Tuticorin

News February 6, 2025

விளையாட்டு வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்து கனிமொழி பதிவு

image

தூத்துக்குடி எம்பி கனிமொழி இன்று தனது முகநூல் பக்கத்தில், உத்தரகாண்டில் நடைபெற்ற 38வது தேசிய விளையாட்டுப் போட்டியில் தமிழ்நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தி 1 எம் டைவிங்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற மிருணாளினிக்கும், 3 எம் போர்டில் வெண்கலம் வென்றதற்காக அபிஷேக்குக்கும் வாழ்த்துகள்! நீங்கள் இருவரும் எதிர்காலத்தில் மென்மேலும் வெற்றிபெற வாழ்த்துக்கள்! என குறிப்பிட்டுள்ளார்.

News February 6, 2025

பனைத் தொழிலாளர்கள் பதிவு செய்யும் முகாம்

image

தூத்துக்குடி மாவட்டத்தில் பனை மர தொழிலாளர்களுக்கு தமிழ்நாடு அமைப்பு சாரா தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்ய நாளை வெள்ளி சவேரியார்புரத்திலும், 17ஆம் தேதி வேம்பாரில், 28ஆம் தேதி உடன்குடியில், மார்ச் 14ஆம் தேதி வாழவல்லானிலும் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. கலந்து கொள்பவர்கள் ஆதார், குடும்ப அட்டை, பிறந்த தேதிக்கான ஆவணம் புகைப்படம், ஆகியவற்றின் அசல், நகல் கொண்டு செல்ல அறிவிறுத்தப்பட்டுள்ளது.

News February 6, 2025

தூத்துக்குடி: உப்பளத் தொழிலாளர்களுக்கு சிறப்பு முகாம்

image

தூத்துக்குடி மாவட்ட உப்பளங்களில் வேலை செய்யும் தொழிலாளர்கள் உப்பள நல வாரியத்தில் பதிவு செய்ய சிறப்பு முகங்கள் நடைபெற உள்ளன. அதன்படி, பிப்.10ஆம் தேதி தூத்துக்குடி ராஜபாண்டி நகர், 13ஆம் தேதி ஶ்ரீவைகுண்டம் பெருமாள் புரம், 21 ஆம் தேதி ஆறுமுகநேரி, மார்ச் 3 தருவைகுளம் ஆகிய பகுதிகளில் நடைபெற உள்ளதாக தொழிலாளர் உதவி ஆணையர் நேற்று தெரிவித்துள்ளார். SHARE IT.

News February 6, 2025

தூத்துக்குடி: போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த த.வெ.க!

image

தூத்துக்குடி, நாகலாபுரத்தில் அமைந்துள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கௌரவ விரிவுரையாளர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று(பிப்.5) 2வது நாளாக கல்லூரி வகுப்புகளை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தினர் நேரடியாக கல்லூரிக்கு சென்று கௌரவ விரிவுரையாளர்களின் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

News February 6, 2025

பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஆலோசனைக் கூட்டம்

image

கோரம்பள்ளத்தில் உள்ள தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் வைத்து நேற்று(பிப்.5) பள்ளிக்கல்வித்துறை சார்பில் பள்ளிக்கல்வித்துறை சம்பந்தமான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தலைமையில் நடைபெற்ற  இந்தக் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி உட்பட கல்வித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

News February 6, 2025

50 மனுக்கள் மீது நடவடிக்கை எஸ்பி உத்தரவு

image

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வாரம் தோறும் புதன்கிழமை நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. மாவட்ட கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து வந்த 50 மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறையினருக்கு எஸ்பி உத்தரவிட்டார்.

News February 6, 2025

தூத்துக்குடி மாவட்ட இரவு ரோந்து அதிகாரிகள் விவரம்

image

தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் (பிப்05) இன்று இரவு நேர ரோந்து பணிகளுக்கு போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் அவசர காலத்தில் இதில் குறிப்பிட்டுள்ள காவல்துறையினரின் எண்களை தொடர்பு கொள்ளலாம். அல்லது அவசரகால எண் 100 மற்றும் மாவட்ட ஹலோ போலீஸ் எண் 9514144100 ஆகிய எண்களை தொடர்புகொள்ளலாம் என தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் தரப்பில் தகவல் தெரிவிக்கபட்டுள்ளது.

News February 5, 2025

தூத்துக்குடியில் தேசிய குடற்புழு நீக்கும் முகாம்

image

தூத்துக்குடி மாவட்டத்தில் இம்மாதம் 10 ஆம் தேதி தேசிய குடல் புழு நீக்கும் முகாமும், இதில் விடுபட்டவர்களுக்கு வரும் 17ஆம் தேதியும் முகாம் நடைபெற உள்ளது.இதில் 1 வயது முதல் 10 வயதுடைய குழந்தைகள் 20 வயது முதல் 30 வயது வரை உள்ள பெண்களுக்கு குடற்புழு நீக்கும் மாத்திரை வழங்கப்படஉள்ளது. முகாம்கள் அனைத்து பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி முகம் மையங்களில் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.SHARE IT

News February 5, 2025

தூத்துக்குடி இளைஞர்களுக்கு அரியவாய்ப்பு

image

தமிழக அரசின் தொழில் முனைவோர் அமைச்சகம் மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சி துறை சார்பில் தொழில் பழகுனர் சேர்க்கை முகாம் இம்மாதம் 10 ஆம் தேதி தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இதில் பள்ளிகளில் பயின்றவர்கள், ஏற்கனவே தொழிற்பயிற்சி பெறாதவர்கள் கலந்து கொண்டு பயனடையலாம் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.*உங்கள் நண்பர்களுக்கு பகிர்ந்து தெரியப்படுத்தவும்

News February 5, 2025

தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி

image

தூத்துக்குடியில் பொது மக்கள் குறைதீர்க்கும் முகாமில் மேயர் ஜெகன் கலந்து கொண்டு பொதுமக்களிடம் மனுக்களை பெற்ற பின் கூறும்போது,தூத்துக்குடியில் 150 டன் குப்பைகள் சேகரிக்கப்படுவதில் பிளாஸ்டிக் பைகள் தான் அதிக அளவு வருகின்றன. பயன்படுத்தாதீர்கள் என விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும், பொதுமக்கள் பயன்படுத்தும் நிலையிலிருந்து  பிளாஸ்டிக் பைகளை முழுமையாக ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

error: Content is protected !!