India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

வேலூரில் உள்ள முக்கிய நகரங்கள் குடியாத்தம், காட்பாடி, கே.வி குப்பம், மேல்பட்டி, பேரணாம்பட்டு, அணைக்கட்டு, பள்ளிகொண்டா இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்புக்காக வேலூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் இரவு ரோந்து பணி செய்து வருகின்றனர். அதன்படி நேற்று (பிப்-13) இரவு – இன்று காலை வரை ரோந்து பணி விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் வேலைக்குச் செல்லும் பெண்கள் இதை பயன்படுத்திக் கொள்ளலாம். ஷேர்!

பெண்கள் சொந்த நிலம் வாங்க தமிழக அரசு அறிமுகப்படுத்திய ‘நன்னிலம்’ திட்டத்தின் கீழ் 2.5- 5 ஏக்கர் வரையிலான நிலம் வாங்க 50% மானியத்துடன் கடனுதவி வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில், குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள்ளிருக்கும் 18 – 56 வயது வரை உள்ள பெண்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க விரும்புவோர் TAHDCO அலுவலகத்தில் நேரடியாக சென்றோ (அ) <

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இதனை ஷேர் பண்ணுங்க!

வேலூர் மக்களே இன்றைய காலத்தில் UPI பண பரிவர்த்தனைகள் அனைவரிடமும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800 419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் கிடைக்க வழிவகை செய்யப்படும். SHARE பண்ணுங்க!

காட்பாடி கிளித்தான்பட்டறை பகுதியில் விபச்சாரம் நடைபெறுவதாக காட்பாடி போலீசாருக்கு நேற்று (பிப்.12) ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது விபசாரத்தில் ஈடு [ ஈடுபடுத்தப்பட்ட பெங்களூருவை சேர்ந்த பெண்ணை போலீசார் மீட்டனர். இதையடுத்து பெண்ணை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய தேவராஜ் (29) கைது செய்தனர்.

மத்திய தொழிற்சங்கங்கள் அறிவித்த நாடு தழுவிய பொதுவேலை நிறுத்தத்தை ஒட்டி நேற்று (பிப்.12) வேலூரில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் புதிய தொழிலாளர் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்க நிர்வாகிகள் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அண்ணா சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்ட 185 பேரை போலீசார் கைது செய்தனர்.

வேலூர் மக்களே.., அனைத்து மகளிர் உரிமைத் தொகை திட்ட பயனாளிகளின் வங்கிக் கணக்கிலும் இன்று(பிப்.13) காலை ரூ.5,000 வரவு வைக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை இன்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். உங்களுக்கு இந்தப் பணம் வரவில்லை அல்லது மகளிர் உரிமைத் தொகை தொடர்பாக எந்த வித பிரச்னைகள் குறித்தும் புகார் அளிக்க<

கன்னிகாபுரத்தை சேர்ந்த உணவு டெலிவரி ஊழியர் ராம் பிரகாஷ் (25). இவர் 2022-ல் ஜெயலட்சுமியை காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இரு தினங்களுக்கு முன் இவர் போதையில் மனைவியுடன் தகராறு செய்துள்ளார். பின் பிரகாஷுக்கு அவரது நண்பர் போன் செய்தும் எடுக்காததால் சந்தேகமடைந்த அவர் வீட்டிற்கு வந்து பார்த்த போது பிரகாஷ் தூக்கில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து பாகாயம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கீழ்வடுகன்குட்டையை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் சதீஷ்குமார் (35). இவர் நேற்று மாலை தனது மாமனார் கோபியுடன் (62) பைக்கில் லத்தேரிக்கு சென்றனர். அப்போது பைக் நிலை தடுமாறி புளியமரத்தில் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் படுகாயமடைந்த 2 பேரையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் சதீஷ்குமார் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

அணைக்கட்டு அடுத்த பீஞ்சமந்தை மலை பகுதி முத்தனூர் கிராமத்தை சேந்தவர் அப்பாவு, கூலி தொழிலாளி. இவரது மனைவி பிரியா, நிறைமாத கர்ப்பிணி. பிரசவ வலியில் நேற்று துடித்த பிரியாவை வேலூர் பெண்ட்லென்ட் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் ஏற்றி கொண்டு வந்தனர். அப்போது ஓடும் ஆம்புலன்சிலேயே பிரியாவுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. தொடர்ந்து தாயும், சேயும் வேலூர் அரசு மருத்துவமனையில் பாதுகாப்பாக அனுமதிக்கப்பட்டனர்.
Sorry, no posts matched your criteria.