Vellore

News March 4, 2026

வேலூர் கலெக்டர் ஆபீசில் முக்கிய ஆலோசனை!

image

வேலூர் மாவட்ட தேர்தல் அலுவலர் சுப்புலட்சுமி தலைமையில் நேற்று (மார்ச்.3) அனைத்துதுறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில், சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 முன்னிட்டு தேர்தல் செலவினங்களை கண்காணிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும் இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவராமன், கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலர் சிவசுப்பிரமணியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

News March 4, 2026

வேலூரில் கருத்து கேட்ட திமுகவினர்!

image

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திமுக 2026 சட்டமன்ற தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவின் கருத்து கேட்பு கூட்டம் நேற்று (மார்ச் 3) நடைபெற்றது. இதில் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள முக்கிய பிரமுகர்கள், வியாபார சங்கத்தினர் தங்களுக்கு தேவையான கோரிக்கை மனுவை தேர்தல் தயாரிப்பு குழுவிடம் அளித்தனர்.

News March 4, 2026

வேலூரில் வீடே அதிர கேட்ட சத்தம்!

image

பேரணாம்பட்டு பங்களாமேடு பகுதியில் வசித்து வருபவர் முன்னி. இவரது தாய் ஜமீலாவின் மறைவுக்காக வீட்டை பூட்டிவிட்டுச் சென்றுள்ளனர். அப்போது வீட்டில் மின்கசிவு ஏற்பட்டு, பயங்கர சத்தத்துடன் பிரிட்ஜ் வெடித்துத் தீப்பிடித்தது. தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர். மேலும், வீட்டில் இருந்த ரூ.20,000 பணம் மற்றும் பல பொருட்கள் எரிந்து நாசமானது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News March 4, 2026

வேலூர் மாவட்ட காவல்துறை இரவு வந்து பணி விவரம்

image

வேலூர் மாவட்டத்தில் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News March 3, 2026

வேலூர் : நர்ஸ் வேலை வேண்டுமா? ரூ.34,800 சம்பளம்!

image

எய்ம்ஸ்-ல் செவிலியர் அலுவலர்களுக்கான 2,551 காலிபணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணிக்கு பி.எஸ்சி. (ஹானர்ஸ்) நர்சிங், பி.எஸ்சி. நர்சிங் அல்லது டிப்ளமோ நர்சிங் (டிஜிஎன்எம்) முடித்திருந்தால் போதும். இதற்கான சம்பளம் ரூ.34,800/- முதல் வழங்கப்படும். இந்தப் பணிக்கு இதற்கான கடைசி நாள்: மார்ச்.16. விண்ணப்பிக்க இங்கு <>கிளிக்<<>> செய்யவும். ஷேர் பண்ணி வேலை தேடுவோருக்கு உதவி பண்ணுங்க.

News March 3, 2026

காட்பாடியில் போக்குவரத்து மாற்றம் போலீசார் தகவல்

image

பழைய காட்பாடியில் 76ம்ஆண்டு மாடு விடும் விழா வரும் 5-ம் தேதி நடைபெற உள்ளது. இதையடுத்து அன்று காலை 6 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை சித்தூர் பஸ் நிறுத்தம் முதல் பிரம்மபுரம் செல்லும் சாலையில் போக்குவரத்திற்கு முற்றிலும் தடை செய்யப்படுகிறது. பிரம்மபுரம் செல்லும் (கனரக வாகனங்கள் தவிர்த்து) ஓடை பிள்ளையார் கோயில் ஜங்ஷனில் திரும்பி வி.ஜி.ராவ் நகர் வழியாக பிரம்மபுரம் செல்லலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

News March 3, 2026

வேலூர் : தேர்வு இல்லை – ஆதார் சேவை மையத்தில் வேலை!

image

இந்தியா முழுவதும் உள்ள ஆதார் சேவை மையங்களில் காலியாக உள்ள ஆபரேட்டர் (Operator) மற்றும் சூப்பர்வைசர் (Supervisor) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 1. வகை: மத்திய அரசு வேலை, 2. பணியிடங்கள்: 252, 3. வயது: 18 வயது பூர்த்தியடைந்தவர், 4. சம்பளம்: ரூ.20,000, 5. தகுதி: 12ஆம் வகுப்பு, 6. கடைசி தேதி: 10.03.2026, 7. விண்ணப்பிக்க: <>CLICK HERE<<>>. இதனை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

News March 3, 2026

வேலூரில் 25% மானியத்துடன் ரூ.10 லட்சம் கடன்!

image

வேலூர் பெண்களே.. யாரையும் எதிர்பார்க்காமல் சுயமாக சம்பாதித்து முன்னேற ஆசையா? உங்களுக்காக ‘ தமிழ்நாடு பெண்கள் தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்டம்’ கொண்டுவரப்பட்டுள்ளது. இதில், அதிகபட்சம் 25% (ரூ.2 லட்சம் வரை) மானியத்துடன், ரூ.10 லட்சம் வரை கடன் வழங்கப்படும். ஆர்வமுள்ளவர்கள் இங்கு <>க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை அணுகலாம். SHARE NOW!

News March 3, 2026

வேலூரில் சர்க்கரை நோய்க்கு இலவச சிகிச்சை!

image

வேலூர் மாவட்ட மக்களே.., உங்களுக்கோ, உங்களது உறவினர்களுக்கோ சர்க்கரை நோய் பாதிப்புள்ளதா..? அந்த பாதிப்பால் பாதங்களில் புண்கள் ஏற்பட்டுள்ளதா..? இனி கவலை வேண்டாம். தமிழக அரசின் ‘பாதம் பாதுகாக்கும் திட்டம்’ மூலமாக இலவசமாக சிகிச்சை அளிக்கப்படும். உடனே அரசு மருத்துவக் கல்லூரிகள், மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களை அணுகலாம். உடனடி இலவச சிகிச்சை அளிக்கப்படும். SHARE பண்ணுங்க!

News March 3, 2026

வேலூரில் 207 போலீசாருக்கு ப்ரோமோஷன்!

image

காவல்துறையில் பணியாற்றக்கூடிய போலீசாருக்கு பதவிக்காலம் அடிப்படையில் பதவி உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி 2013-ல் பணியில் சேர்ந்த 169 பேர் முதல் நிலை காவலரில் இருந்து தலைமைக் காவலராகவும், 2016-ல் சேர்ந்த 38 பேர் 2-ம் நிலை காவலரில் இருந்து முதல் நிலை காவலராகவும் பதவி உயர்வு பெற்றுள்ளனர். வேலூர் மாவட்டத்தில் மொத்தம் 207 பேர் பதவி உயர்வு பெற்றுள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

error: Content is protected !!