India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு நேரங்களில் குற்ற செயல்கள் நடைபெற்று விடாமல் தடுக்கும் வகையில் மாவட்ட முழுவதும் காவல்துறையினர் இரவு நேரங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று இரவு மாவட்ட முழுவதும் ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினர் விபரங்களை மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ளது.*இரவில் வேலைக்கு செல்லும் நண்பர்கள் மற்றும் பெண்களுக்கு பகிரவும்*
தூத்துக்குடியில் உள்ள வ உ சி துறைமுகம் சூரிய மின்சக்தி உற்பத்தியில் சாதனை படைத்துள்ளது. கடந்த 2024-25 ஆண்டில் டிசம்பர் வரை 59,41,536 யூனிட் சூரிய மின்சக்தியை தயார் செய்துள்ளது. இதில், ஐந்து மெகாவாட் நிலத்தடி சூரிய மின் சக்தி நிலையம் மூலமும் 640 கிலோ வாட் கூரை சூரிய மின்சக்தி நிலையம் மூலமும் கிடைக்கப்பெற்றுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி மாவட்ட தலைவராக மீண்டும் சித்ராங்கதன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் அமைப்பு தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவராக இருந்த சித்ராங்கதன் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக இன்று(ஜன.31) அறிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் கோழிகளை தாக்கும் கோழி கழிச்சல் தடுப்பூசி முகாம் நாளை (1) முதல் வரும் 14ஆம் தேதி வரை போடப்பட உள்ளது. மாவட்டத்தில் 1,54,400 டோஸ்கள் தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளது. கோழிகள் வளர்ப்போர் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் கேட்டுக் கொண்டுள்ளார்.*கோழி வளர்க்கும் உங்கள் பக்கத்து வீட்டு நண்பர்களுக்கு பகிரவும்*
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் உத்தரவுபடி மாவட்டம் முழுவதும் கடந்த நான்கு நாட்களாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். மொத்தம் 534 கடைகளில் சோதனை நடத்தியதில் 56 கடைகள் உரிமம் இல்லாமல் செயல்பட்டதும், 88 கடைகளில் பிளாஸ்டிக் மற்றும் அச்சிடப்பட்ட காகிதத்தால் பார்சல் செய்வதற்கு பயன்படுத்தப்படுவதும் கண்டறியப்பட்டது. இந்த கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.
வியட்நாமை சேர்ந்த வின்பாஸ்ட் நிறுவனம் தூத்துக்குடியில் ரூ.4,300 கோடி மதிப்பில் தொழிற்சாலை பணியை தொடங்கி, இறுதிக் கட்டத்தை நெருங்கிவிட்டது. ஆகஸ்டு மாதத்திற்குள் வி.எப்.7, வி.எப்.6, எஸ்.யூ.வி. ரக மின்சார கார்களை தயாரித்து தூத்துக்குடி துறைமுகம் வழியாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய உள்ளது.ஒப்பந்தம் கையெழுத்தான ஒரே ஆண்டில் வேலை வழங்க தயாராகியுள்ளதால் இளைஞர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
அனைத்து பள்ளிகளில் நண்பகல் உணவு திட்டத்தை கொண்டு வந்தவர் காமராஜர் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். ஆனால் அவர் நண்பகல் உணவு திட்டத்தை செயல்படுத்துவதற்கு முன்பே எட்டயபுரத்தில் மன்னர் எட்டப்ப ராஜா பெயரில் செயல்பட்ட ராஜா இலவச ஆரம்ப பாடசாலையில் தான் 1956 ஆம் ஆண்டு நண்பகல் உணவு திட்டம் கொண்டுவரப்பட்டது. அதுவும் மன்னரின் பொருள் உதவியுடன் செயல்படுத்தப்பட்டது.
ஆறுமுகநேரி அருகே உள்ள குரும்பூரைச் சேர்ந்தவர் கருப்பசாமி (31) கூலித் தொழிலாளி. இவர் கடந்த 2019ஆம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த 9 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.இது சம்பந்தமாக தொடர்பாக போலீசார் இவரை போக்சோவில் கைது செய்து தூத்துக்குடி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.வழக்கில் நேற்று கருப்பசாமிக்கு 5 வருடம் சிறை, ரூபாய் 5000 அபராதமும் விதிக்கப்பட்டது.
தமிழகம் முழுவதும் 83 இன்ஸ்பெக்டர்கள் டி எஸ் பி யாகபதவி உயர்வு அளித்து தமிழக காவல்துறையின் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதன்படி சேலம் மாவட்டம் கருமலை கூடல் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஆக இருந்த தங்கவேல் தூத்துக்குடி கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தின் குற்றப்பிரிவு ஆவண காப்பக டி.எஸ்.பி யாக பதவி உயர்வு பெற்றுள்ளார்.
கனிமொழி எம்பி இன்று முகநூல் பக்கத்தில், “சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் பெண்கள் வந்த வாகனத்தை, ஆண்கள் சிலர் வழிமறித்து விரட்டிச் சென்று அச்சுறுத்தியது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது; குற்றம் செய்தவர்கள் யாராக இருப்பினும், கடுமையான நடவடிக்கை எடுப்பதை காவல்துறை உறுதி செய்ய வேண்டும்; அதே வேளையில், பெண்கள் பாதுகாப்பில் எந்த வித சமரசமும் இருக்ககூடாது என நினைப்பவர் முதல்வர்” என குறிப்பிட்டுள்ளார்.
Sorry, no posts matched your criteria.