India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தூத்துக்குடி மாவட்டத்தில் முதலாம் ஆண்டு பட்டப்படிப்பு படிக்கும் பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மாணவர்களுக்கு சிறுபான்மையினர் நலத்துறை மூலம் கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. இவர்கள் சேர்ந்துள்ள கல்லூரியில் இதற்காக உள்ள தொடர்பு அலுவலரை அணுகி உடனடியாக விண்ணப்பிக்குமாறு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கேட்டுக் கொண்டுள்ளார்.
ஏரல் பகுதியை சேர்ந்த 29 வயது வாலிபர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மது குடித்துவிட்டு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மனநலம் குன்றிய தனது தங்கையிடம் தகாத முறை நடந்துள்ளார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு சிறுமி வயிற்று வலி என தாயிடம் கூறினார். மருத்துவமனைக்கு சென்று பார்த்ததில் அவரது மகள் கர்ப்பமானது தெரியவந்தது. தாய் அளித்த புகாரின் பேரில் ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை
மத்திய அரசின் தகவல் மற்றும் துறையின் கீழ் செயல்படும் தென்னிந்திய சினிமா தனிக்கைகுழு உறுப்பினராக தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் வழக்கறிஞர் பாஜக பிரமுகர் முத்துராமலிங்கம் நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு கட்சி நிர்வாகிகள், சமூக ஆர்வலர்கள், வழக்கறிஞர்கள், மற்றும் பத்திரிகையாளர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இன்று(பிப்ரவரி 8) ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கான மாவட்ட அளவிலான வாங்குவோர் – விற்பவர்களுக்கு சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மகளிர் திட்ட இயக்குநர் மல்லிகா மற்றும் உதவி திட்ட அலுவலர்கள் மற்றும் பிற துறை அரசு அதிகாரிகள் பங்கு பெற்றனர். கொடியன்குளம் சுய உதவி குழுவை சேர்ந்த பலரும் இதில் பங்கேற்றனர்.
திருநெல்வேலி சரகத்திற்கு உட்பட்ட ஊர்க்காவல் படையினருக்கு இடையேயான 29வது சரகஅளவிலான விளையாட்டு போட்டிகளில் தூத்துக்குடி மாவட்ட ஊர்க்காவல் படையினர் 100 மீட்டர் ஓட்டப்பந்தயம், 400 மீட்டர் தொடர் ஓட்டப்பந்தயம் ஆகியவற்றில் முதலிடத்தையும், ஒருங்கிணைந்த விளையாட்டுப்போட்டிகள் 2ஆம் இடத்தையும் பிடித்தனர். இதை தொடர்ந்து வெற்றி பெற்ற தூத்துக்குடி மாவட்ட ஊர்க்காவல்படையினரை இன்று(பிப்.8) மாவட்ட SP பாராட்டினார்.
தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் கிரைய பத்திரம் வைத்திருக்கும் குடியிருப்பு வாசிகள், மற்றும் தமிழ்நாடு அரசின் பட்டா வைத்திருக்கும் குடியிருப்போர் தங்களுக்கு தேவையான கணினி பட்டா பெற தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் வைத்து நாளை (9) சிறப்பு முகாம் நடைபெற உள்ளது என்றும், இதனை பயன்படுத்திக் கொள்ளுமாறு தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினரும் அமைச்சருமான கீதா ஜீவன் கேட்டுக் கொண்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்ட பகுதிகளில் இன்று பிப்.(07) இரவு நேர ரோந்து பணிகளுக்கு போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் அவசர காலத்தில் மேலே குறிப்பிடப்பட்டுள்ள காவல்துறையினரின் செல்போன் எண்களை தொடர்பு கொள்ளலாம். மேலும் அவசரகால எண் 100,ஹலோ போலீஸ் எண் 9514144100 ஆகிய எண்களையும் தொடர்பு கொள்ளலாம் என தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் சார்பில் வெளியிட்டுள்ள தகவலில் கூறப்பட்டுள்ளது
தமிழக முதலமைச்சரின் காக்கும் கரங்கள் என்ற புதிய திட்டத்தின் கீழ் முன்னாள் படை வீரர்கள் மற்றும் பணியின்போது இறந்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு ரூபாய் ஒரு கோடி வரை தொழில் தொடங்குவதற்கு கடன் வழங்கும் முகாம் நடைபெற உள்ளது. இம்மாதம் 14ம் தேதி கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இந்த முகாம் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மக்களே தினமும் ரூ.500 வரை சன்மானம் பெற அறிய வாய்ப்பு. உங்கள் மாவட்டம், தாலுகா, கிராமத்தில் நடக்கும் நிகழ்வுகள் மற்றும் கோரிக்கைகளை நமது WAY2NEWS-ல் செய்தியாக பதிவிட்டு சன்மானம் ஈட்டுங்கள். மேலும், விவரங்களுக்கு 7598022923 என்ற எண்ணை அழைக்கலாம் (OR) WHATS APP-ல் மெசேஜ் பண்ணலாம். விருப்பமுள்ளவர்கள் <
தூத்துக்குடி மாவட்டத்தில் பொது விநியோகத் திட்ட சிறப்பு முகாம் மாதத்தில் இரண்டாவது சனிக்கிழமை நடைபெறுவது வழக்கம்.அந்த வகையில் இந்த மாதத்திற்கான சிறப்பு முகாம் நாளை அந்தந்த வட்டாட்சியர் அலுவலகத்தில் வைத்து நடைபெற உள்ளது. இதில் தங்கள் குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், நீக்குதல், புதிய அட்டை கோருதல் போன்றவைகளுக்கு வின்னப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.