Vellore

News January 30, 2026

வேலூர்: போனில் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்

image

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இதனை ஷேர் பண்ணுங்க

News January 30, 2026

வேலூர் டிஆர்ஓ தலைமையில் உறுதிமொழி ஏற்ற மருத்துவர்கள்

image

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக காயிதே மில்லத் கூட்டரங்கில் இன்று (ஜனவரி 30) மகாத்மா காந்தியடிகள் நினைவு நாளையொட்டி தொழுநோய் ஒழிப்பு உறுதிமொழியினை மாவட்ட வருவாய் அலுவலர் சிவசுப்பிரமணியன் தலைமையில் அனைவரும் ஏற்றுக்கொண்டனர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) குணசேகரன், துணை இயக்குநர்கள் ப்ரீத்தா (தொழுநோய்), ஜெயஸ்ரீ (காசம்), மணிமேகலை (குடும்பநலம்) உட்பட பலர் கலந்து கொண்டனர்.

News January 30, 2026

வேலூர்: டிகிரி போதும்., விவசாய வங்கியில் வேலை ரெடி!

image

வேலூர் மக்களே, தேசிய விவசாய – கிராம வளர்ச்சி வங்கியில் (NABARD) பல்வேறு பணிகளுக்கு 162 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 21 – 35 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் ibpsreg.ib<>ps.in/n<<>>abhindec25/ – என்ற தளத்தில் பிப். 3ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இதற்கு சம்பளம் ரூ,32,000 வழங்கப்படும். தேர்வு அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமனம் செய்யப்படுவர். இந்த பயனுள்ள தகவலை SHARE I

News January 30, 2026

வேலூரில் ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு!

image

வேலூர் மக்களே, மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம். 1) விண்ணப்பிக்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம். 2) அல்லது <>pmjay.gov.in <<>>இணையதளத்தில் ரேஷன் & ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம். 3) விண்ணப்பித்த 10 – 15 நாட்களில் அதிகாரிகள் சரிபார்ப்பிற்குப் பின் ‘கோல்டன் கார்டு’ வழங்கப்படும். ஷேர் பண்ணுங்க!

News January 30, 2026

வேலூர்: கேஸ் மானியம் ரூ.300 பெறுவது எப்படி?

image

கேஸ் மானியம் ₹300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர, எல்பிஜி இணைப்பை ஆதார் அட்டையுடன் இணைக்க வேண்டும். உங்கள் கேஸ் வழங்குநரின் (Indane, HP, Bharat) இணையதளத்திற்குச் சென்று, ‘Link Aadhaar’ விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும். நுகர்வோர் எண், மொபைல் எண், ஆதார் ஆகிய விவரங்களை உள்ளிட்டு, OTP மூலம் இணைப்பை உறுதி செய்யலாம். இதன் மூலம் வீட்டில் இருந்தபடியே மானியத்தைப் பெறலாம். உடனே SHARE பண்ணுங்க.

News January 30, 2026

வேலூர் வாடகை செலுத்தாத கடைகளுக்கு நோட்டீஸ்

image

வேலூர் மாநகராட்சிக்கு சொந்தமான கடைகளுக்கு மாதாந்திர வாடகை செலுத்தாதவர்களுக்கு நோட்டீஸ் வழங்கவும், அதிக வாடகை பாக்கி வைத்துள்ள கடைகளுக்கு ‘சீல்’ வைக்கவும் மாநகராட்சி ஆணையாளர் லட்சுமணன் உத்தரவிட்டார். அதன்படி 2-வது மண்டலத்துக்கு உட்பட்ட நேதாஜி மார்க்கெட், சாரதி மாளிகையில் உள்ள 60 கடைகளுக்கு வாடகை பாக்கி செலுத்தும்படி நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

News January 30, 2026

வேலூர்: 3 இடங்களில் மாடு விடும் திருவிழா

image

வேலூர் மாவட்டத்தில் இன்று ஜனவரி 30-ம் தேதி (வெள்ளிக்கிழமை) மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியுடன் 3 இடங்களில் மாடு விடும் திருவிழா நடைபெற உள்ளது. அதன்படி வேலூர் தாலுகாவிற்கு உட்பட்ட கீழ்ப்பள்ளிப்பட்டு, கே.வி.குப்பம் காவனூர், அணைக்கட்டு தாலுகா பாக்கம்பாளையம் ஆகிய கிராமங்களில் மாடு விடும் திருவிழா நடைபெற உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கான முன்னேற்பாடு பணிகளை விழா குழுவினர் செய்து வருகின்றனர்.

News January 30, 2026

ALERT: வேலூரில் மின் தடை: உங்க ஏரியா இருக்கா?

image

வேலூர் துணை மின் நிலையத்தில் அத்தியாவசிய மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் நாளை (ஜன.31) காலை 9 மணி முதல் 5 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படம் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன்படி புதிய பேருந்து நிலையம், தோட்டப்பாளையம், வேலூர் டவுன் பஜார், சலவன்பேட்டை, அண்ணா சாலை, அப்துல்லாபுரம், கிருஷ்ணா நகர், பிஷப் டேவிட் நகர், கஸ்பா, கோணவட்டம், கொசப்பேட்டை, ஓல்ட் டவுன் பகுதிகளில் மின் தடை செய்யப்படும்.

News January 30, 2026

வேலூர்: உங்க வாட்ஸ்-ஆப் பாதுகாப்பா இருக்கா? CLICK

image

உங்கள் வாட்ஸ் ஆப்பில் தெரியாத, தேவையில்லாத நம்பர்களில் இருந்து கால் வருதா..?
1) உங்கள் வாட்ஸ்-ஆப் settings உள்ளே செல்லவும்.
2) அதில் Privacy பக்கத்தை தேர்வு பண்ணுங்க.
3) உள்ளே Silence Unknown Callers ஆப்ஷனை செலெக்ட் பண்ணுங்க.
4) இனி தெரியாத நபர்களிடமிருந்து உங்களுக்கு அழைப்பு வராது!
இந்த தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க. கண்டிப்பாக யாருக்காவது உதவியாக இருக்கும்.

News January 30, 2026

வேலூர்: துரத்தி துரத்தி கடித்து குதறிய வெறி நாய்!

image

போ்ணாம்பட்டு அருகே குப்பைமேடு பகுதியில் நேற்று (ஜன.29) முஹம்மத் பஷீா்(14), உம்மேஹனி(5) , ஷாயிரா(4) ஆகிய 3 சிறுவர்கள் விளையாடி கொண்டிருந்தனர். அப்போது 3 சிறுவர்களை அப்பகுதியில் சுற்றி திரிந்த வெறி நாய் கடித்து குதறியது. நாய் கடித்ததில் பலத்த காயமடைந்த சிறுவா்களை அப்பகுதி மக்கள் மீட்டு போ்ணாம்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமத்திதனர்.

error: Content is protected !!