India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வேலூர் மாவட்டம் முழுவதும் இன்று (மே.3) காவல் ஆய்வாளர்களின் தலைமையிலான போலீசார் நடத்திய சோதனையில் 27 மதுபாட்டில்கள், 100 கிராம் கஞ்சா, 30 லிட்டர் கள்ளச்சாராயம் ஆகியவற்றை பறிமுதல் செய்து ஒரே நாளில் 7 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இது போன்ற குற்ற செயல்களில் ஈடுபடுபவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்பி மணிவண்ணன் எச்சரித்துள்ளார்.
வேலூர் மாவட்டத்தில் தினமும் 100 டிகிரிக்கு மேல் வெயில் கொளுத்தி வருகிறது. இன்று (மே.3) அதிகபட்ச வெயிலாக 108.5°F வெயில் பதிவானது. இது நேற்றை விட வெயில் அளவு இன்று சற்று குறைந்து காணப்பட்டது. மேலும் இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக மாலை நேரங்களில் வேலூர் சுற்று வட்டார பகுதிகளில் குளிர்ந்த காற்று வீசுவதால் பொதுமக்கள் சற்று நிம்மதி அடைந்து வருகின்றனர்.
வேலூர் மாவட்டத்தில் மனநலம் பாதிக்கப்பட்டு சுற்றித்திரியும் மாற்றுத்திறனாளிகளுக்கு புதியதாக மனநல இல்லம் அமைப்பதற்கான ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி தலைமையில் இன்று (மே.3) மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடந்தது. இக்கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சரவணன், மாவட்ட மனநல மருத்துவர் சிவாஜிராவ், மாவட்ட சமூக நல அலுவலர் உமா மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
காட்பாடி விஐடி பல்கலைக்கழகத்தில் நடப்பு கல்வியாண்டில் பி.டெக் பட்டப் படிப்பில் சேருவதற்கான சேர்க்கை முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. மாணவர்கள் சேர்க்கை முடிவுகளை https://ugresults.vit.ac.in/viteee”, “www.vit.ac.in.”என்ற இணையதளம் வழியாக தெரிந்துகொள்ளலாம். விஐடியின் நுழைவுத் தேர்வில் முதல் இடத்தை அரியானாவை சேர்ந்த ரூபிந்தர் சிங், 2-ம் இடத்தை ராஜஸ்தானை சேர்ந்த் பானு மகேஷ் செக்குரி பிடித்துள்ளனர்.
வேலூரியில் அடுத்த 4 நாட்களுக்கு (மே.6) இடி, மின்னலுடன் கூடிய பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கி.மீ முதல் 40 கி.மீ வரை) ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், வேலூர் மாவட்டத்தில் மே.7 ஆம் தேதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நேற்று (மே.02), வேலூரியில் ஓரிரு இடங்களில் மழை பெய்தது குறிப்பிடத்தக்கது.
வேலூர் ஆட்சியரக கூட்டரங்கில் ஆட்சியர் சுப்புலெட்சுமி தலைமையில் இன்று நீட் தேர்வு முன்னேற்பாடு பணிகள் குறித்து ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் முத்தையா, காவல் துணை கண்காணிப்பாளர் பாஸ்கரன் வருவாய் கோட்டாட்சியர்கள் கவிதா (வேலூர்), சுபலட்சுமி (குடியாத்தம்), துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) கலியமூர்த்தி, மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் பகுதியில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை ஆட்டுச்சந்தை நடைபெறுவது வழக்கம். அதேபோல் இன்று (மே 3) நடந்த சந்தையில், வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து குறைந்த அளவிலான ஆடுகளை கொண்டு வந்து விற்பனை செய்தனர். இந்நிலையில் ரூபாய் 10 லட்சத்திற்கும் அதிகமாக ஆடுகள் விற்பனை நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன் (23). கடந்த சில தினங்களுக்கு முன்பு கஞ்சா விற்றதாக இவரை குடியாத்தம் போலீசார் கைதுசெய்தனர். மணிகண்டன் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதால் அவரை குண்டர் சட்டத்தில் கைதுசெய்ய எஸ்பி மணிவண்ணன் கலெக்டருக்கு பரிந்துரைசெய்தார். இதையடுத்து கலெக்டர் சுப்புலட்சுமி நேற்று (மே 2) மணிகண்டனை குண்டர் சட்டத்தின்கீழ் கைதுசெய்ய உத்தரவிட்டார்.
வேலூர் மாநகர திமுக சார்பில் கோடை வெயிலில் பொதுமக்கள் தாகம் தணிக்க தண்ணீர் பந்தல் திறக்கும் நிகழ்ச்சி வேலூர் பழைய மாநகராட்சி அலுவலகம் அருகே நேற்று நடந்தது.
வேலூர் மாநகர செயலாளரும், எம்எல்ஏவுமான கார்த்திகேயன் தண்ணீர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு இளநீர், தர்பூசணி, மோர், குளிர்பானங்களை வழங்கினார். இதில் மாநகராட்சி மேயர் சுஜாதா, மாவட்ட அவைத்தலைவர் முகமதுசகி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
வேலூர் மாவட்டத்தில் இன்று (மே 2) அதிகபட்ச வெயிலாக 110.5°F வெயில் பதிவானது. பகல் நேரத்தில் பொதுமக்கள் முதியவர்கள் கர்ப்பிணி பெண்கள் வெளியில் வருவதை தவிர்க்குமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் மாலை வேலூர் சுற்று வட்டார பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்ததால் குளிர்ந்த காற்று வீசியது. இதையடுத்து பொதுமக்கள் சற்று நிம்மதி அடைந்தனர்.
Sorry, no posts matched your criteria.