India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

வேலூர் மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளில் 1,427 வாக்குச்சாவடிகள் உள்ளது. இதில் மண்டல அலுவலர்கள் நடத்திய ஆய்வில் 147 வாக்குச்சாவடி மையங்களில் குறைகள் கண்டறியப்பட்டு உள்ளது. இதையடுத்து வரும் 20-ம் தேதிக்குள் குறைகள் உள்ள 147 வாக்குச்சாவடி மையங்களில் குறைகளை சீரமைத்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என ஆட்சியர் சுப்புலட்சுமி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் சிலிண்டர் புக் செய்வதில் சிரம நிலை தொடர்கிறது. இந்நிலையில், உங்களின் GPAY மூலமாகவே உங்களுக்கான சிலிண்டரை புக் செய்யலாம். GPAY செயலில் உள்ள கேஸ் புக்கிங் என்ற ஆப்ஷனை கிளிக் பண்ணுங்க. அதில், உங்களது மொபைல் நம்பர், அல்லது கேஸ் ஐடியை அளித்து லிங்க் செய்தால் போதும், உடனடையாக பணத்தை செலுத்தி புக் செய்யலாம். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE!

வேலூர் மாவட்டத்தில் உள்ள ஈர நிலங்களை பாதுகாப்பது மற்றும் வனப்பகுதிகளில் ஏற்படும் வன தீயை கட்டுப்படுத்துவது தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம் ஆட்சியர் சுப்புலட்சுமி தலைமையில் நேற்று (மார்ச்.11) ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடந்தது. இதில் மாவட்ட வன அலுவலர் அசோக்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் சிவசுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

வேலூர் மாவட்டம், அணைக்கட்டு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சதுப்பேரி ஏரி 20 கோடி ரூபாய் செலவில் சுற்றுலா தலமாக உருவாக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று (மார்ச்.11) அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் ஏ.பி.நந்தகுமார் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

வேலூர் மாவட்ட மக்களே.., உங்கள் வீட்டு இல்லத்தரசிகள் சுயமாக தொழில் தொடங்க உதவும் நோக்கத்தில், அரசு சார்பாக ‘கிரைண்டர் மானிய திட்டம்’ உள்ளது. இதன் மூலம், பெண்களுக்கு ரூ.5,000 மானியமாக வழங்கப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் உடனே உரிய ஆவணங்களுடன் மாவட்ட சமூக நல அலுவலகத்தை அணுகவும். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க. யாருக்காவது உதவியாக இருக்கும்.

வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரியில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்கள் வந்தது. இதையடுத்து இன்று (மார்ச் 11) வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய் உதவியுடன் நீதிமன்றம் வளாகம் முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இறுதியில் வெடிகுண்டு புரளி என தெரியவந்தது.

வேலூர் மாவட்டத்தில் இன்று (மார்ச்- 11) இரவு 10 மணி முதல் நாளை (மார்ச்- 12) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் எரிவாயு உருளை மற்றும் பெட்ரோலிய பொருட்கள் இருப்பு குறித்து எண்ணெய் நிறுவன பிரதிநிதிகளுடனான ஆலோசனைக்கூட்டம் ஆட்சியர் சுப்புலெட்சுமி தலைமையில் இன்று (மார்ச்.11) கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. இதில் மாவட்ட வருவாய் அலுவலர்
சிவசுப்பிரமணியன், மாவட்ட வழங்கல் அலுவலர்
சரவணன் மற்றும் எண்ணெய் நிறுவன பிரதிநிதகள் கலந்து கொண்டனர்.

வேலூரில் நீங்கள் பார்க்க வேண்டிய முக்கிய 10 இடங்கள். 1. ஜலகண்டேஸ்வரர் கோயில் 2. ஸ்ரீலட்சுமி பொற்கோயில் 3. ரத்னகிரி முருகன் கோயில் 4. பெரியார் பூங்கா 5. கைகல் நீர்வீழ்ச்சிகள் 6. அமிர்தி விலங்கியல் பூங்கா 7. பாலமதி ஹில்ஸ் 8. ஸ்ரீ மார்கபந்தீஸ்வரர் கோவில் 9. வைனு பாப்பா ஆய்வகம் 10. மாவட்ட அறிவியல் மையம். இது தவிர வேறு இடங்கள் இருந்தால் மறக்காம கமெண்ட் பண்ணிட்டு. ஷேர் பண்ணுங்க

வேலூர் மக்களே, இணையதள பயன்பாடு அதிகரிக்க ஆன்லைன் மோசடிகளும் அதிகரிக்கிறது. மோசடிக்கு மூலப்பொருள் சிம் கார்டுதான். மோசடியாளர்கள் மற்றவர்கள் பெயரில் உள்ள சிம் கார்டுகளைதான் மோசடிக்கு பயன்படுத்துகின்றனர். <
Sorry, no posts matched your criteria.