Tuticorin

News January 26, 2025

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் அறிவிப்பு

image

இந்திய விமானப்படையின் மருத்துவ உதவியாளர்கள் (வர்த்தகம்)மற்றும் மருத்துவ உதவியாளர்கள் மருந்தியலாளர்கள் ஆகியோருக்கான திறந்த ஆள்சேர்ப்புப் பேரணி முறையே ஜனவரி 29 மற்றும் பிப்ரவரி – 04 ஆகிய தேதிகளில் கேரளாவில் உள்ள மகாராஜா கல்லூரி மைதானம் எர்ணாகுளம்,கொச்சியில் நடைபெற உள்ளது.தூத்துக்குடி மாவட்டத்தில் விருப்பமுள்ள இளைஞர்கள் இந்த முகாமில் கலந்து கொண்டு பயன் பெறலாம் என ஆட்சியர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.

News January 26, 2025

 இரவு ரோந்து அதிகாரிகள் நியமனம்

image

தூத்துக்குடி மாவட்டத்தில் மணியாச்சி, விளாத்திகுளம், சாத்தான்குளம், ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர், கோவில்பட்டி ஆகிய பகுதிகளில் இன்று 25.01.2025 இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் ஏதேனும் உதவி தேவைப்பட்டால்  100 அல்லது தூத்துக்குடி மாவட்ட ஹலோ போலீஸ் 95141 44100 எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

News January 25, 2025

தூத்துக்குடி மக்களே உங்கள் ஊர் செய்திகளை பதிவிடுங்கள்

image

குடியரசு தினத்தை முன்னிட்டு நாளை (ஜன.26) தூத்துக்குடி மாவட்டத்தில் கொடியேற்ற நிகழ்ச்சி, கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற உள்ளன. ஆகவே, உங்கள் பகுதியில் நடைபெறும் கிராம சபைக் கூட்டங்கள், அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள், பொது இடங்களில் நடைபெறும் குடியரசு தின விழா மற்றும் கொடியேற்ற நிகழ்வுகளை செய்திகளை வே2நியூஸில் பதிவிடுங்கள். உங்கள் ஊர் செய்திகள் வே2நியூஸ் மூலம் அனைவருக்கும் சென்றடைய உதவுங்கள்.

News January 25, 2025

மொழிப்போர் தியாகிகள் தூத்துக்குடி எம்பி வீரவணக்கம்

image

தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி இன்று தனது முகநூல் பக்கத்தில். இருப்பது ஓர் உயிர், அது தமிழுக்காக போகட்டும் என முழங்கி தங்கள் உயிரைக் கொடுத்து தமிழைக் காத்த நம் மொழிப்போர் தியாகிகளுக்கு இந்நாளில் வீரவணக்கம் செலுத்தி, ஆதிக்க இந்தித் திணிப்பை எப்போதும் எதிர்ப்போம் என உறுதியேற்போம் என பதிவிட்டுள்ளார்.

News January 25, 2025

ஆபரண பொடுள் தயாரித்தல் இலவச சிறப்பு பயிற்சி

image

தூத்துக்குடி முத்தையாபுரத்தில் செயல்பட்டு வரும் SBI RSETI நிறுவனம் மூலம் செயற்கை ஆபரண பொருட்கள் தயாரித்தல் இலவச பயிற்சி வரும் 27ஆம் தேதி முதல் ஆரம்பமாகிறது. பயிற்சி தொடர்ந்து 13 நாட்கள் நடக்கும். முதலில் வரும் 35 நபர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. வயது 19 முதல் 45 வயது வரை. எனவே தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மகளிர் இதனை பயன்படுத்திக் கொள்ளுமாறு SBI நிறுவனம் அறிவித்துள்ளது.

News January 25, 2025

சோளம் உயிர் உரம் வாங்க 50% மானியம்: இணை இயக்குநர்

image

தூத்துக்குடி மாவட்ட வேளாண் இணை இயக்குநர் பெரியசாமி நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், மாவட்டத்தில் 12,000 ஹெக்டரில் சோளம் பயிர் செய்யப்படுகிறது. சோளம் உற்பத்தியை அதிகரிக்க அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. அதன்படி உயிர் உரங்கள் வாங்க 50% மானியம் அளிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.

News January 25, 2025

தூத்துக்குடி: மிளகாய் பயிர் காப்பீடு செய்ய ஜன.31 கடைசி நாள்!

image

தூத்துக்குடி மாவட்ட தோட்டக்கலை துறை நேற்று(ஜன.24) வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்திய வேளாண் காப்பீடு நிறுவனம் மிளகாய் பயிருக்கு வானிலை பயிர் காப்பீடு திட்டம் என்ற மாதிரி திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் பயிர் காப்பீடு செய்து விவசாயிகள் பயன்பெறலாம். இந்த பயிர் காப்பீடு திட்டத்தில் சேர்ந்து பிரீமியம் செலுத்த கடைசி நாள் இம்மாதம் 31ஆம் தேதி என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News January 25, 2025

தூத்துக்குடி: மீனவர்களை கண்டுபிடிக்க கோரி சாலை மறியல்

image

தூத்துக்குடி இனிகோ நகர் கடற்கரையை சேர்ந்த மீனவர்களான டால்பின் மற்றும் அவரது உறவினர்கள் கடந்த 1ஆம் தேதி கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். ஆனால் அவர்கள் இதுவரை வீடு திரும்பவில்லை. இது குறித்து போலீசார் சரியாக விசாரணை நடத்தவில்லை எனக்கூறி, விரைந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அப்பகுதி மக்கள் நேற்று(ஜன.24) இரவு திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

News January 25, 2025

இளம் வல்லுநரா நீங்க? வாய்ப்பு காத்திருக்கு

image

தூத்துக்குடி மாவட்டத்தில் அரசின் முக்கிய திட்டங்களை கண்காணிக்க சிறப்பு திட்ட செயலாக்க துறை செயல்பட்டு வருகிறது. இதில் அவுட்சோர்சிங் முறையில் பணியாற்ற ஓராண்டிற்கு இளம் வல்லுனர்க்கான ஒரு பணியிடம் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. இதற்கு https;//thoothukudi.nic.in என்ற இணையதளத்தில் மாதிரி படிவம் பதிவிறக்கம் செய்து 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News January 25, 2025

தூத்துக்குடி இரவு ரோந்து காவல் துறை அதிகாரிகள் விவரம்

image

தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் (ஜன24) இன்று இரவு நேர ரோந்து பணிகளுக்கு போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் அவசர காலத்தில் இதில் குறிப்பிட்டுள்ள காவல்துறையினரின் எண்களை தொடர்பு கொள்ளலாம். அல்லது அவசரகால எண் 100 மற்றும் மாவட்ட ஹலோ போலீஸ் எண் 9514144100 ஆகிய எண்களை தொடர்புகொள்ளலாம் என தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் தரப்பில் தகவல் தெரிவிக்கபட்டுள்ளது. 

error: Content is protected !!