India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வேலூர் மீன் மார்க்கெட்டில் ஞாயிற்றுக்கிழமையான இன்று (மார்ச்.31) மீன்களின் வரத்து அதிகரித்து காணப்பட்டது. மேலும் கடந்த வாரத்தை விட மீன்களின் விலையும் உயர்ந்தது. பெரிய வஞ்சரம் மீன் ரூ.1400, சிறிய வஞ்சரம் மீன் ரூ.800, இறால் ரூ.500 முதல் 450, கட்லா ரூ.160, நண்டு ரூ.400 முதல் 450, மத்தி ரூ.140 முதல் 160 என மீன்கள் விற்பனை செய்யப்பட்டது.
வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் மற்றும் வேட்பாளர்களின் ஏஜென்டுகள் உடன் தேர்தல் செலவினங்கள் தொடர்பான ஆலோசனை கூட்டம் தேர்தல் செலவின பார்வையாளர் அமித் கோயல் தலைமையில் இன்று (மார்ச்.31) நடந்தது. இந்த கூட்டத்தில் தேர்தல் செலவினங்களுக்கு என வேட்பாளர் தனி வங்கி கணக்கு தொடங்க வேண்டும் என்று தெரிவித்தார். இதில் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி கலந்து கொண்டார்.
மக்களவை தேர்தலில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி கட்சிகளின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்து வருகிறார். அதன்படி வேலூரில் நாளை (திங்கட்கிழமை) பள்ளிகொண்டா கந்தனேரியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அதிமுக வேட்பாளர் பசுபதிக்கு ஆதரவாக பிரசாரம் செய்கிறார். இதையொட்டி பிரமாண்ட மேடை, பந்தல் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.
குடியாத்தம் பகுதியை சேர்ந்தவர் சுதாகர். நேற்று (மார்ச் 30) இவரது வீட்டில் மின் கசிவு காரணமாக திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கியது. சிறிது நேரத்தில் தீ மளமளவென பரவி வீட்டில் இருந்த பிரிட்ஜ், பேன், மின்சாதன பொருட்கள் எரிந்து நாசமாகின. இதையடுத்து அப்பகுதி மக்கள் குடியாத்தம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
வேலூர் பாராளுமன்ற தொகுதியில் 31 பேர் போட்டியிடுகின்றனர். ஒரு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் அதிகப்பட்சம் நோட்டாவுடன் சேர்த்து 16 சின்னங்கள் மட்டுமே பொருத்த முடியும். எனவே கூடுதலாக ஒரு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் (பேலட் யூனிட்) பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.
குடியாத்தம் அலங்காநல்லூர் பாலாற்றில் மணல் கடத்துவதாக குடியாத்தம் தாலுகா போலீசாருக்கு நேற்று (மார்ச் 30) ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அப்பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு மாட்டு வண்டியில் மணல் கடத்தி வந்த 2 பேர் போலீசாரை கண்டதும் தப்பி ஓடினர். இதையடுத்து போலீசார் 2 மாட்டு வண்டிகளை மணலுடன் பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய 2 பேர் மீது வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே வேப்பூர் ஏரியில் குளித்து கொண்டிருந்த 4 பெண்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். குடியாத்தம் தங்கம் நகரை சேர்ந்த சரோஜா, அவரது மகள் லலிதா, சகோதரிகள் காஜியா , ப்ரீத்தி ஆகிய 4 பேர் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் இது குறித்து குடியாத்தம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு வேலூர் தொகுதியில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் என மொத்தம் 50 பேர் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர். இதில் 37 வேட்பாளர்களின் மனு ஏற்கப்பட்ட நிலையில், இன்று(மார்ச் 30) மதியம் 1 மணி வரை 5 வேட்பாளர்கள் தங்கள் மனுவை வாபஸ் பெற்றுள்ளதாக தேர்தல் நடத்தும் அலுவலரும் கலெக்டருமான சுப்புலெட்சுமி தெரிவித்துள்ளார்.
வேலூர் மக்களவை தொகுதியில் போட்டியிடும் மன்சூர் அலிகானுக்கு பலாப்பழம் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்திய ஜனநாயக புலிகள் கட்சி தலைவரான நடிகர் மன்சூர் அலிகான் வேலூர் தொகுதியில் களம் காணுகிறார். மன்சூர் அலிகான் உட்பட வேலூரில் 31 பேர் போட்டியிடுகின்றனர். சின்னம் ஒதுக்குவதில் தாமதமான நிலையில் தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டம், வேலப்பாடி பகுதியில் உள்ள ஸ்ரீ பெருமாள் கோயிலில் இன்று சனிக்கிழமை சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் சாமிக்கு மலர் அலங்காரம் மற்றும் சிறப்பு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பக்தர்கள் சுவாமி தரிசனம் மேற்கொண்டனர். மேலும் பக்தர்கள் கற்பூரம் ஏற்றி வழிபட்டனர். பின்னர் பக்தர்களுக்கு குங்குமம் பிரசாதம் வழங்கப்பட்டது.
Sorry, no posts matched your criteria.