India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வேலூர் மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதியை வீட்டு வேலைக்கு பயன்படுத்திய சிறைத்துறை டி.ஐ.ஜி ராஜலட்சுமி மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், அதிகாரிகள் தங்களது அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவது தீவிரமாக கவனிக்கப்படும் என நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி வேலூர் மாவட்டத்தில் சிறப்பு சுருக்க திருத்தம் பணிகள் 2025 வரைவு வாக்காளர் பட்டியல் மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சித் தலைவருமான சுப்புலெட்சுமி இன்று பிற்பகல் 3 மணியளவில் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சியினர் முன்னிலையில் வெளியிட உள்ளார் என தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.
மருத்துவமனைகள், பள்ளிகள், கோர்ட், வழிபாட்டுத் தலங்கள் போன்ற அமைதி காக்கப்படும் இடங்களில் பட்டாசுகள் வெடிப்பதை தவிர்க்க வேண்டும். குடிசை பகுதிகள், எளிதில் தீப்பற்றிக் கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசு வெடிக்க கூடாது உள்ளிட்டவற்றை வழிமுறைகளை கடைப்பிடித்து, பொதுமக்கள் மாசற்ற தீபாவளியை கொண்டாட வேண்டும் என வேலூர் மாவட்டம் ஆட்சியர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார்.
வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி வேலூர் மாவட்டத்தில் சிறப்பு சுருக்க திருத்தம் பணிகள் 2025 வரைவு வாக்காளர் பட்டியல் மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சித் தலைவருமான சுப்புலெட்சுமி நாளை பிற்பகல் 3 மணியளவில் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சியினர் முன்னிலையில் வெளியிட உள்ளார் என தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.
தீபாவளி பண்டிகை முன்னிட்டு வேலூர் மாவட்டத்தில் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெறும் பயனாளிகள் தங்கள் பகுதிக்கு உட்பட்ட நியாய விலைக் கடைகளில் அக்டோபர் 29-ம் தேதி முதல் இலவச வேட்டி, சேலை பெற்று பயனடையுமாறு வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி இன்று தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
வேலூர் தொரப்பாடியில் உள்ள தந்தை பெரியார் அரசினர் பொறியியற் கல்லூரியில் 8.65 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள உள் விளையாட்டு அரங்கத்தை நாளை (அக்டோபர் 29) காணொளி காட்சி வாயிலாக தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்த வைக்க உள்ளார். இதில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ள உள்ளனர் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்கத்தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழா 3 நாட்கள் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பாதுகாப்பு பணிக்காக வேலூர் மாவட்டத்தில் இருந்து எஸ்பி மதிவாணன் தலைமையில் 1 ஏடிஎஸ்பி, 2 டிஎஸ்பிக்கள், 7 இன்ஸ்பெக்டர்கள் உட்பட 250 பேர் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு இன்று (அக்டோபர் 28) புறப்பட்டு சென்றனர். என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
பெங்களூருவில் இருந்து ரேஷன் அரிசி ஏற்றிக்கொண்டு வேலூருக்கு லாரி ஒன்று வந்தது. நேற்று ஒடுக்கத்தூர் அருகே சென்றுகொண்டிருந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து லாரி சாலை ஓரத்தில் இருந்த பள்ளத்தில் சாய்ந்து விபத்து ஏற்பட்டது. இதில் டிரைவர், கிளீனர் ஆகியோர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இது குறித்து தகவலறிந்து வந்த வேப்பங்குப்பம் போலீசார் லாரியை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
தொடர் மழை காரணமாக அணைக்கட்டு அடுத்த புலிமேடு வனப்பகுதியில் உள்ள அருவியில் தண்ணீர் கொட்டுகிறது. இதனால் இங்கு குளிக்க வரும் மக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் உதவி வனப்பாதுகாவலர் மணிவண்ணன் தலைமையிலான வனத்துறையினர் அதிகளவில் கொட்டும் அருவி நீரில் குளிக்க வேண்டாம் என்று விழிப்புணர்வு பணியில் ஈடுபட்டுள்ளதுடன், கண்காணிப்பிலும் ஈடுபட்டுள்ளனர்.
வேலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் சைபர் கிரைம் இயங்கி வருகிறது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் உத்தரவின் பேரில், அரசு அதிகாரிகளுக்கு வாட்ஸ்அப் மூலமாக போதைப் பொருள் கடத்தல் தொடர்பாக ரகசிய தகவல்கள் தருவதாக கூறி கமிஷன் பணத்தைக் கேட்டு ஏமாற்றி வந்த கர்நாடக மாநிலம் பெங்களூருவை சார்ந்த தாவூத் இப்ராஹிம் என்பவர், சைபர் கிரைம் காவல் நிலைய காவல் ஆய்வாளர் ரஜினிகுமார் தலைமையில் கைது செய்யப்பட்டார்.
Sorry, no posts matched your criteria.