India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

வேலூர் மாவட்டத்தில் டிச.19 முதல் ஜன.30 வரை பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தங்களுக்காக மொத்தம் 62,802 விண்ணப்பங்கள் (நேரடியாகவும், இணையதளம் வழியாகவும்) பெறப்பட்டுள்ளன. இதில் புதியதாக பெயர் சேர்க்க (படி6) மட்டும் 39,170 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதனடிப்படையில் (பிப்17) புதிய வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

ஆட்சேபனை இல்லாத அரசு புறம்போக்கு நிலம், அரசு நன்செய் & புன்செய், பாறை, கரடு, கிராமநத்தம், உரிமையாளர் அடையாளம் காணப்படாத நிலத்தில் வசிப்போர் ஆண்டிற்கு 3 லட்சத்திற்கு கீழ் வருமானம் இருப்பின் இலவச பட்டா பெறலாம். இந்த தகுதிகள் இருந்தால் கிராம நிர்வாக அலுவலரிடம் உரிய ஆவணங்களோடு விண்ணப்பத்தை அளிக்கலாம். இந்த சிறப்பு திட்டம் தெரிந்தவர்களுக்கு உடனே SHARE பண்ணுங்க!

முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம், பெண் குழந்தைகள் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் 1 பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000-ம், அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு<

உங்களது வங்கி கணக்கின் ACCOUNT BALANCE, STATEMENT, LOAN உள்ளிட்ட சேவைகளை வாட்ஸ்ஆப் வழியாக பெற முடியும். SBI (90226-90226), கனரா வங்கி (90760-30001), இந்தியன் வங்கி (8754424242), இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (96777-11234) HDFC (7070022222) இதில் உங்களது வங்கியின் எண்ணை போனில் SAVE செய்து, ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், தகவல்கள் அனைத்தும் வாட்ஸ்ஆப் வாயிலாக அனுப்பி வைக்கப்படும். SHARE IT.

தமிழக அரசு சொத்து தொடர்பான சேவையை WhatsApp-ல் வழங்க திட்டமிட்டுள்ளது.
1. 8188869996 எண்ணை Save பண்ணுங்க.
2. WhatsApp-ல் வணக்கம் அனுப்புங்க
3. மாவட்டம், கிராமம் விவரங்களை குறிப்பிட்டு (சொத்து நகல், ஈசி, பட்டா, சிட்டா) தேர்தெடுஙக.
4. நீங்கள் குறிப்பிட்ட சொத்து தொடர்பான அனைத்து தகவல்களும் WhatsApp -ல் கிடைக்கும்.
இந்த எண் விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது. மற்றவர்கள் தெரிஞ்சுக்க Share it!

தமிழக அரசு சொத்து தொடர்பான சேவையை WhatsApp-ல் வழங்க திட்டமிட்டுள்ளது.
1. 8188869996 எண்ணை Save பண்ணுங்க.
2. WhatsApp-ல் வணக்கம் அனுப்புங்க
3. மாவட்டம், கிராமம் விவரங்களை குறிப்பிட்டு (சொத்து நகல், ஈசி, பட்டா, சிட்டா) தேர்தெடுஙக.
4. நீங்கள் குறிப்பிட்ட சொத்து தொடர்பான அனைத்து தகவல்களும் WhatsApp -ல் கிடைக்கும்.
இந்த எண் விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது. மற்றவர்கள் தெரிஞ்சுக்க Share it!

லத்தேரி பகுதியை சேர்ந்த தீயணைப்பு வீரர் சசிகுமார் (31). இவர் காட்பாடியை சேர்ந்த 17 வயது சிறுமியுடன் நெருங்கி பழகி, புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக மிரட்டியுள்ளார். இதுகுறித்த அளிக்கப்பட்ட புகாரின் பேரில் காட்பாடி மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் சசிகுமாரை கைது செய்தனர். இதை தொடர்ந்து மாவட்ட தீயணைப்பு அலுவலர் வடிவேலு சசிகுமாரை பணியிடை நீக்கம் செய்ய உத்தரவிட்டு உள்ளார்.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த கூட நகரம் பகுதியை சேர்ந்த சலூன் கடை நடத்திவரும் ராஜேஷ். இவரது மனைவி சங்கீதா (22) நேற்று (பிப்.2) வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த குடியாத்தம் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

காங்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் சம்பத். இவரது மகன் ஜவகர் நேற்று (ஜன.2) சுப நிகழ்ச்சிக்காக கே.வி.குப்பம் நோக்கி பைக்கில் சென்றார். அப்போது அவ்வழியாக வந்த துரைமூலையை சேர்ந்த பார்த்திபன் என்பவர் முன்னால் சென்ற காரை முந்தி செல்ல முயன்றார். அப்போது கட்டுபாட்டை இழந்த பைக் ஜவகரின் பைக் மீது மோதியது. இதில், ஜவகர் இறந்தார். இதுகுறித்து கே.வி. குப்பம் போலீசார் விசாரித்து வருகின்றனர்

வேலூர் மாவட்டத்தில் நேற்று (பிப்ரவரி 2) இரவு முதல் இன்று (பிப்ரவரி 3) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ, 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!
Sorry, no posts matched your criteria.