Tuticorin

News February 3, 2025

அண்ணா நினைவு நாள்; தூத்துக்குடி எம்பி புகழாரம்

image

தூத்துக்குடி எம்பி கனிமொழி அண்ணா நினைவு நாளை ஒட்டி இன்று தனது முகநூல் பக்கத்தில் தமிழினத்தைப் காக்க தெற்கிலிருந்து உதித்த ‘சூரியன்’ பேரறிஞர் அண்ணா. மாநில உரிமையை மூச்சாகக் கொண்டு,கூட்டாட்சித் தத்துவத்தை வலியுறுத்தி,மாநில சுயாட்சிக்காகக் குரல் கொடுத்த சுயமரியாதைக்காரர். திராவிட இன உரிமைப்போரின் கொள்கை வழிகாட்டியாகவும், இன்றும் ஆதிக்க சக்திகளுக்கு சிம்மச் சொப்பனமாக விளங்கியவர் என குறிப்பிட்டுள்ளார்.

News February 3, 2025

திருச்செந்தூர் கோவில் நிர்வாகம் வேண்டுகோள்

image

திருச்செந்தூர் முருகன் கோவில் இணை ஆணையர் ஞானசேகரன்  பக்தர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதில் கடற்கரை அருகே உள்ள நாழிக்கிணறு பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட உள்ளது. இதனால் உள்ளது.இதனால் மின் மோட்டார் மூலம் தொட்டிகளில் தீர்த்தம் நிரப்பப்படும். பகதர்கள் பக்தர்கள் பயன்படுத்திக் கொள்ள அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

News February 2, 2025

கிரிக்கெட் அணிக்கு தூத்துக்குடி எம்பி வாழ்த்து

image

தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி இன்று தனது முகநூல் பக்கத்தில், “இந்திய மகளிர் U-19 கிரிக்கெட் அணி வரலாற்றுச் சிறப்புமிக்க உலக சாம்பியன்ஷிப்பை வென்றதற்கு வாழ்த்துகள்; அவர்களின் திறமை ம தேசத்தை பெருமைப்படுத்தியுள்ளது; மற்றும் இந்தியா முழுவதும் உள்ள இளம் விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும்” என அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

News February 2, 2025

தூத்துக்குடி: 351-வது வார மரம் நடும் விழா

image

தூத்துக்குடியில் உள்ள ஒரு தனியார் தொண்டு நிறுவனம் தூத்துக்குடியை சுற்றுச்சூழல் மாசு இல்லாத நகராக மாற்றும் வகையில் வாரம் தோறும் மரம் நடும் பணியை செய்து வருகிறது.இன்று 351-வது சிதம்பரநகர் மூன்றாவது தெருவில் மரம் நடும் பணி நடைபெற்றது.இதில் ஏராளமான தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.

News February 2, 2025

திருமணம் நடக்க இருந்த நிலையில் மாப்பிள்ளை தற்கொலை

image

தூத்துக்குடி, தருவைகுளம் தெற்கு தெருவை சேர்ந்தவர் கருப்பசாமி என்பவது மகன் மெய்யப்ப போஸ். பவர் பிளான்டில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு நாளை திருமணம் நடக்க இருந்தது. இதற்கான ஏற்பாடுகளை குடும்பத்தினர் செய்துள்ளனர். இந்த நிலையில் மெய்யப்ப போஸ் அவர் புதிதாக கட்டியிருக்கும் வீட்டில் நைலான் கயிறால் நேற்று காலை (பிப்-1) தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தருவைகுளம் போலீசார் விசாரணை

News February 2, 2025

தூத்துக்குடி இரவு ரோந்து அதிகாரிகள் நியமனம்

image

தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் (ஜன30) இன்று இரவு நேர ரோந்து பணிகளுக்கு போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் அவசர காலத்தில் இதில் குறிப்பிட்டுள்ள காவல்துறையினரின் எண்களை தொடர்பு கொள்ளலாம். அல்லது அவசரகால எண் 100 மற்றும் மாவட்ட ஹலோ போலீஸ் எண் 9514144100 ஆகிய எண்களை தொடர்புகொள்ளலாம் என தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் தரப்பில் தகவல் தெரிவிக்கபட்டுள்ளது.

News February 1, 2025

தூத்துக்குடி மக்களே தினமும் ரூ.500 வரை சன்மானம் பெற வாய்ப்பு

image

தூத்துக்குடி மக்களே தினமும் ரூ.500 வரை சன்மானம் பெற அரிய வாய்ப்பு. உங்கள் மாவட்டம், தாலுகா, கிராமத்தில் நடக்கும் நிகழ்வுகள் மற்றும் கோரிக்கைகளை நமது WAY2NEWS-ல் செய்தியாக பதிவிட்டு சன்மானம் ஈட்டுங்கள். மேலும்விவரங்களுக்கு 9629670206 என்ற எண்ணை அழைக்கலாம் (OR) WHATS APP-ல் மெசெஜ் பண்ணலாம். விருப்பமுள்ளவர்கள் (இங்கே கிளிக் செய்து) உங்கள் தகவல்களை பகிரலாம். *செய்தி ஆர்வம் உள்ள நண்பர்களுக்கு பகிரவும்

News February 1, 2025

மத்திய பட்ஜெட்: கனிமொழி எம்பி விமர்சனம்

image

தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி தனது முகநூல் பக்கத்தில், இன்று(பிப்.1) தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட் பற்றி கருத்து தெரிவித்துள்ளார். அதில், “நான் நாடாளுமன்றத்தில் இருந்த இத்தனை ஆண்டுகளில், பீகார் மாநில பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் கேட்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது இதுவே முதல் முறை” என குறிப்பிட்டுள்ளார்.*இந்த பட்ஜெட் பற்றி உங்கள் கருத்து என்ன?

News February 1, 2025

விஜய் கட்சியில் முக்கிய பொறுப்பில் கோவல்பட்டிகாரர்

image

கோவில்பட்டியை சேர்ந்த சம்பத்குமார் தமிழக வெற்றி கழகத்தின் மாநில கொள்கைப்பரப்பு செயலாளராக நேற்று நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டு வருகிறது. இதில் தமிழக வெற்றி கழகத்தின் பொதுச் செயலாளராக கோவில்பட்டியை சேர்ந்த முனைவர் சம்பத்குமாரை கட்சியின் தலைவர் விஜய் நியமனம் செய்துள்ளார்.

News February 1, 2025

தூத்துக்குடி அருகே சிறுவன் தலைநசுங்கி மரணம்

image

தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் அருகே அயிரவன்பட்டியில் மோட்டார் சைக்கிள் மீது டிராக்டர் மோதியதில் செல்லத்துரை என்பவரின் மகன் சுரேந்திரன் (4) தலைநசுங்கி சம்பவ பலியானான். சித்தப்பா கார்த்திக் என்பவரின் மோட்டார் சைக்கிளில் சென்று போது விபத்து நடந்துள்ளது. தகவலறிந்து வந்த கடம்பூர் போலீசார் உடலை கைப்பற்றி கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

error: Content is protected !!