Tuticorin

News February 5, 2025

தூத்துக்குடி : மாணவர்களிடம் புதிய மோசடி

image

சில தினங்களுக்கு முன்பு திருச்செந்தூரில் உள்ள ஒரு மாணவனின் பெற்றோருக்கு மத்திய அரசின் ஸ்காலர்ஷிப் பணம் பெற்று தருவதாக கூறி அவர்களது வங்கி கணக்கை வாங்கி அதிலிருந்து ரூபாய் 70,000 பணத்தை மோசடி செய்துள்ளனர். இதுபோன்ற சம்பவங்களில் பெற்றோர்கள் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் எனவும், சைபர் மோசடி தொடர்பான புகார்களுக்கு 1930 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் எனவும் மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

News February 5, 2025

தமிழக வீராங்கனை தூத்துக்குடி எம்.பி. பாராட்டு

image

தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி நேற்று தனது முகநூல் பக்கத்தில், “உத்தரகாண்டில் நடைபெற்ற 38வது தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டியில் தமிழ்நாடு சார்பில் கலந்து கொண்டு தனிநபர்களுக்கான டைம் டிரையல் சைக்கிளிங் பிரிவில் வெள்ளிப்‌ பதக்கம் வென்றுள்ள ஸ்ரீமதிக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்; அவர் மேன்மேலும் பல்வேறு உயரங்களை அடைய வாழ்த்துகள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

News February 4, 2025

தூத்துக்குடி மாவட்ட ரோந்து போலீசார் விவரம்

image

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று (04.02.2025) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இவர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். மேலும் 100 அல்லது தூத்துக்குடி மாவட்ட ஹலோ போலீஸ் 95141 44100 எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.

News February 4, 2025

தூத்துக்குடியில் காவல்துறை குறைதீர் கூட்டம் அறிவிப்பு

image

கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வைத்து வாரந்தோறும் புதன்கிழமை பொதுமக்கள் குறை தீர்ப்பு நாள் கூட்டம் நடைபெறுகிறது. அந்த வகையில் நாளை (பிப்.5) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் தலைமையில் நடைபெற உள்ள குறை தீர்ப்பு கூட்டத்தில் காவல் நிலையத்தில் இதுவரை தீர்க்கப்படாத மனுக்கள் போன்றவைகளை பொதுமக்கள் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.* தேவைபடுவோருக்க பகிரவும்*

News February 4, 2025

மோசடி விழிப்புடன் இருக்க காவல்துறை அறிவுரை

image

கோரம்பள்ளத்தில் உள்ள தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள விழிப்புணர்வில்,  வாட்ஸ் அப் போன்ற இணையங்களில் பகுதி நேர வேலை என்று ஆசை காட்டி முதலில் சிறிது ஆதாயமளித்து, பின்னர் அதிக முதலீடு என்று உங்கள் அனைத்து முதலீடுகளையும் கவரும் ஏமாற்று வேலை நடைபெற்று வருகிறது; எனவே இதில் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அதில் கேட்டுக் கொண்டுள்ளது.

News February 4, 2025

கயத்தாறில் 8 பேருக்கு வீட்டுச் சிறை 

image

திருமங்கலத்தில் நடைபெறும் இந்து முன்னணி கண்டன பொதுக்கூட்டத்திற்கு கயத்தாறில் இருந்து செல்பவர்களை கயத்தாறு போலீசார் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்து வருகின்றனர். அந்த வகையில் நேற்று கயத்தாறில் இந்து முன்னணி ஒன்றிய தலைவர் , பாஜகவின் மிள்கு  ஒன்றிய செயலாளர், முன்னாள் ஒன்றிய செயலாளர், முன்னாள் ஊராட்சி  தலைவர்,நிர்வாகிகள் உள்பட 8 பேர் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டனர்.

News February 4, 2025

தூத்துக்குடி மாவட்ட ரோந்து போலீசார் விவரம்

image

தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு நேரங்களில் குற்ற செயல்கள் நடைபெற்று விடாமல் தடுக்கும் வகையில் மாவட்ட முழுவதும் காவல்துறையினர் இரவு -நேரங்களில் பொதுமக்கள் நலன் கருதி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று இரவு மாவட்ட முழுவதும் ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினர் விபரங்களை கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகம் இப்போது வெளியிட்டுள்ளது.

News February 3, 2025

தூத்துக்குடி ஆட்சியர் தலைமையில் கண்காணிப்புக் குழு கூட்டம்

image

தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் வைத்து இன்று உடல் உழைப்பு தொழிலாளர்கள் சமூக பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் நல வாரியம் பற்றிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தொழிலாளர் நல வாரிய திட்டங்கள் தொழிலாளர்களுக்கு விரைவாக சென்றடைவது சம்பந்தமாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

News February 3, 2025

அண்ணா நினைவு நாள்; தூத்துக்குடி எம்பி புகழாரம்

image

தூத்துக்குடி எம்பி கனிமொழி அண்ணா நினைவு நாளை ஒட்டி இன்று தனது முகநூல் பக்கத்தில் தமிழினத்தைப் காக்க தெற்கிலிருந்து உதித்த ‘சூரியன்’ பேரறிஞர் அண்ணா. மாநில உரிமையை மூச்சாகக் கொண்டு,கூட்டாட்சித் தத்துவத்தை வலியுறுத்தி,மாநில சுயாட்சிக்காகக் குரல் கொடுத்த சுயமரியாதைக்காரர். திராவிட இன உரிமைப்போரின் கொள்கை வழிகாட்டியாகவும், இன்றும் ஆதிக்க சக்திகளுக்கு சிம்மச் சொப்பனமாக விளங்கியவர் என குறிப்பிட்டுள்ளார்.

News February 3, 2025

திருச்செந்தூர் கோவில் நிர்வாகம் வேண்டுகோள்

image

திருச்செந்தூர் முருகன் கோவில் இணை ஆணையர் ஞானசேகரன்  பக்தர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதில் கடற்கரை அருகே உள்ள நாழிக்கிணறு பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட உள்ளது. இதனால் உள்ளது.இதனால் மின் மோட்டார் மூலம் தொட்டிகளில் தீர்த்தம் நிரப்பப்படும். பகதர்கள் பக்தர்கள் பயன்படுத்திக் கொள்ள அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

error: Content is protected !!