Vellore

News October 31, 2024

வேலூர் மாவட்டத்தில் 800 போலீசார் பாதுகாப்பு

image

தீபாவளியையொட்டி வேலூர் மாவட்டத்தில் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் 800 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பழைய, புதிய பஸ் நிலையம், காட்பாடி ரயில் நிலையம், வழிபாட்டு தலங்கள், மாநில எல்லை சோதனை சாவடிகள், மாவட்ட எல்லைகளில் சீருடையிலும், சாதாரண உடையிலும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

News October 31, 2024

வேலூர் மக்களே பாதுகாப்பாக கொண்டாடுங்க

image

தீபாவளி பண்டிகை இன்று கொண்டாடப்படும் நிலையில் பட்டாசுகளை வெடிக்கும்போது கவனம் தேவை. பெற்றோர்கள் தங்கள் மேற்பார்வையில் குழந்தைகள் பட்டாசுகளை வெடிக்க அனுமதிக்க வேண்டும். மேலும், கையில் வைத்து பட்டாசுகள் வெடிப்பதை தவிர்க்கவும். பட்டாசு வெடிக்கும்போது அருகே ஒரு பக்கெட் தண்ணீர் மற்றும் மண் வைத்திருப்பது அவசியம். விபத்தில்லா தீபாவளியை கொண்டாட வேலூர் மக்களுக்கு வே2நியூஸ் சார்பாக வாழ்த்துகள்.

News October 31, 2024

வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை

image

வேலூர் மாவட்டம் முழுவதும் காவல் ஆய்வாளர்களின் தலைமையிலான போலீசார் நேற்று (அக்டோபர் 30) நடத்திய சோதனையில் 55 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் இது தொடர்பாக 3 பேர் மீது மதுவிலக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இத்தகைய தொடர் குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் எச்சரித்துள்ளார்.

News October 30, 2024

வேலூர் ஸ்ரீபுரம் நாராயணி பீடத்தில் நாளை சிறப்பு பூஜை

image

உலக நன்மைக்காகவும் இயற்கை வளங்களை பாதுகாக்க வேண்டியும் வேலூர் மாவட்டம் அரியூரில் உள்ள ஸ்ரீபுரம் ஸ்ரீ நாராயணி பீடத்தில் நாளை அக்டோபர் 31-ம் தேதி கோயில் வளாகத்தில் 10,008 அகல் விளக்கில் ஸ்ரீ சக்கர வடிவில் நெய் தீபம் ஏற்றி சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியை ஸ்ரீ சக்தி அம்மா அவர்கள் தலைமை தாங்கி தொடங்கி வைப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

News October 30, 2024

கூட்டுறவு வங்கி மூலம் கடன் உதவி: கலெக்டர் தகவல்

image

தமிழ்நாடு தொழில் கூட்டுறவு வங்கி மூலம் சிறு, குறு உற்பத்தி நிறுவனங்களுக்கு கலைஞர் கடன் உதவி திட்டத்தின் கீழ் கடனுதவி வழங்கப்பட உள்ளது என வேலூர் மாவட்ட கலெக்டர் சுப்புலட்சுமி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் மற்றும் வேலூர்-ஆற்காடு சாலையில் இயங்கி வரும் தாய்கோ வங்கி கிளை மேலாளரை நேரில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

News October 30, 2024

தீபாவளிக்காக தயார் நிலையில் தீயணைப்பு வீரர்கள்

image

வடமேற்கு மண்டலத்துக்கு உட்பட்ட வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், செங்கல்பட்டு ஆகிய 7 மாவட்டங்களில், 51 தீயணைப்பு நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. தீபாவளி பண்டிகையொட்டி, இந்த மாவட்டங்களில் பாதுகாப்பு பணிக்கு 24 மணி நேரமும், 600க்கும் மேற்பட்ட தீயணைக்கும் வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர் என தீயணைப்பு துறை உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

News October 30, 2024

வேலூர் மாவட்டத்தில் 12,97,273 வாக்காளர்கள்

image

வேலூர் மாவட்டத்தில் வரைவு வாக்காளர்கள் தயாரிக்கப்பட்டு 5 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை கலெக்டர் சுப்புலெட்சுமி அங்கீகரிக்கப்பட்ட அரசியல்கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று வெளியிட்டார். இதில் 6,26,288 ஆண்கள், 6,70,813 பெண்கள், மூன்றாம் பாலினத்தவர்கள் 172 பேர் என்று மொத்தம் 12,97,273 வாக்காளர்கள் உள்ளனர்.

News October 30, 2024

வேலூர் சிறையில் 26 பேருக்கு பரோல் வழங்கப்பட்டது

image

தமிழக சிறைகளில் நீண்ட காலம் தண்டனை அனுபவித்து வரும் சிறைவாசிகள் தீபாவளி பண்டிகையை தங்களின் குடும்பத்துடன் கொண்டாடும் வகையில் வேலூர் மாவட்டம் தொரப்பாடியில் உள்ள மத்திய சிறையில் இருந்து நன்னடத்தை சிறைவாசிகள் 26 பேருக்கு 3 முதல் 6 நாட்கள் வரை பரோல் வழங்கப்பட்டுள்ளது என சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

News October 30, 2024

வேலூர் மாவட்டம் 54 மது பாட்டில்கள் பறிமுதல்

image

வேலூர் மாவட்டம் முழுவதும் காவல் ஆய்வாளர்களின் தலைமையிலான போலீசார் நேற்று (அக்டோபர் 29) நடத்திய சோதனையில் 54 மது பாட்டில்கள், 32 கிலோ குட்கா பொருட்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், இது தொடர்பாக 3 பேர் மீது மதுவிலக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் தெரிவித்துள்ளார்.

News October 29, 2024

வேலூர் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிட்ட ஆட்சியர்

image

வேலூர் மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளின் வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சித்தலைவருமான சுப்புலட்சுமி இன்று (அக்டோபர் 29) ஆட்சியர் அலுவலகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்களின் முன்னிலையில் வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில் தேர்தல் வட்டாட்சியர் சத்தியமூர்த்தி உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!