Vellore

News November 14, 2024

காவல்துறை இரவு ரோந்து பணி வெளியீடு

image

வேலூர், காட்பாடி, குடியாத்தம் அதன் சுற்றுவட்டார பகுதியில் இன்று இரவு ஒரு வந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்கள் சற்று முன் வெளியிடப்பட்டது. ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாருக்கு தகவல்கள் மேலே உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்க தொடர்பு கொள்ளலாம்.

News November 14, 2024

வேலூர் சிறப்பு பஸ்கள் மூலம் ரூ. 68 லட்சம் கூடுதல் வருவாய்

image

தீபாவளி பண்டிகை முன்னிட்டு வேலூர் மண்டலத்தில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்பட்ட அனைத்து பஸ்களின் மூலம் 6 கோடியே 51 லட்சம் வருமானம் கிடைத்துள்ளது. இதில் 276 சிறப்பு பஸ்கள் மூலம் 5 நாட்களில் 68 லட்சம் ரூபாய் கூடுதல் வருமானம் போக்குவரத்து கழகத்துக்கு கிடைத்துள்ளது என போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

News November 14, 2024

வேலூர் கோட்ட மின் நுகர்வோர் குறை தீர்வு கூட்டம்

image

வேலூர் மின்பகிர்மான வட்டத்துக்கு உட்பட்ட வேலூர் கோட்ட மின்நுகர்வோர் குறைதீர்வு கூட்டம் இன்று (நவம்பர் 14) காலை 11 மணிக்கு காட்பாடி காந்திநகரில் உள்ள கோட்ட அலுவலகத்தில் நடைபெற உள்ளது. எனவே வேலூர் கோட்டத்துக்கு உட்பட்ட மின் நுகர்வோர்கள் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகள் மற்றும் குறைகளை தெரிவித்து தீர்வு காணலாம் என மின்வாரிய செயற்பொறியாளர் ஆரோக்கிய அற்புதராஜ் தெரிவித்துள்ளார்.

News November 13, 2024

இரவு ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு

image

வேலூர் மாவட்டத்தின் அதன் சுற்றுவட்டார பகுதியில் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்கள் சற்று முன் வெளியிடப்பட்டது. ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாருக்கு தகவல்கள் மேலே உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்க தொடர்பு கொள்ளலாம்.

News November 13, 2024

புகைப்படம் கண்காட்சியை பார்வையிட்ட கலெக்டர், எம்பி

image

வேலூர் மாவட்டம் கீ.வ குப்பம் வேலம்பட்டு கிராமத்தில் செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த தமிழ்நாடு அரசின் சாதனை விளக்கப் புகைப்படம் கண்காட்சியினை மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி, வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் மற்றும் ஒன்றிய குழு தலைவர் ரவிச்சந்திரன் மற்றும் பலரும் அதைப் பார்வையிட்டனர்.

News November 13, 2024

வேலூரில் முதியவருக்கு 17 ஆண்டுகள் சிறை

image

வேலூரில் முதியவருக்கு 17 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. 2018ஆம் ஆண்டு, விருதம்பட்டு பகுதியில் 12 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட புகாரின் பேரில் காட்பாடி போலீசார் முதியவர் சேகரை கைது செய்தனர். இந்த வழக்கில் தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதில், முதியவருக்கு 17 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.

News November 13, 2024

வேலூர் மாவட்ட விவசாயிகளுக்கு கலெக்டர் தகவல்

image

முதலமைச்சர் உழவர் பாதுகாப்பு திட்டத்தில் வேலூர் மாவட்ட விவசாயிகள் நலத்திட்டங்களுக்கு விண்ணப்பிக்கலாம். இத் திட்டங்களின் கீழ் பயன்பெற விரும்பும் பயனாளிகள் தொடர்புடைய கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர் மற்றும் வட்டத்தில் உள்ள சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியரை தொடர்புகொண்டு பயன்பெறலாம் என வேலூர் கலெக்டர் சுப்புலட்சுமி செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

News November 13, 2024

வேலூர் மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு

image

வேலூர் மாவட்டத்தில் நவம்பர் மாதத்திற்கான மனுநீதி நாள் முகாம் கே.வி.குப்பம் வட்டம், வடுகன்தாங்கல் அடுத்த வேலம்பட்டு கிராமத்தில் நாளை (நவம்பர் 13) மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலட்சுமி தலைமையில் நடைபெற உள்ளது. இதில் பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை மனுவாக அளிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News November 12, 2024

வேலூரில் 7 துணை தாசில்தார்கள் பணியிட மாற்றம்

image

வேலூர் மாவட்டத்தில் 7 துணை தாசில்தார்களை பணியிட மாற்றம் செய்து மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி இன்று உத்தரவிட்டார். அதன்படி, அணைக்கட்டு தலைமையிடத்து துணை தாசில்தார் சுதா தேர்தல் அலுவலக துணை தாசில்தாராகவும், அங்கு பணியாற்றிய செந்தாமரை தாலுகா அலுவலக துணை தாசில்தாராகவும் உள்பட மொத்தம் 7 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

News November 12, 2024

இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசார் விவரங்கள்

image

வேலூர் மாவட்டத்தின் அதன் சுற்றுவட்டார பகுதியில் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்கள் சற்று முன் வெளியிடப்பட்டது. ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் தகவல்கள் மேலே உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. புகார்களை இந்த எண்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.

error: Content is protected !!