India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணிக்கு திருச்செந்தூர் செயற்பொறியாளர் அலுவலகத்தில் வைத்து மின் நுகர்வோர்கள் குறைதீர்க்கும் நற்கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் திருச்செந்தூர் சுற்றுப்பகுதியை சேர்ந்த நுகர்வோர்கள் தங்களது குறைகளை தெரிவித்து, இதில் உரிய தீர்வுகளை பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மக்களே, பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள பெண்கள், மாற்றுத்திறனாளிகள் சுயசார்புடன் வாழ சத்யவாணி முத்து அம்மையார் நினைவாக தையல் இயந்திரங்கள் இலவசமாக வழங்கபடுகின்றன. ஆண்டு வருமானம் ரூ.72,000-க்கும் குறைவாக உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பிக்க உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் அல்லது தூத்துக்குடி மாவட்ட சமூக நல அலுவலரை அனுகலாம். SHARE பண்ணுங்க

இன்றைய காலக்கட்டத்தில் செல்போன் என்பது இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது. அத்தகைய செல்போன் தொலைந்து விட்டால் பலருக்கு என்ன செய்வதென்று தெரியாது?. அப்படி உங்களது போன் தொலைந்து / திருடப்பட்டுவிட்டால் <

தூத்துக்குடி மக்களே, இந்த மழை நேரத்தில் வீட்டில் கரண்ட் இல்லையா? வோல்டேஜ் பிரச்சனையா? EB ஆபிஸ்-க்கு அலைய வேண்டியதில்லை. வீட்டில் இருந்தே WHATSAPP மூலம் 94458 50811, 94431 11912 இந்த நம்பரில் புகைப்படத்துடன் உங்கள் புகாரை பதிவு செய்யலாம். மேலும், கால் செய்து புகார் அளிக்க, 94987 94987 இந்த நம்பரை தொடர்பு கொள்ளலாம். அதிக பயனுள்ள இந்த தகவலை எல்லோருக்கும் SHARE பண்ணி உதவுங்க.

லக்பதி திதி யோஜனா திட்டத்தின் கீழ் பெண்கள் தொழில் தொடங்குவதற்கு ரூ.5 லட்சம் வரை வட்டியில்லா கடன் வழங்கப்படுகிறது. இதற்கு மகளிர் சுய உதவிக் குழுவில் உறுப்பினராக இருக்கும் 18 -50 வயதுக்குட்பட்ட பெண்கள் விண்ணப்பிக்கலாம். ஆதார், பான் கார்டு, வருமான சான்று, சுய உதவிக்குழு உறுப்பினர் சான்றிதழுடன் அருகிலுள்ள சுய உதவிக்குழு அலுவலங்கள் (அ) <

ஈரான் மீதான தாக்குதல் பற்றிய செய்திகளால் மிகவும் வருத்தமடைகிறேன். போர் உறுதியற்ற தன்மையையும், மனித துன்பத்தையும் மட்டுமே தீவிரப்படுத்துகிறது. ஈரானில் உள்ள இந்தியர்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும். அவர்களின் பாதுகாப்பிற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என தூத்துக்குடி எம்பி கனிமொழி தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் மாசி திருவிழாவை முன்னிட்டு நபார்டு சார்பில் பனைத் திருவிழா வரும் 3-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க விருப்பமுள்ள பனை தொழில் செய்பவர்கள் <

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் வரும் மார்ச்.03ம் தேதி சந்திர கிரகணத்தை முன்னிட்டு பகல் 12 மணி வரையும், அதனை தொடர்ந்து இரவு 8 மணி முதல் 9.30 மணி வரை மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். இடைப்பட்ட நேரத்தில் பக்தர்கள்ளுக்கு அனுமதி இல்லை என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. *ஷேர் பண்ணுங்க.

தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் 12 வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி சாத்தான்குளம், திருச்செந்தூர், கருங்குளம், ஆழ்வார்திருநகரி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நிர்வாக காரணங்களுக்காக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ஏற்கனவே மாவட்டத்தில் தேர்தல் தொடர்பாக அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் வரும் 3-ம் தேதி சந்திர கிரகணத்தை முன்னிட்டு பகல் 12 மணி வரையும், அதனை தொடர்ந்து இரவு 8 மணி முதல் 9.30 மணி வரை மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். மேலும் அன்றைய தினம் குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே தரிசனம் நடைபெறும் என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.