Tuticorin

News March 21, 2026

சாத்தான்குளம்: நாளை மறுநாள் தீர்ப்பு

image

சாத்தான்குளத்தை சேர்ந்த வியாபாரி ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் 2020-ம் ஆண்டில் போலீசார் தாக்கியதில் உயிரிழந்தனர். இதில் 9 போலீசார் கைதாகி மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். கிட்டத்தட்ட 6 ஆண்டுகள் நடைபெற்று வந்த இந்த வழக்கில் விசாரணை நிறைவடைந்தது. இதையடுத்து நாளை மறுநாள்(மார்ச்.23) இதற்கான தீர்ப்பு வழங்கப்பட உள்ளது மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

News March 21, 2026

தூத்துக்குடி:மாணவி கொலையில் கைதானவர் சிறையில் அடைப்பு

image

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இந்த வழக்கில் மாவீரன் என்ற தர்ம முனீஸ்வரன் என்பவரை தனிப்படை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இந்நிலையில் அவரை போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விட்டு நேற்று மாலை நெல்லை பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.

News March 21, 2026

தூத்துக்குடி இன்று இரவு ஹலோ போலீஸ் விவரம்

image

.தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு நேரங்களில் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன்படி, இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினர் விவரங்களை தற்போது கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. அவசர காலங்களில் பொதுமக்கள் 100 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்

News March 20, 2026

கோவில்பட்டி செண்பகவள்ளி அம்மன் கோவில் முக்கிய அறிவிப்பு

image

கோவில்பட்டி மார்ச் 20: ஸ்ரீ செண்பகவள்ளி அம்மன் கோவில் நிர்வாகம் முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. திருக்கோவில் சுற்றுப்பகுதி முழுவதும் ட்ரோன் கேமரா மூலம் வீடியோ எடுப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சமூக வலைதளங்களில் ரீல்ஸ் உள்ளிட்ட வீடியோக்களை பதிவு செய்வதும் தடை. மீறுபவர்கள் மீது காவல்துறை மூலம் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை. பக்தர்கள் இதை கடைப்பிடிக்குமாறு கோரப்பட்டுள்ளது.

News March 20, 2026

தூத்துக்குடி: Whatsapp-ல் ஆதார் – CLICK HERE

image

தூத்துக்குடி மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரை பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

தூத்துக்குடி: FREE-யாக புதிய VOTER ID டவுன்லோட்!

image

தூத்துக்குடி மக்களே, உங்க VOTER ID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER ID புத்தம் புதுசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க. முதலில் <>voters.eci.gov.in/login<<>> என்ற இணையதளம் சென்று உங்க VOTER ID எண்னை உள்ளீடு செய்யவும்.பின் மொபைலுக்கு வரும் OTP-ஐ பதிவிட்டால் புதிய கார்டை உடனே பதிவிறக்கம் செய்யலாம். மொபைல் எண் இணைக்கப்பட்டுள்ளதை மட்டும் உறுதி செய்து கொள்ளுங்கள். SHARE பண்ணுங்க!

News March 20, 2026

தூத்துக்குடி: பள்ளி மாணவர்களுக்குள் திடீர் மோதல்

image

தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை அரசு மேல் நிலையில் படித்து வரும் மாணவர்கள் திடீரென பள்ளி வளாகத்தில் வைத்து மோதலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து அங்கு வந்த போலீசார் அவர்களை போலீசின் நிலையத்திற்கு அழைத்து சென்று இருதரப்பையும் அழைத்து விசாரணை நடத்தி மோதலில் ஈடுபடக்கூடாது என அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தனர்.

News March 20, 2026

தூத்துக்குடி: பறக்கும் படை சோதனையில் சிக்கிய துப்பாக்கி

image

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு பகுதியில் பறக்கும் படை அதிகாரிகள் திடீர் சோதனைகளில் ஈடுபட்டனர். அப்போது உதவி ஆய்வாளர் ஜெயக்குமார் தலைமையிலான போலீசார் பணிகளில் இருந்தபோது, மதுரை நோக்கி சென்ற காரில் கை துப்பாக்கி ஒன்று இருந்தது கண்டறியப்பட்டது. உடனடியாக அந்த காரில் இருந்தவர்கள் உரிய ஆவணங்கள் சமர்ப்பித்த நிலையில் துப்பாக்கி உரிமையாளர் வசம் ஒப்படைக்கப்பட்டது.

error: Content is protected !!