதமாக கள்ள சந்தையில் மது பாட்டில்கள் விற்பனையை தடுக்கும் வகையில் மாவட்டம் முழுவதும் காவல் ஆய்வாளர்களின் தலைமையிலான போலீசார் நேற்று நடத்திய சோதனையில் 116 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு ஒரே நாளில் 4 பேர் மீது மதுவிலக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

News August 21, 2024

வேலூர் மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

image

வேலூர் மாவட்டத்தில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், வெளியே செல்லும் பொதுமக்கள், குடை மற்றும் ரெயின் கோர்ட் எடுத்து செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல், சாலைகளில் மழைநீர் தேங்க வாய்ப்புள்ளதால், வாகன ஓட்டிகள் கவனமாக இருக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!