India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
காட்பாடியில் உள்ள விஐடி பல்கலைக்கழகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகள் தின விழா நாளை (டிசம்பர் 3) நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக தமிழக நிர்வாக துறை அமைச்சர் துரைமுருகன் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார். இதில் கலெக்டர், எம்பி, எம்எல்ஏக்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவ மழைக் காலம் தொடங்கியுள்ள நிலையில் டெங்கு, வைரஸ் காய்ச்சல் ஆகிய தொற்று நோய்கள் பரவக்கூடிய நிலையில் இருப்பதால் பொதுமக்கள் குடிநீரை காய்ச்சி அருந்த வேண்டும் , கைகளை அடிக்கடி சோப்பு போட்டு நன்கு கழுவ வேண்டும். காய்ச்சல் இருந்தால் உடனடியாக அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம், நகர்புற அரசு மருத்துவமனையை அணுக வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட மாங்காய் மண்டி பகுதியில் உள்ள நிக்கல்சன் கால்வாயில் 2-ம் நாளாக தூர்வாரும் பணிகளை வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் சுப்புலட்சுமி இன்று (டிசம்பர் 2) பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது, வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா ஆனந்தகுமார், ஆணையாளர் ஜானகி ரவீந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
ஃபெஞ்சல் புயல் காரணமாக வேலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து இரண்டு நாட்களாக அதிகனமழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மழைநீர் சூழ்ந்துள்ளது. இந்த நிலையில் வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு இன்று(டிச 2) விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
வேலூர் மாவட்டத்தின் அதன் சுற்றுவட்டார பகுதியில் இன்று (டிசம்பர் 01.12.2024) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்கள் சற்று முன் வெளியிடப்பட்டன. ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாருக்கான தகவல்கள் மேலே உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்க தொடர்பு கொள்ளலாம்.
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த சேர்க்காடு பகுதியில் உள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் 2024ஆம் ஆண்டின் பருவ தேர்வுகள் நாளை (டிசம்பர் 2) நடைபெற இருந்த நிலையில் கனமழையின் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது என பல்கலைக்கழக நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வுகள் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.
ஃபெஞ்சல் புயல் காரணமாக வேலூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் மழைநீர் சூழ்ந்துள்ளது. இந்த நிலையில் வேலூர் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
வேலூர் மாநகராட்சி பகுதியில் மழையின் காரணமாக பல்வேறு மழைநீரால் பாதிக்கப்படக்கூடிய இடங்கள் கண்டறியப்பட்டு அப்பகுதி கண்காணிக்கப்படுகிறது. மழை வெள்ளம் அதிகரிக்கும் பட்சத்தில் அவர்களை அருகில் உள்ள நிவாரண மையங்களில் தங்கவைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக மாநகராட்சி பகுதியில் 15 இடங்களில் நிவாரண முகாம்கள் தயார் நிலையில் உள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வேலூர் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் மின்தடை ஏற்பட்டது. மின்தடை குறித்து புகார்கள் வரப்பெற்றவுடன் மின்ஊழியர்கள் அங்கு சென்று சரி செய்தனர். மின் தடைக்கு 1912 என்ற எண்ணில் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம். 9487899841, 9487899842, 9487899843, ஆகிய வாட்ஸ்அப் எண்களிலும் பொதுமக்கள் எந்த நேரத்திலும் புகார் தெரிவிக்கலாம் என மின்வாரிய அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
வேலூர் மாவட்டத்தில் சட்ட விரோதமாக கஞ்சா மற்றும் குட்கா விற்பவர்கள் தொடர்பாக நேற்று மாவட்டம் முழுவதும் நடத்திய சோதனையில், 2.500 கிலோ கிராம் கஞ்சா மற்றும் 200 கிராம் குட்கா பறிமுதல் செய்யப்பட்டு, 1 குட்கா வழக்கு மற்றும் 1 கஞ்சா வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.