Tuticorin

News January 10, 2025

வடகிழக்கு பருவமழை பயிர் சேத பாதிப்புகள் குறித்து ஆலோசனை

image

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் வடகிழக்கு பருவமழை 2024 பயிர் சேதம் தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து தூத்துக்குடி மாவட்ட கணிப்பாய்வு அலுவலர்/முதன்மைச் செயலாளர் ஆணையர் கோ.பிரகாஷ், தலைமையில் துறைசார்ந்த அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் இளம்பகவத், மாநகராட்சி ஆணையாளர் மதுபாலன், டி.ஆர்.ஒ உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

News January 10, 2025

பெரியாரை எதிர்ப்பவர்கள் பற்றி கனிமொழி விமர்சனம்

image

தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி இன்று தனது முகநூல் பக்கத்தில் பகுத்தறிவு – சமத்துவம் – பெண் விடுதலை – அறிவியல் வளர்ச்சி – தமிழ்நாட்டின் முன்னேற்றம் எனும் முற்போக்கு சிந்தனைகளை முன்வைக்கும் அனைவருக்கும் தந்தை பெரியாரே தலைவர். அதற்கெதிராக கருத்தியல் கொண்டவர்கள் அவரை எதிர்த்து எதிர்த்து ஓய்ந்து போகட்டும். சூரியனை எதிர்ப்பவர்கள் சூடுபட்டுத்தான் திருந்துவார்கள் எனக் குறிப்பிட்டுள்ளார்

News January 10, 2025

பயிற்சி ஸ்ரீராம் கணக்கெடுப்பு ஆலோசனை கூட்டம்

image

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கில் வைத்து இன்று வடகிழக்கு பருவமழை மற்றும் பயிர் சேதங்கள் குறித்து கணக்கீடு செய்வது சம்பந்தமான ஆலோசனை கூட்டம். மாவட்ட முதன்மை கண்காணிப்பு அலுவலர் பிரகாஷ் தலைமைகள் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

News January 10, 2025

கொசுவத்தி சுருளை தின்ற 3 வயது சிறுவன் 

image

மூப்பன்பட்டி கிராமம் ஜெ.ஜெ.நகரைச் சேர்ந்த செல்வகுமார் என்பவரின் மகன் பிரகதீஷ்குமார் வயது 3, கயத்தாறு, புதுக்கோட்டையில் உள்ள பாட்டி வீட்டிற்கு வந்த சிறுவன் கொசுவத்தி சுருளை கடித்து தின்ற சிறுவனை 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். இதுகுறித்து கயத்தாறு போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. ( குழந்தைகளின் கண்களில் படாதவாறு நச்சு பொருட்களை உபயோகிக்கவும்)

News January 10, 2025

ஒதுக்கப்பட்ட நேரத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு

image

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று முதல் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது, இந்நிலையில் பொங்கல் பரிசு தொகை வாங்கும் குடும்ப அட்டைதாரர்கள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள டோக்கனில் குறிப்பிடப்பட்ட நேரத்தில் வந்து பொங்கல் பரிசு தொகுப்பை பெற்றுக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் கேட்டுக் கொண்டுள்ளார்.

News January 10, 2025

சித்திரம்பட்டி விரைவில் தூத்துக்குடியில் இணைக்கப்படும்

image

கோவில்பட்டி அருகில் உள்ள சித்திரம்பட்டி கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம் நடந்தது. முகாமிற்கு தலைமை வகித்து கலெக்டர் இளம்பகவத் பேசிகையில், சித்திரம்பட்டி கிராமம் வருவாய் மாவட்டம் தூத்துக்குடி மாவட்டமாக இருந்தாலும், வளர்ச்சிப் பிரிவு தென்காசி மாவட்டத்தில் உள்ளது. இதனை சரி செய்வதற்கான முயற்சிகளை நாம் எடுத்து வருகிறோம். விரைவில் இந்த கிராமம் தூத்துக்குடி மாவட்ட வளர்ச்சிப்பிரிவில் இணைக்கப்படும்.

News January 10, 2025

சீமான் மீது எஸ் பி ஆபிஸில் புகார் மனு

image

தந்தை பெரியாரை இழிவாக பேசியதாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நேற்று தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆபீஸில் புகார் மனு அளிக்கப்பட்டது. திராவிட விடுதலைக் கழகம் சார்பில் அதன் பரப்புரைச் செயலாளர் பால் பிரபாகரன் தலைமையில் சீமானை குண்டர் சட்டத்தில் கைது செய்ய இந்த புகார் மனுவில் கேட்டுக்கொள்ளப்பட்டது.

News January 9, 2025

திருப்பதி பலி விவகாரம்: தூத்துக்குடி எம்பி இரங்கல்

image

தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி இன்று தனது முகநூல் பக்கத்தில், “திருப்பதியில் நேற்று கூட்டநெரிசலில் சிக்கி, தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண் உட்பட 6 பேர் உயிரிழந்த செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது; அவர்களது குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்; மருத்துவமனையில் சிகிச்சைப்‌ பெற்று வரும் 40க்கும் மேற்பட்டவர்கள் விரைந்து நலம்பெற விழைகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

News January 9, 2025

தூத்துக்குடி போலீஸ் முக்கிய அறிவிப்பு

image

தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை 10.ம் தேதி பசுபதி பாண்டியன் 13ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு தாளமுத்துநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேலஅலங்காரதட்டில் உள்ள பசுபதிபாண்டியன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த வருபவர்கள் மற்றும் நிகழ்ச்சி அமைப்பாளர்கள் விதிக்கப்பட்ட விதிமுறைகள் வழிமுறைகளை பின்பற்றுமாறும் காலை 6 மணி முதல் 5 மணி வரை மட்டுமே நடத்திட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News January 9, 2025

புதிய உள்ளூர் கேபிள் ஆபரேட்டராக அரசு அழைப்பு

image

தூத்துக்குடி மாவட்டத்தில் குறைந்த கட்டணத்தில் நிறைந்த சேவைகளை வழங்கி வரும் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் HD செட்டாப் பாக்ஸ்களை பெற்று புதிதாக கேபிள் ஆபரேட்டராக பதிவு செய்ய விரும்புபவர்கள் www.tactv.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி தனி வட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்ப படிவத்தினை பூர்த்தி செய்து அளிக்கலாம் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

error: Content is protected !!