Vellore

News February 12, 2026

ரயில்வே தேர்வுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்பு

image

ரயில்வே தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் தேர்வுக்கு தயாராகும் இளைஞர்களுக்கு வேலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழிற்நெறி வழி காட்டும் மையத்தில் சிறந்த பயிற்றுநர்களை கொண்டு கட்டணமில்லா சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இங்கு மாநில அளவிலான மாதிரி தேர்வுகளும் நடத்தப்படுகிறது. எனவே இளைஞர்கள் பங்கேற்று பயனடையுமாறு கலெக்டர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார்.

News February 12, 2026

வேலூர் ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

image

வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகாவிலும் பொது விநியோக திட்டத்தின் சார்பில் ரேஷன் கார்டுகளில் பெயர் நீக்கம், சேர்த்தல், திருத்தம் மேற்கொள்ள சிறப்பு குறைதீர்வு முகாம் வரும் பிப்ரவரி 14-ம் தேதி நடைபெற உள்ளது. காலை 10 மணியளவில் நடைபெற உள்ள இம்முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார்.

News February 12, 2026

வேலூர் சிறையில் 45 பேர் தேர்வுக்கு தயார்!

image

வேலூர் மாவட்டம் தொரப்பாடியில் உள்ள ஆண்கள் மத்திய சிறையில் இந்த ஆண்டு 15 சிறைவாசிகள் +2 தேர்வை எழுத உள்ளனர். அதேபோல் 10-ம் வகுப்பு தேர்வை ஆண்கள் சிறையில் 12 பேர், பெண்கள் சிறையில் 8 பேர் என மொத்தம் 45 கைதிகள் எழுத உள்ளதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்காக மத்திய சிறையில் தேர்வு மையம் அமைந்துள்ளது.

News February 12, 2026

வேலூரில் நள்ளிரவில் திடீர் தீ!

image

வேலூர் மாநகராட்சி 53-வது வார்டுக்கு உட்பட்ட ஓட்டேரி பகுதியில் மாநகராட்சி குப்பை கிடங்கில் நேற்று ( பிப்.11 ) இரவு தீவிபத்து ஏற்பட்டது. தீயினால் குப்பைகள் எரிந்து அப்பகுதியில் புகை மண்டலமாக காட்சியளித்தது. இது குறித்து வேலூர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் அங்கு எரிந்து கொண்டிருந்த குப்பையை அனைத்தனர்.

News February 12, 2026

வேலூரில் மாவட்ட நிர்வாகம் அனுமதி!

image

வேலூர் மாவட்டத்தில் மேலும் 2 கிராமங்களில் மாடு விடும் விழா நடத்துவதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. இதன்படி கே.வி.குப்பம் தாலுகா பள்ளத்தூரில் இன்றும் (பிப்.12 ), கணியம்பாடியில் வரும் 16-ந் தேதியும் மாடு விடும் திருவிழா நடைபெற உள்ளது. விழா குழுவினர் 15 நாட்களுக்கு முன்பே மாடு விடும் திருவிழா நடத்துவதற்கு அனுமதி வழங்கக்கோரி விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News February 12, 2026

பள்ளிகொண்டா தொழிற்சாலையில் திடீர் தீ!

image

பள்ளிகொண்டா அடுத்த பள்ளிக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் பார்த்தீபன் ( 36). நார் தயாரிக்கும் தொழிற் சாலை நடத்தி வருகிறார். நேற்று ( பிப்.11 ) இரவு திடீரென தொழிற்சாலை குடோனில் தீ எரிந்துள்ளது. தகவலின் பேரில் அங்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்படுத்தினர். இந்த தீ விபத்து குறித்து பள்ளிகொண்டா போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News February 12, 2026

வேலூரில் ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு பெறுவது எப்படி?

image

வேலூர் மக்களே, மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம். 1) விண்ணப்பிக்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம். 2) அல்லது <>pmjay.gov.in <<>>இணையதளத்தில் ரேஷன் & ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம். 3) விண்ணப்பித்த 10 – 15 நாட்களில் அதிகாரிகள் சரிபார்ப்பிற்குப் பின் ‘கோல்டன் கார்டு’ வழங்கப்படும். SHARE IT!

News February 12, 2026

வேலூரில் ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு பெறுவது எப்படி?

image

வேலூர் மக்களே, மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம். 1) விண்ணப்பிக்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம். 2) அல்லது <>pmjay.gov.in <<>>இணையதளத்தில் ரேஷன் & ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம். 3) விண்ணப்பித்த 10 – 15 நாட்களில் அதிகாரிகள் சரிபார்ப்பிற்குப் பின் ‘கோல்டன் கார்டு’ வழங்கப்படும். SHARE IT!

News February 12, 2026

வேலூர்: ஓடும் பஸ்சில் பெண்ணுக்கு கொடூரம்!

image

பேரணாம்பட்டை சேர்ந்த மாணவி (18) நேற்று (பிப்.11) கல்லூரி முடிந்து தனியார் பஸ்சில் சென்று கொண்டிருந்தார். அப்போது பஸ்சில் பேரணாம்பட்டு பகுதியை சேர்ந்த அப்துல் லத்தீப் (52) மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவி பெற்றோரிடம் செல்போனில் கூறினார். இதையடுத்து பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் பேரணாம்பட்டு போலீசார் அப்துல் லத்தீபை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

News February 12, 2026

வேலூர்: மருமகனை தீர்த்து கட்டிய மாமனார்!

image

கொல்லமங்கலத்தைச் சேர்ந்த ராகவன் (30) சுவேதா (28) என்பவரை 2022-ல் காதல் திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் ராகவன் பசுமாத்தூர் ரயில்வே மேம்பாலத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுபற்றி கே.வி.குப்பம் போலீசார் விசாரித்ததில் ராகவனுக்கு பல பெண்களுடன் தொடர்பு மற்றும் தொடர்ந்து பணம் கேட்டு சுவேதாவை கொடுமை படுத்தியதால் சுவேதாவின் தந்தை மருமகனை கொலை செய்தது தெரிய வந்தது.

error: Content is protected !!