India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

வேலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் நேற்று (ஜன.30) மாவட்ட வருவாய் அலுவலர் மா. சிவசுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், தரமற்ற உரங்கள் விநியோகம் செய்யப்படுவதால் விவசாயம் கடுமையாக பாதிக்கப்படுவதாக விவசாயிகள் கவலை தெரிவித்தனர். மேலும் கலப்பு உரங்களில் மண் அதிகளவில் கலந்திருப்பதால் பயிர்களின் வளர்ச்சி மற்றும் விளைச்சல் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

வேலூர் மாவட்ட மக்களே.. உங்க பகுதியில் ஆபத்தான நிலையில் உள்ள பழுதடைந்த மின்கம்பங்கள், எரியாத தெரு விளக்குகள் உள்ளதா? இது குறித்து மின்வாரியத்திடம் WhatsApp மூலமாக எளிதில் புகாரளிக்கலாம். 89033 31912 என்ற எண்ணின் வாயிலாக மேற்கண்ட புகார்களை எவ்வித அலைச்சலும் இல்லமால் போட்டோவுடன் புகாரளிக்கலாம். அவசர உதவிக்கு -94987 94987 என்ற எண்ணையும் அழைக்கலாம். இந்த கவலை எல்லோருக்கும் SHARE பண்ணுங்க.

இ.பி.கூட்ரோட்டில் சரவணவேல் என்பவரது உணவகத்தில் தேவேந்திரன் மற்றும் அரவிந்த் என்பவர்கள் சாப்பிட வந்தனர். அப்போது இவர்களுடன் ஏற்பட்ட தகராறில் சரவணவேல் கொதிக்கும் எண்ணெயை அரவிந்த் மீது ஊற்றி உள்ளார். இதனால் வலியால் துடித்த அரவிந்த், திருவலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து போலீசார் நேற்று (ஜன.30) குண்டர் சட்டத்தில் சரவணவேலை சிறையில் அடைத்தனர்.

வேலூர் மாவட்ட காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கான பாராட்டும் விழா நேற்று (ஜன.30) நடைபெற்றது. இவ்விழாவில், சட்டம்-ஒழுங்கு பாதுகாப்பு, குற்றத் தடுப்பு மற்றும் பொதுமக்கள் சேவையில் சிறந்து விளங்கிய காவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

வேலூரில், வாடகைக்கு குடியேற்பவர்கள் இதை தெரிந்து கொள்ளுங்கள். ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும். 11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும். வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன் அறிவிப்பு தர வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234, 044-25268320) புகார் செய்யலாம். ஷேர்!

ஒடுகத்தூர் பாக்கம்பாளையம் கிராமத்தில் எருது விடும் விழா நேற்று (ஜன.30) நடைப்பெற்றது. இதில் திருப்பத்தூர், வாணியம்பாடி, வேலூர் உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து 300-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. சீறிப்பாய்ந்த காளைகளின் கயிற்றில் எதிர்பாராத விதமாக 5 பேர் சிக்கி கொண்டனர். இவர்களை காளைகள் இழுத்து சென்றதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதில் காயம் அடைந்தவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டது.

வேலூர் அடுக்கம்பாறையில் உள்ள வெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் கல்லூரியில் தனியார் நிறுவனம் சார்பில் சிறப்பு வேலை வாய்ப்பு முகாம் நேற்று நடைபெற்றது. இந்த முகாமை கல்லூரி துணைத்தலைவர் ஜனார்த்தனன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். இதில் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் என்ஜினீயரிங் துறைகளை சேர்ந்த 128 மாணவர்கள் கலந்து கொண்டனர். 92 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

தோட்டப்பாளையத்தை சேர்ந்த சரஸ்வதி, 2010-ல் காந்தி நகரில் 4,275 சதுரஅடி வீட்டுமனையை ஜெகநாதனிடமிருந்து ரூ.65 லட்சத்துக்கு வாங்கினார். ஆனால் இது போலி ஆவணங்கள் மூலம் முறைகேடாக விற்கப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து சரஸ்வதியிடம் ரூ.43 லட்சத்தை மட்டும் கொடுத்து விட்டு மோசடி செய்தனர். இதில் தற்போது 4 பேருக்கு 3 ஆண்டுகள் ஜெயில் மற்றும் ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.

சத்துவாச்சாரியில் கடந்த 28-ந் தேதி இரவு திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் அப்பகுதியை சேர்ந்த ஜெயபிரகாஷ் (26), சின்னா (30), ராகவன் (28), கோகுல் (25) கலந்து கொண்டனர். உணவு அருந்த சென்ற போது உணவு பரிமாறுவதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த இக்கும்பல் அங்கிருந்த உணவு பரிமாறிய முகமது அலியை சரமாரியாக தாக்கினர். இது குறித்து சத்துவாச்சாரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

வேலூர் மாவட்டத்தில் நேற்று (ஜன.30) இரவு முதல் இன்று (ஜன.31) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ, 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!
Sorry, no posts matched your criteria.