Tuticorin

News January 5, 2025

தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு பணி அதிகாரிகள் நியமனம்

image

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று (04.01.2025) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு திருச்செந்தூர், விளாத்திகுளம், மணியாச்சி, கோவில்பட்டி, சாத்தான்குளம் மற்றும் ஸ்ரீவைகுண்டம் ஆகிய பகுதிகளில் நியமிக்கப்பட்ட அதிகாரிகள் அவசர காலத்திற்கு அவர்களை அழைக்கலாம். மேலும் 100 அல்லது தூத்துக்குடி மாவட்ட ஹலோ போலீஸ் 95141 44100 எண்ணை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.

News January 4, 2025

தூத்துக்குடி மாவட்ட ஊராட்சி தலைவர்கள் பதவிக்காலம் நிறைவு

image

தூத்துக்குடி மாவட்டத்தில் 2019 டிசம்பர் மாதம் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தல் மூலம் பதவி பெற்ற ஊராட்சி தலைவர் மற்றும் துணைத்தலைவர்களின் பதவி காலம் நாளை(5.1.25)
முடிவடைகிறது. எனவே பதவி காலம் முடிவதற்கு முன்பு தமது பொறுப்புகள் அனைத்தையும் சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலரிடம் ஒப்படைக்குமாறு மாவட்ட உதவி இயக்குனர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

News January 4, 2025

ஜன.9 முதல் பொங்கல் தொகுப்பு – தூத்துக்குடி கலெக்டர்

image

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு அரசு சார்பில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டுகிறது. அந்த வகையில், தூத்துக்குடி மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்கான டோக்கன்கள் நேற்று முதல் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. மாவட்டத்தில் உள்ள 988 நியாய விலை கடைகள் மூலம் வரும் 9ம் தேதி முதல் பொங்கல் தொகுப்பு விநியோகம் செய்யப்படும் என ஆட்சியர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.

News January 4, 2025

தூத்துக்குடி ஆதிதிராவிட மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

image

ஆதிதிராவிட வீட்டு வசதி வாரியம் மற்றும் மேம்பாட்டு கழகம் (தாட்கோ) சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்களுக்கு டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் குரூப் 2A தேர்வுக்கு இலவச பயிற்சி வழங்கப்பட உள்ளது. இதில் பங்கேற்க விரும்பும் தேர்வர்கள் <>இங்கே கிளிக் செய்து<<>> விண்ணப்பிக்கலாம் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் இன்று(ஜன.4) தெரிவித்துள்ளார். உங்கள் நண்பர்களுக்கு பகீர்ந்து தெரியபடுத்தவும்.

News January 4, 2025

அண்ணா பிறந்த நாளையொட்டி சைக்கிள் போட்டி

image

அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு உடற் தகுதி மேம்பாடு பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், இன்று(ஜனவரி 4) தூத்துக்குடியில் பள்ளி மாணவர்களுக்கான சைக்கிள் போட்டி நடைபெற்றது. தூத்துக்குடி தருவை மைதானத்தில் தொடங்கிய சைக்கிள் போட்டியை மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் கொடியசைத்து தொடங்கி வைத்தார். மாணவர்கள் மற்றும் மாணவிகளுக்கென போட்டிகள் தனித்தனியாக நடைபெற்றன.

News January 4, 2025

பொங்கல் பரிசுத்தொகுப்பு குறித்து புகார் அளிக்க

image

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 5,30,261 அரிசி பெறும் ரேஷன்கார்டுதாரர்களுக்கு நேற்று முதல் பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் வினியோகம் செய்யப்படுகிறது. வருகிற ஜன.9ம் தேதி முதல் பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகம் செய்யப்பட உள்ளது. பொங்கல் பரிசுத்தொகுப்பு வினியோகம் குறித்த புகார்கள் ஏதுமிருப்பின் பொதுமக்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகக் கட்டுப்பாட்டு அறை 0461-2341471 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம். *ஷேர்

News January 3, 2025

530362 குடும்பங்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு

image

தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு வழங்கும் பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன்கள் இன்று(ஜன.3) முதல் வீடு வீடாக சென்று வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் மாவட்டத்தில் 988 நியாய விலை கடைகள் மூலம் 5 லட்சத்து 30261 குடும்ப அட்டைதாரர்களுக்கும் 500 இலங்கை அகதிகள் முகாம்களில் வாழ்பவர்களுக்கும் வழங்கப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் தெரிவித்துள்ளார்.

News January 3, 2025

தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை பள்ளிகள் செயல்படும்!

image

தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்படும் அனைத்து வகை பள்ளிகளும் மழையின் காரணமாக( 13 .12 .24 )அன்று விடுமுறை அளிக்கப்பட்டது. அதை ஈடு செய்யும் வகையில் நாளை (04.01.2025 )முழு வேலை நாளாக தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து பள்ளிகளும் இயங்கும் என மாவட்ட முதன்மை கல்வி துறை முதன்மை அலுவலர் அறிவித்துள்ளார்.

News January 3, 2025

பள்ளி மாணாக்கர்களுக்கான சைக்கிள் போட்டி 

image

முன்னாள் முதலமைச்சர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு அரங்கில் வைத்து நாளை (ஜன.04) பள்ளி மாணவ மாணவிகளுக்கான சைக்கிள் போட்டி நடைபெற உள்ளது. மாவட்ட நிர்வாகம் சார்பில் நடைபெறும் இந்த போட்டியில் வயது அடிப்படையில் நடைபெறுகிறது. மாணவர் மற்றும் மாணவியருக்கு தனித்தனியாக போட்டிகள் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் தெரிவித்துள்ளார்.

News January 3, 2025

வரும் 6ஆம் தேதி வாக்காளர் இறுதிப் பட்டியல் வெளியீடு

image

தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு ஜனவரி ஒன்றாம் தேதியை தகுதி நாளாக கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு முறை திருத்தப் பணிகள் நடைபெற்றன. கடந்த ஆண்டு அக்டோபர் 26ஆம் தேதி எல்லா மனுக்களும் முடிவு செய்யப்பட்டது. இதனை அடுத்து வரும் ஆறாம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து காலை இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளதாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!