India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் (ஜன.19) இன்று இரவு நேர ரோந்து பணிகளுக்கு போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் அவசர காலத்தில் இதில் குறிப்பிட்டுள்ள காவல்துறையினரின் எண்களை தொடர்பு கொள்ளலாம். அல்லது அவசரகால எண் 100 மற்றும் மாவட்ட ஹலோ போலீஸ் எண் 9514144100 ஆகிய எண்களை தொடர்புகொள்ளலாம் என தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் தரப்பில் தகவல் தெரிவிக்கபட்டுள்ளது.
கோவில்பட்டி லட்சுமி மில் ஆலை மேல்நிலைப் பள்ளியில் 1985ஆம் ஆண்டு பிளஸ்-2 படித்த மாணவர்கள் சந்தித்துக் கொள்ளும் நிகழ்ச்சி பள்ளியில் நேற்று நடைபெற்றது. இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் 108 மாணவர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். தங்கள் பசுமையான நினைவுகளை பகிர்ந்து கொண்டதுடன் தங்களுக்கு பயிற்றுவித்த ஆசிரியர்களுக்கும் மரியாதை செலுத்தினர்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வஉசி நகரை சேர்ந்த முருகேசன் என்பவரின் மனைவி ஜோதிலட்சுமி(58). இவர் நேற்று(ஜனவரி 17) மந்தித்தோப்பு பகுதியில் சாலையை கடக்க முயன்றபோது பைக் ஒன்று இவர் மீது மோதியதில் பலத்த காயமடைந்தார். தொடர்ந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட இவர் பரிதாபமாக இறந்தார். விபத்து தொடர்பாக கோவில்பட்டி மேற்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் (ஜன.17) இன்று இரவு நேர ரோந்து பணிகளுக்கு போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர்.எனவே பொதுமக்கள் அவசர காலத்தில் இதில் குறிப்பிட்டுள்ள காவல்துறையினரின் எண்களை தொடர்பு கொள்ளலாம். அல்லது அவசரகால எண் 100 மற்றும் மாவட்ட ஹலோ போலீஸ் எண் 9514144100 ஆகிய எண்களை தொடர்புகொள்ளலாம் என தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் தரப்பில் தகவல் தெரிவிக்கபட்டுள்ளது.
முக்கூடல் தாமிரபரணி ஆற்றில் குளிக்க வந்த தூத்துக்குடியைச் சேர்ந்த ஒரு குடும்பத்தில் 5 பேர் தண்ணீரில் மூழ்கியதில் 3 பேர் பொதுமக்களால் மீட்கப்பட்டனர். வைஷ்ணவி என்ற சிறுமியின் உடல் அம்பாசமுத்திரம் தீயணைப்பு மீட்பு படையினரால் மீட்கப்பட்டு கரைக்கு கொண்டுவரப்பட்டது. மேலும் ஒருவரது உடல் தீயணைப்பு மற்றும் மீட்பு படையினரால் தேடப்பட்டு வருகிறது.
நெல்லை வருங்கால பைப் நிதி ஆணையாளர் நேற்று(ஜன.16) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ‘வருங்கால வைப்பு நிதி உங்கள் அருகில் 2.0’ என்ற வருங்கால வைப்பு நிதி குறை தீர்ப்பு நாள் தூத்துக்குடியில் வரும் 27ஆம் தேதி நடைபெற உள்ளது. தூத்துக்குடி பானு பிருந்தாவன் கிரீன் பார்க் ஓட்டலில் இந்த நிகழ்ச்சி நடைபெற உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
பொங்கலை முன்னிட்டு கோவில்பட்டி புதுகிராமத்தில் நேற்று முன்தினம்(ஜன.15) இரவு கலை நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது சிறுவர்கள் சிலர் கலை நிகழ்ச்சிக்கு இடையூறாக நடனம் ஆடிக்கொண்டிருந்தனர். இதனை கோமதி சங்கர் என்பவர் கண்டிக்கவே, ஆத்திரமடைந்த சிறுவர்கள் கோமதி சங்கரை மிரட்டி பாட்டிலில் பெட்ரோல் நிரப்பி வீசி உள்ளனர். இது சம்பந்தமாக கோவில்பட்டி கிழக்கு போலீசார் நேற்று 8 சிறுவர்களை கைது செய்தனர்.
தூத்துக்குடி மகிழ்ச்சிபுரத்தில் நேற்று(ஜன.16) நடைபெற்ற பொங்கல் விளையாட்டு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அப்போது, சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன், தமிழகத்தின் வளர்ச்சிக்கு சிலர் தடையாக பல்வேறு பணிகளை செய்து வருகின்றனர் என்றவர், தமிழகத்தில் மகளிருக்கு வழங்கப்படும் உரிமைத்தொகை விடுபட்டவர்களுக்கும் முறைப்படுத்தி வழங்கப்படும் என தெரிவித்தார்.
குலசேகரன்பட்டினம் ஹசனியா பள்ளியில் இன்று முதல் 2 நாட்களுக்கு(ஜன.17 மற்றும் 18) குலசை சங்கமம் விழா நடைபெற உள்ளது. காலை 6 மணியளவில் விளையாட்டுப் போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மாலை 6 மணிக்கு புலவர் மா.இராமலிங்கம் தலைமையில் சிறப்பு நகைச்சுவை பட்டிமன்றம் நடைபெறும். நாளை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் எம்.எல்.ஏ ஆளூர் ஷாநவாஸ் கலந்துகொள்ள உள்ளதாக விசிகவினர் தெரிவித்துள்ளனர்.
தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு கோவில்பட்டி அருகே உள்ள கங்கன்குளம் கிராமத்தில் விளையாட்டுப் போட்டிகள் நேற்று(ஜன.16 ) நடைபெற்றது. இதில் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜு பங்கேற்று போட்டிளை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் அழகர்சாமி, இளைஞர் இளம்பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் கவியரசன், தகவல் தொழில்நுட்ப பிரிவு சுந்தர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Sorry, no posts matched your criteria.