Vellore

News August 28, 2024

வேலூர் மாவட்டத்தில் வாகன சோதனை கட்டாயம்

image

வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலைய பகுதிகளிலும் நேற்று (ஆகஸ்ட் 27) முதல் இரவு 11 மணிக்கு மேல் கட்டாயம் வாகன சோதனையில் ஈடுபட வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் அறிவித்துள்ளார். இதற்காக ஏ பி சி என மூன்று குழுக்களை அமைத்து இரவு நேரங்களில் தேவையில்லாமல் வெளியில் சுற்றும் இளைஞர்களை,அவர்களின் பெற்றோர்களை வரவழைத்து அறிவுரை கூறி அனுப்ப வேண்டும்

News August 28, 2024

வேலூரைச் சேர்ந்தவருக்கு தேசிய நல்லாசிரியர் விருது

image

தேசிய நல்லாசிரியர் விருதுக்கு வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஒன்றியம் ராஜாகுப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணியாற்றி வரும் ஆர்.கோபிநாத் தமிழ்நாட்டில் இருந்து தேர்வாகியுள்ளார். இவருக்கு செப் 5 ஆம் தேதி டெல்லியில் நல்லாசிரியர் விருது மற்றும் வெள்ளிப்பதக்கம் வழங்கப்பட உள்ளது. மேலும், ஆசிரியர் கோபிநாத்க்கு பல்வேறு தரப்பினரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

News August 28, 2024

வேலூரில் அடுத்த 3 மணி நேரத்திற்கு

image

வேலூர் மாவட்டத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு (காலை 10 மணி வரை) லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசையின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்றிரவு முதல் மழை பெய்து வருகிறது. இதனால், வேலூரைச் சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பணிக்கு செல்வோர் வெளியே செல்லும்போது குடை, ரெயின் கோர்ட்டுடன் செல்லுங்கள். உங்க ஏரியாவில் மழையா?

News August 28, 2024

பள்ளிக் கல்வித்துறையின் மாதந்திர ஆய்வுக்கூட்டம்

image

வேலூர் மாவட்டத்தில் மாவட்ட அளவிலான பள்ளிக் கல்வித்துறையின் மாதந்திர ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி தலைமையில் நேற்று (27.08.2024) வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. கூட்டத்தில் பள்ளி கல்வி துறை சம்மந்தமான கோரிக்கைகள் கேட்கப்பட்டன. இக்கூட்டத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மணிமொழி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்

News August 28, 2024

பள்ளிக் கல்வித்துறையின் மாதந்திர ஆய்வுக்கூட்டம்

image

வேலூர் மாவட்டத்தில் மாவட்ட அளவிலான பள்ளிக் கல்வித்துறையின் மாதந்திர ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி தலைமையில் நேற்று (27.08.2024) வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. கூட்டத்தில் பள்ளி கல்வி துறை சம்மந்தமான கோரிக்கைகள் கேட்கப்பட்டன. இக்கூட்டத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மணிமொழி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்

News August 28, 2024

வேலூர் காவல் துறை இரவு நேர ரோந்து பணி

image

வேலூர் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று (ஆகஸ்ட் 27) இரவு ரோந்து பணி செல்லும் காவல்துறை காவல் ஆய்வாளர் (சீனிவாசன்) தலைமையில் இன்று இரவு ரோந்து பணி நடைபெற உள்ளது. இதில் வடக்கு காவல் நிலையம், தெற்கு காவல் நிலையம், சத்துவாச்சாரி, வேலூர் தாலுக்கா, விரிஞ்சிபுரம், பாகாயம், அரியூர், வேப்பங்குப்பம், பள்ளிகொண்டா, அணைக்கட்டு காவல் நிலையம் ஆகிய பகுதியில் இரவு ரோந்து பணி நடைபெற உள்ளது. எண்-9498150181

News August 27, 2024

வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை

image

வேலூர் மாவட்டம் முழுவதும் காவல் ஆய்வாளர்களின் தலைமையிலான போலீசார் இன்று நடத்திய சோதனையில் 80 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு ஒரே நாளில் 3 பேர் மீது மதுவிலக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இது போன்ற தொடர் குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் எச்சரித்துள்ளார்.

News August 27, 2024

Breaking: வேலூர் அருகே நடுவழியில் நின்ற ரயில்

image

மேற்கு வங்கத்திலிருந்து நெல்லை நோக்கி சென்ற ரயில் நடுவழியில் திடீரென நிறுத்தப்பட்டுள்ளது. ரயிலில் பிரேக் பைண்டிங்கில் புகை வந்ததால் நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல். பயணி ஒருவர் அபாய சங்கிலியை இழுத்ததால் பிரேக் பைண்டிங்கில் புகை ஏற்பட்டதாக ரயில்வே அதிகாரி தகவல். சுமார் 15 நிமிடங்களுக்கு பிறகு நடுவழியில் நிறுத்தப்பட்ட ரயில் மீண்டும் புறப்பட்டு சென்றது.

News August 27, 2024

வேலூரில் விநாயகர் சிலை ஊர்வலப் பாதை ஆய்வு

image

வேலூரில் விநாயகர் சதுர்த்தியையொட்டி வைக்கப்படும் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் சென்று சதுப்பேரி ஏரியில் கரைக்கப்படுகிறது . இந்நிலையில் விநாயகர் சிலை கொண்டு செல்லும் ஊர்வலம் பாதையில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடுகளை வேலூர் கோட்டாட்சியர் கவிதா தலைமையில் அதிகாரிகள் இன்று ஆய்வு செய்தனர்.சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற மாநகராட்சி அதிகாரிகளுக்கு கோட்டாட்சியர் கவிதா உத்தரவிட்டார்

News August 27, 2024

வேலூரில் ஒடும் ரெயிலில் இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை

image

கேரளாவில் இருந்து சென்னை வந்த விரைவு ரயிலில் பெண் மென் பொறியாளர் ஒருவர் இன்று பயணித்துள்ளார். ரயில் காட்பாடி அருகே வந்து கொண்டு இருந்த போது இளைஞர்கள் 2 பேர் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். இது குறித்து அந்த பெண் சென்னை சென்ட்ரல் ரயில்வே போலீசில் புகார் அளித்துள்ளார். மேலும், அவருக்கு மருத்துவ சோதனை நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

error: Content is protected !!