India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தூத்துக்குடியை சேர்ந்த அமைச்சர் கீதா ஜீவன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தூத்துக்குடியில் இருந்து மதுரைக்கு ரயில் பாதை அமைக்கும் திட்டம் வேண்டாம் என்று தமிழக அரசு கூறியதாக மத்தியமைச்சர் தெரிவித்துள்ளார். வழக்கம்போல் மத்திய அரசு பொய்யான தகவலை தெரிவித்து வருகிறது. இது முற்றிலும் தவறு. இத்திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்த தொடர்ந்து வலியுறுத்தி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, ஜன.14,15 தேதிகளில் தூத்துக்குடி மாவட்டத்தின் சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளை கண்காணித்து மணல் மூட்டைகள், மரம் அறுக்கும் கருவிகள், மோட்டார் பம்புகள் முதலியவற்றை தயார் நிலையில் வைத்திடவும், நிவாரண முகாம்களை தயார் செய்திடவும் மாவட்ட அலுவலகம் மூலம் அறிவுத்தப்பட்டுள்ளது. SHARE IT.
திருச்செந்தூர் முருகன் கோவில் கடல் கடந்த 10 நாட்களாக அதிக சீற்றத்துடன் காணப்படுவதுடன் கடல் அரிப்பும் ஏற்பட்டுள்ளது. இதனால் கடற்கரையில் பெரிய பள்ளம் விழுந்துள்ளது. கடல் அரிப்பு ஏற்பட்ட இடத்தில் பக்தர்கள் நீராட தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், கடல் அரிப்பு ஏற்பட்ட இடத்தில் நேற்று(ஜனவரி 11) திருச்செந்தூர் கோட்டாட்சியர் சுகுமார் வட்டாட்சியர் பாலசுந்தரம் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரத்தை சேர்ந்தவர் கண்ணன், திமுக நகரச் செயலாளர். இவர் நடத்தும் இ-சேவை மையத்தில் வேலை பார்த்து வந்த மகாலட்சுமி என்ற விதவைப் பெண்ணிடம் திருமணம் செய்து கொள்வதாக கூறி, கண்ணன் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து மகாலட்சுமி SP அலுவலகத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் ஶ்ரீவை., மகளிர் போலீசார் கண்ணன் மீது 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
ஆறுமுகமங்கலம் அருகே ஏரலை சேர்ந்தவர் லிங்கராஜ். இவரிடம் புங்கவர் நத்தம் பகுதியை சேர்ந்த பாலசுப்பிரமணியன் அவரது மகன் அய்யாதுரை ஆகியோர் பணத்தை இரட்டிப்பு செய்து தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்டுள்ளனர். இது சம்பந்தமாக லிங்கராஜ் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தன் பேரில் போலீசார் விசாரணையில் அவர்கள் பல பேரிடம் ரூபாய் 2 கோடி வரை மோசடி செய்துள்ளது தெரியவந்தது. இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்ட பாரதிய ஜனதா கட்சி மாவட்ட தலைவர் சித்ராங்கதன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “மதுரையில் இருந்து அருப்புக்கோட்டை வழியாக தூத்துக்குடி ரயில் திட்டத்தை வேண்டாம் என்று கடிதம் மூலம் எழுதிக் கொடுத்தது திமுக அரசுதான்; தென்மாவட்ட மக்களின் வளர்ச்சியை பாதிக்கும் வகையில் இவ்வாறு செயல்பட்ட திமுக அரசு 2026 ஆம் ஆண்டு தேர்தலில் படுதோல்வி அடையும்” என்று தெரிவித்துள்ளார்.
திருச்செந்தூர் அருகே ஆறுமுகநேரி ரயில்வே கேட் அருகே இன்று ரயில் வந்து கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத நபர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். அவர் யாரென்று தெரியவில்லை. இது குறித்து ஆறுமுகநேரி ரயில்வே போலீசார் அவர் யார் எனவும், எதற்காக இங்கு வந்தார் எனவும் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் ஆறுமுகநேரி ரயில்வே நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது
தூத்துக்குடியில் இருந்து அருப்புக்கோட்டை வழியாக மதுரைக்கு புதிய ரயில் பாதை அமைக்கும் திட்டத்திற்கு மத்திய அரசு முன்வந்து அதற்காக நிதியும் ஒதுக்கீடு செய்தது. இந்நிலையில் இத்திட்டம் வேண்டாம் என்று தமிழக அரசு எழுத்துப்பூர்வமாக கடிதம் கொடுத்ததாக கூறப்படுகிறது. தமிழக அரசின் இந்த செயலுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் வர்த்தக அணி மாநில செயலாளருமான சி.தி. செல்லப்பாண்டியன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் நடத்தும் மாவட்டங்களுக்கு இடையிலான 25 வயதுக்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டியில் தூத்துக்குடி மாவட்டம் சார்பில் விளையாட வீரர்கள் தேர்வு வரும் 12 ஆம் தேதி நடைபெற உள்ளது. மாப்பிள்ளையூரணி சின்ன கண்ணுபுரம் கிரான்ப்ரோஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இந்த தேர்வில் 25 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆதார் அட்டையுடன் கலந்து கொள்ள மாவட்ட கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது. SHARE IT
த.வெ.க-விற்கு மாவட்ட வாரியாக புதிய மாவட்ட செயலாளர்கள் நியமிப்பது சம்பந்தமான ஆலோசனை கூட்டம் பனையூரில் வைத்து தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் பதவிக்கு அஜிதா ஆக்னல் மற்றும் பாலா என்பவருக்கும் போட்டி நிலவி வருகிறது. இந்நிலையில் இன்று மாலை அஜிதா ஆக்னலை மீண்டும் பேச அழைத்துள்ள நிலையில் அவர் கூட்டத்திலிருந்து வெளியேறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Sorry, no posts matched your criteria.