Vellore

News May 7, 2024

வேலூரில் வெளுத்து வாங்கும் கனமழை

image

வேலூர் மாவட்டத்தில் இன்று(மே 7) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கோடை வெயில் பாரபட்சமின்றி நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அவ்வப்போது சில மாவட்டங்களில் மழை பெய்து மக்களை சிறிது இளைப்பாற வைக்கிறது. அதன்படி இன்று வேலூர் உட்பட 13 மாவட்டங்களில் கனமழை பெய்துவருகிறது.

News May 7, 2024

கடும் நடவடிக்கை: வேலூர் எஸ்பி எச்சரிக்கை

image

வேலூர் மாவட்டம் முழுவதும் நேற்று (மே 6) காவல் ஆய்வாளர்கள் தலைமையில் போலீசார் நடத்திய சோதனையில் 60 லிட்டர் கள்ளச்சாராயம், 47 மதுபாட்டில்கள், கடத்தலுக்கு பயன்படுத்திய 1 இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்து ஒரே நாளில் 5 பேர் மீது மதுவிலக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் இதுபோன்ற குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்பி மணிவண்ணன் எச்சரித்துள்ளார்.

News May 7, 2024

வேலூரில் தண்ணீர் பந்தல் திறப்பு

image

வேலூர் மாநகர் மாவட்ட மதிமுக சார்பில் தொரப்பாடியில் தண்ணீர் பந்தல் திறக்கும் நிகழ்ச்சி நேற்று (மே 6) நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக மதிமுக வேலூர் மாவட்ட செயலாளர் ஜி.கோபி கலந்துகொண்டு தண்ணீர் பந்தலை திறந்துவைத்து பொதுமக்களுக்கு மோர், தர்ப்பூசணி, வெள்ளரிக்காய், குளிர்பானங்களை வழங்கினார். இதில் மாநில விவசாயிகள் அணி எஸ்.டி.குணசேகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

News May 6, 2024

பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்: கலெக்டர் அறிவிப்பு

image

வேலூரில் முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தில் விண்ணப்பித்தவர்களில் 19 வயது பூர்த்தி அடைந்து முதிர்வு தொகை வேண்டி விண்ணப்பம் அளிக்காதவர்கள் வங்கி கணக்கு புத்தகம் (தனி கணக்கு), மாற்றுச் சான்றிதழ், 10 வது மதிப்பெண் சான்றிதழ்  ஆகிய சான்றுகளுடன் சம்மந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலகத்திலுள்ள அலுவலர்களிடம் விண்ணப்பம் அளிக்குமாறு கலெக்டர் சுப்புலெட்சுமி இன்று (மே 6) தெரிவித்துள்ளார்.

News May 6, 2024

தீ விபத்துகளை தடுக்க ஒருங்கிணைப்பு குழு கூட்டம்

image

வேலூர் மாவட்டத்தில் தீ விபத்துக்கள் ஏற்படாமல் பாதுகாத்தல் மற்றும் தீ தடுப்பு நடவடிக்கைகள் குறித்த மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர்  சுப்புலெட்சுமி தலைமையில் இன்று (மே 6) ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடந்தது. இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி, வருவாய் கோட்டாட்சியர்கள், காவல்துறை, தீயணைப்பு துறை, சுகாதாரத்துறை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

News May 6, 2024

28 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி

image

வேலூர் மாவட்டத்தில் 12 ஆம் பொது தேர்வில் 138 பள்ளிகளில் இருந்து 13535 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். இதில் 28 பள்ளிகள் 100 சதவிகிதம் தேர்ச்சியை பெற்றுள்ளனர். இதில் 2 அரசு பள்ளிகளும் அடங்கும். மாணவர்களை காட்டிலும் இந்த ஆண்டும் மாணவியர்கள் அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர் என மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி இன்று (மே 6) தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

News May 6, 2024

வேலூர் எஸ்பி தலைமையில் குற்ற ஆய்வு கூட்டம்

image

வேலூர் எஸ்பி அலுவலகத்தில் இன்று (மே 6) எஸ்பி மணிவண்ணன்  தலைமையில் மாதாந்திர குற்ற ஆய்வுக் கூட்டம் நடந்தது. இதில் கடந்த மாதம் மாவட்டம் முழுவதும் நடைபெற்ற குற்றங்கள் குறித்தும், நிலுவையிலுள்ள குற்ற வழக்குகளை விரைந்து முடிக்கவும், சரித்திர பதிவேடு குற்றவாளிகள்  மீது கடுமையான நடவடிக்கைகள் எடுப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதில் காவல்துறை, சிறைத்துறை, வனத்துறை உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

News May 6, 2024

வேலூர்: தீ விபத்து..!

image

வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மின் சாதன பராமரிப்பு அறையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முழுவதும் மின் தடை ஏற்பட்டது.அச்சமயம் லிப்டில் சிக்கிய பொதுமக்கள், அதிகாரிகளை கலெக்டர் அலுவலக ஊழியர்கள் மீட்டனர். இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முழுவதும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

News May 6, 2024

12ம் வகுப்பு தேர்வில் 92.53 % பேர் தேர்ச்சி

image

தமிழகத்தில் பிளஸ் 2 வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று ( மே 6) வெளியானது. வேலூர் மாவட்டத்தில் 13535 மாணவ மாணவிகள் பிளஸ் 2 தேர்வு எழுதினர். இதில் 12524 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்த தேர்ச்சி விகிதம் 92.53 சதவீதமாக உள்ளது. இந்த தேர்வில் மாணவர்கள் 5393 பேரும், மாணவிகள் 7131 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளதாக பள்ளிக்கல்விதுறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

News May 6, 2024

+2 மாணவர்களே இதை செய்யுங்கள்

image

வேலூர் மாவட்டத்தில் 12-ம் வகுப்பு பொது தேர்வு மாணவ மாணவியர் எழுதியுள்ளனர். இன்று தேர்வு முடிவுகள் வெளியாக உள்ள நிலையில் மாணவ-மாணவிகளும், பெற்றோரும் www.tnresults.nic.in, www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் மதிப்பெண்களை பார்க்கலாம் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது. எனவே வீட்டில் இருந்தபடியே தங்களது தேர்வு முடிவுகளில் அறிந்து கொள்ளலாம்.