India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வேலூர் மாவட்ட அறிவியல் மையத்தில் ‘எந்திரனியல் பயிற்சி பட்டறை’ 6ஆம் வகுப்பு முதல் பிளஸ்-1 மாணவர்களுக்கு மே 14, 15 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற உள்ளது. இந்த பயிற்சி பட்டறையில் இவி-3 ரோபாட்டின் பாகங்களை தொகுத்து வடிவமைத்து செயல் முறைபடுத்த பயிற்சி அளிக்கப்படும். பங்குபெற விரும்பும் பள்ளி மாணவர்கள் நேரில் முன்பதிவு செய்யவேண்டும். என மாவட்ட அறிவியல் அலுவலர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் அக்னி பாத் திட்டத்தில் ராணுவத்தில் அக்னி வீரர்களாக சேருவதற்கான எழுத்துத்தேர்வு ஆன்லைனில் நடைபெற்றது. வேலூர் கிரீன் சர்க்கிள் பகுதியில் உள்ள தனியார் நிறுவன வளாகத்தில் நேற்று (ஏப்ரல் 30) நடந்த தேர்வில் 400 பேர் கலந்து கொண்டனர். தேர்வு அறைக்குள் செல்வதற்கு முன்பு தேர்வாளர்கள் பலத்த சோதனைக்கு பின்னர் அனுமதிக்கப்பட்டனர். மின்னணு சாதன பொருட்கள் எடுத்து செல்ல அனுமதிக்கப்படவில்லை.
வேலூர் அரசு மருத்துவமனையில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின்கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கு நவீன செயற்கை கை, கால்கள் மருத்துவமனையிலேயே தயாரிக்கப்பட்டு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. எனவே செயற்கை கை, கால்கள் தேவைப்படுவோர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், அரசு மருத்துவமனையை அணுகி பதிவுசெய்யலாம் என கலெக்டர் சுப்புலெட்சுமி நேற்று (ஏப்.30) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
வேலூர் வடக்கு காவல் ஆய்வாளர் சீனிவாசன் தலைமையிலான போலீசார் நேற்று (ஏப்ரல் 30) வேலூர் புதிய பேருந்து நிலையம் அருகே சோதனை மேற்கொண்டனர்.
அங்கு ஆந்திர மாநிலத்தை சேர்ந்த பொட்டுலு வெங்கடேஷ் என்பவர் சட்டவிரோதமாக விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த சுமார் 30,000 ரூபாய் மதிப்புடைய 3 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் அவர் மீது கஞ்சா வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பிவைத்தனர்.
வேலூர் மாவட்டத்தில் இன்று (ஏப்ரல் 30) அதிகபட்ச வெயிலாக 106.9°F வெயில் பதிவானது. மேலும் வேலூரில் வெயிலுடன் அனல் காற்றும் வீசுவதால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். பொதுமக்கள் வெயில் தாக்கத்தில் இருந்து தப்பிக்க வெளியில் செல்லும் போது குடை, தண்ணீர் மற்றும் நீர்ச்சத்து நிறைந்த பழங்களை கொண்டு செல்ல மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
வேலூர் மாவட்டத்தில் ஆங்காங்கே துவரை பயிர் பயிரிடப்படுகிறது. பொய்கை அருகே பிள்ளையார்குப்பம், கந்தனேரி உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் அதிக அளவில் துவரை பயிர் பயிரிட்டு வருகின்றனர். இந்தநிலையில் வேலூர் அருகே பிள்ளையார்குப்பத்தில் பயிரிடப்பட்டுள்ள துவரை பயிர்கள் வெயில் காரணமாகவும், தண்ணீரின்றியும் கருகி உள்ளது.
இதனால் வேதனையடிந்து அந்த செடிகளை விவசாயிகள் அழித்து வருகின்றனர்.
வேலூர் மாவட்டத்திற்கு மஞ்சள் எச்சரிக்கையை விடுத்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம். மே 2, 3, 4 ஆகிய தேதிகளில் வெப்ப அலை வீசக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த வெப்ப அலையால், இயல்பைவிட 3 முதல் 5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை கூடுதலாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளது. இதனால் மக்கள் தங்களை வெயிலிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.
வேலூர் மாவட்டத்தில் தினமும் 100° F வெயில் கொளுத்தி வருகிறது. மேலும் வெயிலுடன் அனல் காற்றும் வீசுவதால் பொதுமக்கள் கடும் சிரமமடைந்து வருகின்றனர். பொதுமக்கள் வெயில் தாக்கத்தில் இருந்து தப்பிக்க குடைகள் பிடித்தபடியும், முகத்தை துணியால் மறைத்துக் கொண்டும் வெளியில் சென்று வருகின்றனர். மேலும் நீர் சத்து நிறைந்த பழங்கள் மற்றும் ஜூஸ் மற்றும் மோர் வாங்கி பருகி வருகின்றனர்.
வேலூர் மாநகராட்சியில் 2017ம் ஆண்டு ரூ.20,000 லஞ்சம் வாங்கிய வழக்கில் மாநகராட்சி ஆணையராக இருந்த குமார் லஞ்ச ஒழிப்பு காவல் துறையினரால் கையும் களவுமாக கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு வேலூர் மாவட்ட முதன்மை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் முன்னாள் வேலூர் மாநகராட்சி ஆணையர் குமாருக்கு 3 ஆண்டுகள் சிறை, 10 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி நேற்று (ஏப்ரல் 29) உத்தரவிட்டார்.
வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நெ.மணிவண்ணன் உத்தரவின்பேரில் நேற்று மாவட்ட காவல் அலுவலகத்தில் புகார் அளிக்க வந்த பொதுமக்களுக்கு சைபர் க்ரைம் காவல் ஆய்வாளர் புனிதா மற்றும் சைபர் க்ரைம் காவலர்கள் பெருகிவரும் இணையவழி குற்றங்கள் குறித்தும், அவற்றிலிருந்து கவனமுடன் இருக்க போதுமான வழிமுறைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் பலர் உடன் இருந்தனர்.
Sorry, no posts matched your criteria.