India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை 10.ம் தேதி பசுபதி பாண்டியன் 13ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு தாளமுத்துநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேலஅலங்காரதட்டில் உள்ள பசுபதிபாண்டியன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த வருபவர்கள் மற்றும் நிகழ்ச்சி அமைப்பாளர்கள் விதிக்கப்பட்ட விதிமுறைகள் வழிமுறைகளை பின்பற்றுமாறும் காலை 6 மணி முதல் 5 மணி வரை மட்டுமே நடத்திட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் குறைந்த கட்டணத்தில் நிறைந்த சேவைகளை வழங்கி வரும் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் HD செட்டாப் பாக்ஸ்களை பெற்று புதிதாக கேபிள் ஆபரேட்டராக பதிவு செய்ய விரும்புபவர்கள் www.tactv.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி தனி வட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்ப படிவத்தினை பூர்த்தி செய்து அளிக்கலாம் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
தூத்துக்குடி தருவைக்குளத்தின் தெற்கு பகுதியில் பழைய மலட்டாற்றின் வடக்கு பகுதியில் நேற்று (ஜன.8) கிராபைட் உடன் கூடிய மண்பாண்டத் துண்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த மண்பாண்ட துண்டு ஆனது சுமார் 3000 ஆண்டு பழமை வாய்ந்தது எனக் கூறப்படுகிறது. எனவே இதனை தொல்லியல் துறையினர் நேரடியாக வந்து ஆய்வு செய்ய வேண்டும் என அந்த பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
வரும் பொங்கல் பண்டிகைக்கு பெங்களூரில் இருந்து தூத்துக்குடிக்கு ஜனவரி 10ஆம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்படும் என தென்னக ரயில்வே அறிவிப்புகள் வெளியிட்டுள்ளது. தூத்துக்குடி மைசூர் மற்றும் பெங்களூர் ஜனவரி 11ஆம் தேதி தூத்துக்குடியில் இருந்து பெங்களூரை நோக்கி சிறப்பு ரயில் இயக்கப்படும் என தென்னக ரயில்வே அறிவித்தது.
ஆண்டுதோறும் சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். பிரதோஷ காலங்களில் சிவ வழிபாடு மிகவும் சிறப்பு வாய்ந்தது என்பது ஐதீகம். அதுவும் சனி பிரதோஷ வழிபாடு செய்வது மிகவும் சிறப்புமிக்கது. அந்த வகையில் இந்த ஆண்டு(2025) 24 பிரதோஷ நாட்கள் வருகின்றன. இதில் 5 நாட்கள் சனி பிரதோஷம் ஆகும். ஜன.11, மே.10, 24 மற்றும் அக்.4,18 ஆகும்.
ஜனவரி 14 அன்று பொங்கலை முன்னிட்டு, பல்வேறு இடங்களில் இருந்து பக்தர்கள் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு பாதயாத்திரை செல்வது வழக்கம். இதை தொடர்ந்து பொங்கல் அன்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அதிகாலை 1 மணிக்கே நடை திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 1.30 மணிக்கு விஸ்வரூபம், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் அதைத் தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெறவுள்ளன.
தூத்துக்குடி மாவட்டம் ஏரலில் புதிதாக தொடக்கப்பட்டுள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2024-ஆம் ஆண்டுக்கான பயிற்சியாளர்கள் நேரடி சேர்க்கை மேற்கொள்ள 31.12.2024 வரை கால அவகாசம் வழங்கப்பட்ட நிலையில், தற்போது 31.01.2025 வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் தனது அறிக்கையில் தகவல் தெரிவித்துள்ளார்.
தசராவிற்கு புகழ்பெற்ற தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் நேற்று(ஜன.7) இரவு மார்கழி கடைசி செவ்வாயை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. பின்னர் அம்மன் அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
கோரம்பள்ளத்தில் உள்ள தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில், நேற்று(ஜன.7) குற்றம் சம்பந்தமான ஆய்வு கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கஞ்சா, புகையிலை போன்ற போதைப் பொருட்களை கடத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க அறிவுரைகள் வழங்கப்பட்டன.
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் வரும் ஜன.10 ஆம் தேதி மீனவர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் வைத்து நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.