India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நேற்று (செப்டம்பர் 23) நடந்தது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலட்சுமி தலைமை தாங்கினார். இதில் பொதுமக்களிடம் இருந்து மொத்தம் 450 மனுக்களை பெற்று சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் வழங்கி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். மேலும் இதில் துறை சார்ந்த அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
வேலூர் மாவட்டம் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள டவுன் ஹாலில் இருந்து ஒருங்கிணைந்து குழந்தை வளர்ச்சி திட்ட துறை சார்பில் போஷன் அபியான் திட்டத்தின் கீழ் தேசிய ஊட்டச்சத்து மாத விழா விழிப்புணர்வு பேரணியை நாளை (செப்டம்பர் 24) காலை 9 மணிக்கு மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி மணிக்கு கொடியசைத்து துவக்கி வைக்க உள்ளார். என மாவட்ட நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் சட்ட விரோதமாக மது பாட்டில்கள் கடத்துவதை தடுக்கும் விதமாக மாவட்டம் முழுவதும் இன்று (செப்டம்பர் 23) காவல் ஆய்வாளர்களின் தலைமையிலான போலீசார் நடத்திய சோதனையில் 53 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக 2 பேர் மீது மதுவிலக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டத்தில் உள்ள ஏரி மற்றும் குட்டைகளில் இருந்து கடந்த ஜுன் மாதம் முதல் களிமண், வண்டல் மண் மற்றும் விவசாயம், மண்பாண்டத் தொழிலுக்கு இலவசமாக எடுத்து கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது. தற்போது மண் எடுப்பதில் சில புகார்கள் வருவதால் மாவட்டத்தில் உள்ள 120 ஏரி மற்றும் குட்டைகளில் இருந்து மண் எடுக்க தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என கலெக்டர் சுப்புலெட்சுமி இன்று (செப்23) அறிவித்துள்ளார்.
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக காயிதே மில்லத் கூட்டரங்கில் இன்று (செப்டம்பர் 23) நடந்த நிகழ்ச்சியில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் 11 பயனாளிகளுக்கு 9,10,100 மதிப்பில் நவீன செயற்கை கால்களை மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி வழங்கினார். இதில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் சரவணன் உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
வேலூர் மாவட்டத்தில் விளையாட்டு துறையில் தேசிய அளவிலான போட்டிகளில் வெற்றிகளை பெற்று தற்போது நலிந்த நிலையில் உள்ள முன்னாள் விளையாட்டு வீரர்களுக்கு மாத ஓய்வூதியம் பெற www.sdat.tn.gov.in- என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு நலன் அலுவலரை தொடர்பு கொள்ளலாம். விண்ணப்பங்களை வரும் 31-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என ஆட்சியர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார்.
வேலூர் சலவன்பேட்டையை சேர்ந்த முருகேசன்(62), மாலதி(60) தம்பதியான இவர்கள் அதே பகுதியை சேர்ந்த கண்ணன் என்பவருக்கு 11 லட்சம் கடன் கொடுத்துள்ளனர். இந்நிலையில் கண்ணன் கடந்த 3மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இதையடுத்து முருகேசன் கண்ணன் வீட்டிற்கு சென்று அவரது மகன்களிடம் பணத்தை கேட்டுள்ளார். அதற்கு அவர்கள் தர முடியாது என தெரிவித்துள்ளனர். இதனால் விரக்தி அடைந்த இருவரும் நேற்று தற்கொலை செய்து கொண்டனர்.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் சார்பில் வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகா கருங்காலி கிராமத்தில் 402.52 லட்சம் மதிப்பில் 2000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட விஞ்ஞான முறையிலான வட்ட செயல் முறை கிடங்கை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக இன்று (செப்டம்பர் 23) திறந்த வைக்க உள்ளார். இந்த நிகழ்ச்சியில் கலெக்டர், பாராளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர் கலந்து கொள்ள உள்ளனர்.
ஒடுகத்தூரில் உள்ள மலைப்பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் நேற்று (செப்டம்பர் 22) பீஞ்சமந்தை உள்ளிட்ட மலைப்பகுதியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் தலைமையில் டிரோன் கேமிரா மூலம் சோதனை செய்தனர். இந்த சோதனையின் போது டிஎஸ்பி சாரதி, வேலூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் உள்ளிட்ட போலீசார் கலந்து கொண்டனர்.
காட்பாடி காங்கேயநல்லூர் அரசு பள்ளி மாணவிகள் வளைகாப்பு நடத்தி சமூக வலைதளத்தில் பதிவிட்டனர். இது குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மணிமொழி விசாரணை நடத்தி வகுப்பு ஆசிரியை சாமுண்டீஸ்வரி பணியிடை நீக்கம் செய்தார். இதை கண்டித்து நாளை (செப் 23) ஆசிரியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டம் நடத்த அனைத்து வகை ஆசிரியர்கள் கூட்டமைப்பின் சார்பில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.