Vellore

News February 15, 2026

வேலூர்: தூக்கி வீசப்பட்ட முதியவர்!

image

பாகாயம் அருகே நேற்று (பிப்.14) மாலை 70 வயது முதியவர் சாலையை கடக்க முயன்ற்றுள்ளார். அப்போது எதிரே வந்த பஸ் மோதி சாலையில் தூக்கி வீசப்பட்டார். இவரை அப்பகுதி மக்கள் ஆம்புலன்ஸ் மூலம் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்த்தார். மேலும் காயம் அடைந்த முதியவர் வைத்திருந்த ரூ.9,375-யை மருத்துவ உதவியாளர் அனிதா உறவினர்களிடம் ஒப்படைத்தார். இந்த செயலுக்கு பாராட்டுகள் குவிந்துள்ளன.

News February 15, 2026

வேலூரில் கொடூரத்தின் உச்சம்!

image

கொல்லமங்கலத்தை சேர்ந்த கூலி தொழிலாளி ராகவன் (30). இவர் அகரம்சேரியை சேர்ந்த சுவேதாவை (28) காதலித்து திருமணம் செய்து கொண்டார். சுவேதாவை கொடுமைப்படுத்தியதால் கூலிப்படையினரால் ராகவன் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து பள்ளிகொண்டா போலீசார் சுவேதாவின் தந்தை அமுல்ராஜ், அப்பு ஆகியோரை கைது செய்தனர். இந்நிலையில் கூலிப்படையை சேர்ந்த சவின்குமார் (29), சுஜன் (19), ராமு (47) ஆகியோரை கைது செய்துள்ளனர்.

News February 15, 2026

வேலூர்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்!

image

வேலூர் மாவட்டத்தில் நேற்று (பிப்.14) இரவு முதல் இன்று (பிப்.15) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ அல்லது 100 என்ற எண்ணுக்கோ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!

News February 14, 2026

வேலூரில் இன்று செல்லவேண்டிய முக்கிய கோயில்!

image

வேலூர் மையப்பகுதியில் அமைந்துள்ள கோட்டையின் உள்ளே, வேலூர் ஜலகண்டேசுவரர் கோயில் அமைந்துள்ளது. இந்தியாவிலேயே அகழியோடு கூடிய ஒரே கோட்டை இதுவே ஆகும். இங்குள்ள மூலவர் ஸ்வரகண்டேஸ்வரர் என்றும், ஜலகண்டேஸ்வரர் என்றும் அழைக்கப்படுகின்றார். இன்று சனிப்பிரதோஷத்தை முன்னிட்டு, இங்கு சென்று வழிபட்டால் ஆயுள் விருத்தி பெரும், விபத்து பயம் நீங்கும், தடைபட்ட திருமணங்கள் நடக்கும் என நம்பப்படுகிறது. ஷேர் பண்ணுங்க!

News February 14, 2026

வேலூரில் டிராக்டர் வாங்க 80% மானியம்!

image

வேலூரில் புதிய டிராக்டர், பவர் டில்லர், ஓலை தூளாக்கும் கருவி, புதர் அகற்றும் கருவி உட்பட பல்வேறு வேளாண் கருவிகளை வாங்குவதற்கும், அதனை வைத்து வாடகை நிலையம் அமைப்பதற்கும் 80% வரை மானியம் வழங்குகிறது SMAM திட்டம். இந்த திட்டத்தின் கீழ் பலனடைய விரும்பும் நபர்கள், மேலும் தகவல்களுக்கு <>இங்கு க்ளிக்<<>> செய்யலாம் அல்லது வேளாண் துறை அலுவலகத்தை அணுகி தெரிந்துகொள்ளலாம். SHARE NOW!

News February 14, 2026

வேலூரில் பைக் வாங்க ரூ.50,000 மானியம்!

image

இந்திய அரசு கடந்த ஆண்டு பிரதம மந்திரி இ-டிரைவ் (PM E-DRIVE) என்ற புதிய திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இத்திட்டத்தின் கீழ், பொதுமக்கள் எலக்ட்ரிக் வாகனங்களை எளிதாக வாங்க முடியும். இருசக்கர வாகனங்களுக்கு ரூ.10,000 வரையும், 3சக்கர வாகனங்களுக்குரூ.25,000-ரூ.50,000 வரையும் மானியம் வழங்கப்படுகிறது. புதிய வாகனம் வாங்க ஆசைப்படுபவர்கள் <>இந்த லிங்கில்<<>> சென்று விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை உடனே ஷேர் பண்ணுங்க

News February 14, 2026

வேலூரில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் – கலெக்டர் தகவல்!

image

வேலூர் மாவட்டத்தில் வரும் பிப்ரவரி 21-ம் தேதி சனிக்கிழமை வேலூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் தனியார்துறை சார்பில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் 40-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்க உள்ளது. எனவே வேலூர் மாவட்டத்தை சார்ந்த வேலை தேடும் நபர்கள் கலந்துகொண்டு பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார்.

News February 14, 2026

வேலூர்: பெண் குழந்தைக்கு ரூ.50,000!

image

பெண் குழந்தைகளுக்கு ”முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்” மூலம் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000, அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். விவரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலத்தை அணுகவும். நல்ல தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!