Vellore

News April 21, 2024

வேலூர் முத்துரங்கம் அரசு கலைக்கல்லூரி சாதனை

image

இந்தியாவில் சிறந்த உயர்கல்வி நிறுவனங்கள் குறித்த தகவல்களை மத்திய கல்வி அமைச்சகம் மற்றும் தனியார் அமைப்புகள் ஒவ்வொரு ஆண்டும் வெளியிட்டு வருகின்றன. அந்த வகையில் மாநிலங்களில் கல்வி உலகம் (எஜூகேசன் வேல்டு) என்ற அமைப்பு 2024-25-ம் ஆண்டுக்கான சிறந்த உயர்கல்வி நிறுவனங்களின் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டு இருக்கிறது. அதில் வேலூர் முத்துரங்கம் அரசு கலைக் கல்லூரி இடம்பெற்றிருக்கிறது.

News April 21, 2024

சத்துவாச்சாரியில் வராகி அம்மன் ஆலயம்

image

வேலூர் சத்துவாச்சாரி பிரசித்தி பெற்ற ஸ்ரீ சாலை கெங்கைம்மன் ஆலயத்தில் 21.4.2023 இன்று காலை 7.30 மணி முதல் 9.மணிக்குள்
ஸ்ரீ வராஹி அம்மன் பிரதிஷ்டை நடைபெற்றது. இதில் கோவில் நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மன் அருளை பெற்றனர், இதற்கு முன்பு வராகிய அம்மனின் அருளை பெற சுற்றுவட்டாரப் பகுதிகளில் சென்று தரிசிக்க வேண்டி இருந்தது. இதன் மூலம் பக்தர்கள் மகிழ்ச்சி.

News April 21, 2024

வேலூர்: நேற்று குறைந்த வெயில்

image

வேலூர் மாவட்டத்தில் நேற்றை விட நேற்று வெயில் அளவு சற்று குறைந்து காணப்பட்டது. நேற்று 107.4°F ஆக இருந்த வெயில் இன்று  106°F பதிவானது. மேலும் வேலூரில் வெயிலுடன் அனல் காற்றும் வீசுவதால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். பொதுமக்கள் வெயில் தாக்கத்தில் இருந்து தப்பிக்க வெளியில் செல்லும் போது முன்னெச்சரிக்கையாக இருக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

News April 20, 2024

வேலூரில் சிறப்பு மருத்துவ முகாம்

image

அண்ணல் அம்பேத்கரின் 134வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு வேலூர் மாநகராட்சி காந்தி நகரில் அம்பேத்கர் சமூக சேவை அமைப்பு சார்பில் மருத்துவ முகாம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் இன்று நடந்தது.
இந்த நிகழ்வில் 120 ஏழை மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் கவுன்சிலர் ரீகன், அப்பு பால் பாலாஜி, கதிரவன்,சமூக ஆர்வலர் தினேஷ் சரவணன் உள்ளிட்டோர் இருந்தனர்.

News April 20, 2024

வேலூர் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் நன்றி மடல்

image

நாடாளுமன்றத் தேர்தல் முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெற்றது. அதிமுக சார்பில் வேலூர் நாடாளுமன்ற வேட்பாளர் டாக்டர் பசுபதி அவர்கள் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அவருக்காக ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்ட அனைவருக்கும் நன்றி கூறி வாழ்த்து மடல் அனுப்பியுள்ளார். அதில் தமிழ்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, அனைத்து அதிமுக உறுப்பினர்கள், பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

News April 20, 2024

வேலூர் ஸ்ரீபுரம் பொற்கோயிலில் ஏகாதசி விழா

image

வேலூர் ஸ்ரீபுரம் பொற்கோயில் வளாகத்தில் உள்ள ஸ்ரீ சீனிவாசன் பெருமாள் கோயிலில் ஏகாதசியை முன்னிட்டு நேற்றிரவு (ஏப்ரல் 19) ஸ்ரீ சக்தி அம்மா தலைமையில் 1008 பாரம்பரிய நெய் தீபம் ஏற்றி சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ஸ்ரீ சீனிவாச பெருமாளை தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது.

News April 20, 2024

வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு சீல்

image

வேலூர் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட வேலூர், அணைக்கட்டு, ஆம்பூர், வாணியம்பாடி, குடியாத்தம், கே.வி.குப்பம் ஆகிய பகுதிகளில் பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையமான வேலூர் தந்தை பெரியார் அரசு பொறியியல் கல்லூரியில் ஸ்ட்ராங் ரூமுக்கு தேர்தல் பொது பார்வையாளர் ரூபேஷ்குமார், கலெக்டர் சுப்புலட்சுமி முன்னிலையில் அதிகாரிகள் இன்று (ஏப்.20) பூட்டி சீல் வைத்தனர்.

News April 20, 2024

வேலூரில் நாளை டாஸ்மாக் கடைகள் விடுமுறை

image

வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகள், பார்கள் மற்றும் நட்சத்திர அந்தஸ்து ஹோட்டல்களில் உள்ள மதுபான பார்கள் நாளை (ஏப்ரல் 21) மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு விடுமுறை அளிக்கப்படுகிறது. மேலும் மது பானங்கள் விற்பனை செய்யக்கூடாது அதையும் மீறி விற்பனை செய்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் சுப்புலட்சுமி நேற்று (ஏப்.19)  தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

News April 20, 2024

வாக்கு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கும் பணி

image

வேலூர் நாடாளுமன்ற தொகுதி வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ள நிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லப்படும் பணிகள் தீவிரம் நடந்து வருகிறது. வேலூர் தொகுதிக்குட்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் வேலூர் தொரப்பாடியில் உள்ள தந்தை பெரியார் பொறியியல் கல்லூரியில் 3 அடுக்கு பாதுகாப்புடன் சிசிடிவி கேமரா கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளது.

News April 19, 2024

வேலூரில் 107.4°F வெயில்

image

வேலூர் மாவட்டத்தில் இன்று இந்த ஆண்டின் அதிகபட்ச வெயிலாக  107.4°F வெயில் பதிவானது. மேலும் வேலூரில் வெயிலுடன் அனல் காற்றும் வீசுவதால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். பொதுமக்கள் வெயில் தாக்கத்தில் இருந்து தப்பிக்க வெளியில் செல்லும் போது குடை, தண்ணீர் மற்றும் நீர்ச்சத்து நிறைந்த பழங்களை கொண்டு செல்ல மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.